Friday, August 29, 2014

Article about Katchatheevu Island


'கச்சத்தீவு' விளையாட்டு: அசத்தும் அரசியல்வாதிகள் - பரிதவிக்கும்  மீனவர்கள்

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28, 2014, 01:34 IST

தேவதாஸ்

கச்சத்தீவு 'அருகே' கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பிடித்து சென்றிருக்கிறது. அம்மீனவர்களை, உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியே, 1974, 1976ல் போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து, கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும்' - இவை தான், 1983 முதல், தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு அடிக்கடி வைக்கப்படும் கோரிக்கைகள்.

தற்போது கூட, தமிழக மீனவர்களின் 62 படகுகள், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 5 படகுகள் சேதமாகி மூழ்கி இருக்கும் நிலையில், இந்திய, இலங்கை அதிகாரிகள் இடையிலான கூட்டம், நாளை புதுடில்லியில் நடைபெற இருக்கிறது. 'இந்த பேச்சு முடிவாவது, பிரச்னையின் ஆணிவேருக்கு சிகிச்சை அளிப்பதாக இருக்க வேண்டும்; வழக்கமான, 'கச்சத்தீவு மீட்பு' எனும், அரசியல் விளையாட்டாக இருந்துவிடக் கூடாது' என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் தமிழக மீனவர்கள்.

கச்சத்தீவு தீர்வல்ல! 

'அடிக்கடி நம் படகுகள் இலங்கை கடற்படையிடம் சிக்கிக் கொள்வதும், நீங்கள் போராடுவதும், நம் அரசு மீட்டெடுப்பதும் தொடர்கதையாகி வருகிறதே! எல்லைப் பகுதியான பாக் ஜலசந்தி பகுதியில், உண்மையில் என்ன தான் நடக்கிறது?' என்ற கேள்வியோடு, 35 நாட்களுக்கு மேலாக, தீவிரமான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும், ராமேஸ்வரம் மீனவர்களை சந்தித்தோம். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த, 1974 ஒப்பந்தத்தில் வகுக்கப்பட்ட, நம் எல்லைக் கோட்டிற்கும், கச்சத்தீவுக்கும் இடையே உள்ள துாரம் வெறும், 2 கடல் மைல் தொலைவு தான். நம் அரசியல்வாதிகள் சொல்வது போல், கச்சத்தீவுக்கு, 'அருகே' நாங்கள் மீன் பிடிப்பதில்லை. கச்சத்தீவையும் தாண்டி, 10 கடல் மைல்கள் வரை செல்கிறோம். இப்போது சிறை பிடிக்கப்பட்டிருக்கும் படகுகள் கூட, அப்படி சென்றவை தான்!

எங்களின் படகுகள், 25 கடல் மைல்களை மிகச் சாதாரணமாக கடக்கும். அவர்களின் இடத்தில் சென்று மீன்பிடிக்கும் போது, அவர்கள் சிறை பிடிக்கின்றனர். இந்த சூழலை மாற்றிக் கொடுங்கள். மீனவனுக்கு எல்லை வகுக்காதீர்கள் என்பது தான், மத்திய, மாநில அரசுகளுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கையே தவிர, கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்பதல்ல.இவ்வாறு மீனவர்கள் கூறுகின்றனர்.

'அப்படியென்றால், கச்சத்தீவை மீட்டெடுத்தாலும் பிரச்னை தீராதா?' என்று கேட்டால், 'நிச்சயம் தீராது. காரணம், மீன்வளம் தேடி நாங்கள் அங்குதான் செல்ல வேண்டி இருக்கும். கச்சத்தீவை சுற்றியுள்ள, 10 முதல் 15 கடல்மைல் தொலைவு வரை (பாரம்பரிய நீர்நிலை) மீன்பிடிக்கும் உரிமைக்காக, நாங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், வெறும், 'கச்சத்தீவு மீட்பு' எப்படி இப்பிரச்னைக்கு தீர்வாகும்?' என்று ஆதங்கத்துடன் கேட்கின்றனர்.

அரசியல் விளையாட்டு

தற்போதைய தமிழக முதல்வரும், முன்னாள் முதல்வரும், கச்சத்தீவை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், 'இரண்டு மனுக்களையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம்' என்று, கடந்த 19ம் தேதி, நீதிபதிகள் தத்து, பாப்தே அமர்வு முடிவு செய்திருக்கும் நிலையில், 'கச்சத்தீவு மீட்பு எங்களின் பிரச்னைக்கு தீர்வாகாது' என்கின்றனர் மீனவர்கள். ஆக, 'கச்சத்தீவு மீட்பு' என்பது, அரசியல் விளையாட்டு தான் என்பது, ஊர்ஜிதமாகி இருக்கிறது.

யாருக்கு சொந்தம்? 

இந்த அரசியல் விளையாட்டின் ஆரம்பப் புள்ளி, 'கச்சத்தீவு யாருக்கு சொந்தம்?' என்ற கேள்வியுடன் தான் துவங்குகிறது. கச்சத்தீவு வரலாறு தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறியதாவது:மதுரை நாயக்க மன்னர்கள் காலத்திற்குப் பின், சேதுபதி அரசர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதியில், கச்சத்தீவும் அடங்கியிருக்கிறது. இதற்கு செப்பேடு ஆதாரம் உள்ளது. 

தொடர்ந்து, 1803வது வருட ஜமீன்தாரி நில உரிமை சட்டப்படி, ஆங்கில ஆட்சிக்கு உட்பட்ட ஜமீன்தார்களாக மாறிய சேதுபதிகளுக்கு, கச்சத்தீவு உரிமையானது. இதை உறுதிப்படுத்த, ஜமீன்தார்களின் பட்டயமான, 'இஸ்திமிரார் சன்னத்' அளிக்கப்பட்டது.கடந்த, டிசம்பர் 4, 1885ல், சேதுபதி அரசரின் மேலாளர் மூலம், கச்சத்தீவு அடங்கிய பகுதிகள், 215 ரூபாய்க்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. 

இந்த விவரம், ராமநாதபுரம், இணைபதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான பதிவு எண் 134. இதோடு, 1913 முதல் 1918 வரை, சென்னை மாகாண அரசு, கச்சத்தீவு சூழ்ந்த பகுதிகளை, சேதுபதி மன்னரிடம் இருந்து, நீண்ட கால குத்தகைக்குப் பெற்று, நம் மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை வழங்கியுள்ளது.ஜமீன் ஒழிப்பு சட்டம் 1949ல் அறிமுகமான பின், தமிழ்நாடு அரசாணை எண், 2093 மூலம், கச்சத்தீவு, புறம்போக்கு நிலமாக அறிவிக்கப்பட்டது. 

இதற்கான சர்வே எண், 1250. இவை எல்லாவற்றையும் விட, நம் அளவைத் துறையினர், 1874, 1895 மற்றும் 1930ம் ஆண்டுகளில், கச்சத்தீவை அளந்து, இந்திய வரைபடத்தில் ஓர் அங்கமாக ஆவணப்படுத்தியுள்ளனர். ஆக, கச்சத்தீவு, எப்போதுமே நமக்கு தான் சொந்தம். ஆனால், '1921ம் ஆண்டு ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது' என்கின்றனர். ஆனால், அந்த ஒப்பந்தத்தை, அப்போதைய பிரிட்டிஷ் அரசு அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

கச்சத்தீவு கொடுக்கப்பட்டதா?

வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சொல்வதெல்லாம், அடிப்படை ஆதாரத்திற்கு வலு சேர்க்கும் துணை ஆதாரங்கள். அடிப்படை ஆதாரம் என்பது, மிகத் துல்லியமானது. கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் சஞ்சய் காந்தி கையில், அந்த ஆதாரம் உள்ளது.

இது பற்றி அவர் கூறியதாவது:எங்கள் நாட்டுப் பகுதியான கச்சத்தீவை, உங்களுக்கு நாங்கள் தருகிறோம்' என், இந்தியா சார்பில், எந்த ஒப்பந்தமும் இதுவரை கையெழுத்தாகவில்லை. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடல் பகுதியில், நீர் எல்லைகளை வரையறை செய்து கொள்வதற்காக மட்டுமே, 1974 மற்றும் 1976களில், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதை, மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய மத்திய அரசு, உறுதி செய்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், அதற்கான ஆதாரத்தை நான் பெற்றுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்டுப்பாடு இல்லை 

கடந்த 1974ம் வருடம், இந்திரா ஆட்சிக் காலத்தில், இலங்கையோடு செய்து கொண்ட பாக் ஜலசந்தி எல்லை தொடர்பான ஒப்பந்தத்தின் பகுதி 5ல், 'கச்சத்தீவு சென்று வர, இலங்கையிடம் எந்த அனுமதியும் பெற வேண்டியதில்லை' என்று, தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது, 'கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதல்ல' என்பதை உறுதிப்படுத்துகிறது. பகுதி 6ல், இரு நாட்டு மீனவர்களும், அதுவரை அனுபவித்து வந்த கடல் உரிமைகளை, தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்களும், இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களும் மீன்பிடிக்கலாம் என்பதும், உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யலாமா? 

கடந்த 1976ம் ஆண்டு, இந்திய - இலங்கை வெளியுறவு செயலர்களால், வங்காள விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா வரைக்குமான, எல்லை நீட்டிப்புக்கு போடப்பட்ட ஒப்பந்தம், 1974 ஒப்பந்தத்தை எவ்வகையிலும் பாதிக்காது என்றாலும், தற்போது வரை, எல்லை தாண்டும் நம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து, கச்சத்தீவு மீட்பு இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீதையின் மைந்தன் கூறியதாவது:கடந்த, 1969ம் ஆண்டு, வியன்னா ஒப்பந்தங்கள் தொடர்பான விதி எண் - 6ன் படி, இரு நாடுகளுக்கிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் விதிகளை, ஒரு நாடு மீறி நடக்குமானால், பாதிக்கப்பட்ட நாடு, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விடலாம். ஆனால், இப்போது வரை, இந்த ஒப்பந்த ரத்து தொடர்பாக, இந்தியா எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதுதான், நம் மீனவர்கள் பிரச்னைக்கு முக்கிய காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

உண்மை பிரச்னை

ஆக, 'தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைக்கு 1974 மற்றும் 1976களில், இந்தியா - இலங்கை இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தம் தான் காரணம்' என்று சொல்கிறது அரசியல். ஆனால், மீனவர்களோ உண்மையான காரணத்தை தோலுரிக்கின்றனர். இது பற்றி, தமிழக கடலோர விசைப்படகு நலச்சங்க மாநில பொதுச் செயலர் என்.ஜே.போஸ் கூறுகையில் ''அரசாங்கத்தால தடை செய்யப்பட்டிருக்கிற இரட்டை மடி வலையை வைச்சும், இழுவலையை வைச்சும், 30 - 40 அடி ஆழத்துக்கு, மீன், முட்டை, குஞ்சுன்னு, எல்லாத்தையும் நல்லா வழிச்சு எடுத்துட்டு போயிட்டா, 50 அடி ஆழ கடல்ல, என்ன வளம் இருக்கும்? இலங்கை பகுதியிலேயும் போய், இதே அட்டூழியத்தை பண்ணினா, அவங்க சும்மா இருப்பாங்களா?'' என்று சீறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், ''ஒரு விசைப்படகு இன்ஜின், 150 குதிரைத்திறன் சக்தி கொண்டதா இருக்கணும்னு அரசாங்கம் சொல்லுது. ஆனா, 250 குதிரைத் திறனுக்கும் மேலே சக்தியுள்ள இன்ஜின் பொருத்தப்பட்ட படகுகள், இங்கே நிறைய இருக்கு. இதை அதிகாரிகள் கண்டுக்கிறது இல்லை. அதேமாதிரி, இழுவலை, இரட்டைமடி வலை பயன்பாட்டையும் அவங்க தடுக்கலை. இன்னைக்கு வேலை நிறுத்தத்தால, சாப்பாட்டுக்கு வழியில்லாம பலபேர் தொழிலை விட்டே போயிட்டாங்க. எங்களோட இந்த மோசமான நிலைமைக்கு மீன்வளத்துறையோட மெத்தனப் போக்கு தான் காரணம்,'' என, பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

தடை கால அட்டூழியம்

கடல்பகுதியில் மீன்வளம் குறைய, விசைப்படகுகளும், இரட்டை மடி மற்றும் இழுவலைகளும், முக்கிய காரணம் என்றாலும், 'இதில் நாட்டுப் படகுகளுக்கும் பங்குண்டு' என்கின்றனர் மீனவர்கள். பாம்பன் நாட்டுப் படகு மீனவர் முன்னேற்ற சங்க தலைவர் அருள் இதுகுறித்து கூறியதாவது:மீன்பிடி தடைகாலத்துல, மத்திய கடல்மீன் வள ஆராய்ச்சி நிலையம், கடல்ல இறால் குஞ்சுகளை விடுது. 

ஆனா, எங்க நாட்டுப் படகு மீனவர்கள்ல சிலர், தள்ளுவலையை வைச்சு, அதை அப்படியே அள்ளிட்டு வந்துடுறாங்க. இப்படி செய்யக் கூடாதுதான்! ஆனா, மோசமான வாழ்வாதாரத்தால் தான், இதுமாதிரியான வேலைகள்ல இவங்க ஈடுபடுறாங்கங்கறதை அரசு புரிஞ்சுக்கணும்.இரட்டை மடி, இழுவலைகளை கடல்ல சுத்த விட்டு, இரண்டு மணி நேரத்துல துாக்கிடலாம். ஆனா, நாங்க போடற வழிவலையை, குறைஞ்சது ஆறு மணி நேரத்துக்குப் பிறகு இழுத்தா தான், பலன் இருக்கும். அதனால தான், எங்க ஆளுகள்ல சிலர், தடை செய்யப்பட்டிருக்கிற சுருக்குமடி வலை பயன்படுத்தி, கடல் வளத்தை சுரண்ட ஆரம்பிச்சிட்டாங்க. இது தப்புதான். இவ்வாறு அவர் கூறினார்.

ஆழ்கடல் மீன்பிடிப்பு

இவை ஒருபுறம் இருக்க, ''தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதில் இருந்து, மீனவர்களால் மீண்டு வர முடியாத சூழலை ஏற்படுத்தியதே அரசு தான்,'' என்கிறார், நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு அறக்கட்டளை தலைவர் அருளானந்தம். 

அவர் கூறியதாவது:கடந்த 1964ல் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்தோ - நார்வேஜியன் திட்டம் மூலமாத்தான், கடல்வளத்தை அழிக்கக் 

கூடிய இந்த இழுவலைகள் எங்களுக்கு அறிமுகமாச்சு. அந்த நேரத்துல, இதை பயன்படுத்த பயிற்சி கொடுத்து, மீன் உற்பத்தியை பெருக்குன அரசாங்கம், இப்போ, இதை பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லுது.இன்னைக்கு விசைப்படகு வைச்சிருக்கிறவங்க, வாரத்துக்கு மூணுநாள் தான் கடலுக்கு போறாங்க. நாட்டுப்படகு வைச்சிருக்கிறவங்க, நாலு நாள் போறாங்க. நம்ம மீனவர்கள், நல்ல மாலுமிகள். அவங்களை இப்படி, சோம்பேறியாக்க கூடாது. கடல் வளத்தையும் பெருக்கி, அதை வைச்சு அன்னிய செலாவணி ஈட்ட, நம்ம மீனவர்களை நல்லா பயன்படுத்திக்கலாம். அதனால, 'கச்சத்தீவை மீட்கணும்'னு குரல் கொடுக்கறதை குறைச்சுட்டு, எல்லை கட்டுப்பாட்டை நீக்க முயற்சி பண்ணணும். இருதரப்பு மீனவர்கள் நடத்துற, பேச்சு வார்த்தை தீர்மானங்களை, முறையா நடைமுறைப்படுத்தணும். அப்படியே, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான வசதிகளை, நம்ம மீனவர்களுக்கு விரைவா செஞ்சு கொடுக்கணும்.இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்களின் விருப்பம்

அன்றாட பிழைப்புக்காக, எல்லை கடந்து அல்லல்படும் நம் மீனவர்களின் விருப்பம், கச்சத்தீவு அல்ல; இழந்த உரிமைகள். இது தொடர்பாக, அவர்கள் கூறியதாவது:கடந்த 1974ல் போடப்பட்ட ஒப்பந்தம் அறியாத நம் பகுதி மீன்கள், நம் இரட்டை மடி, இழுவலையில் இருந்து தப்பித்துக் கொள்ள, எல்லை தாண்டி, இலங்கை கடற்பகுதிக்குள் தஞ்சம் அடைய வாய்ப்பு அதிகம். இந்த சூழல், இலங்கை மீன்களுக்கும் உண்டு. அதனால், எல்லை கடந்து அலையும் மீன்களை விரட்டும் மீனவனுக்கு, எல்லை வகுத்தது தவறு என்பதை, அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். 

கச்சத்தீவை மீட்பதால், எங்கள்கண்ணீர் குறையப் போவதில்லை என்பதை உணர்ந்து, 1974 ஒப்பந்தம் சொல்லும், எல்லை தாண்டும் சுதந்திரத்தை, தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். முடிந்தால், எல்லைகளை நீக்கி, 1983 ஆகஸ்ட் 13க்கு (முதல் மீனவன், துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்த நாள்) முன் இருந்த நிலையை கொண்டு வர வேண்டும்.

அதற்கு முன்பாக, இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில், நம் இரட்டை மடி, இழுவலைகளை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மட்டும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். அதற்கான வசதிகளை, விரைவாக செய்து தர வேண்டும். வங்காள விரிகுடா பக்கம், நம் விசைப்படகுகள் திரும்பினாலே, இப்பிரச்னை பாதி தீர்ந்து விடும். நம் கடல்பகுதியிலும், மீன்வளம் பெருகி விடும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஆக, நாளை நடைபெற இருக்கும் கூட்டத்தில், மீனவர்களின் இந்த விருப்பம் எதிரொலித்தால் மட்டுமே, கூட்டத்தின் நோக்கமான, 'நிரந்தர தீர்வு திட்டம்' உருவாகும்; உயிர் பெறும்.

சபாஷ், சரியான கேள்வி!

சமீபத்தில், மீனவர் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், ''தமிழக மக்களின் உணர்வும், நலனும் சார்ந்த பிரச்னையான இதனை, உடனுக்குடன் கையாள்வதற்கு, மத்திய வெளியுறவுத்துறையில் தனி செயல் அதிகாரியை, அரசு செயலர் அந்தஸ்தில் நியமிக்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்னையில், இனியும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதுதான்,'' என்று தெரிவித்திருந்தார். ''இதையெல்லாம், ஆட்சியில் இருந்தபோது, அவர் ஏன் சொல்லவில்லை? காங்கிரஸ் அரசு ஏன் செய்யவில்லை?'' என்கின்றனர் மீனவர்கள்.

மீனவர்கள் விரும்பும் கச்சத்தீவு

'வலைகளை உலர்த்த, ஓய்வெடுக்க, எங்கள் மீனவர்களுக்கு கச்சத்தீவு வேண்டும்' என்பது, நம் அரசியல்வாதிகளின் கோரிக்கை. ஆனால் மீனவர்களோ, ''1952களிலேயே, 'டன்லப்' என்று சொல்லப்பட்ட நுால் வலை, வழக்கொழிந்து விட்டது. தற்போது, நாங்கள் பயன்படுத்துவது 'நைலான்' வலை. இதை உலர்த்த வேண்டியதில்லை'' என்கிறார்கள். 

அதேபோல், ''வாரத்திற்கு அதிகபட்சம் நான்கு நாட்கள் கடலுக்கு செல்லும் நாங்கள், கச்சத்தீவிற்கு சென்று ஓய்வெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களை பொறுத்தவரை, இயற்கை சீற்ற காலங்களில், கரை ஒதுங்க மட்டுமே கச்சத்தீவு பயன்படும்'' என்கின்றனர்.

பேச்சுவார்த்தை முறித்த இழுவை

''ஜனவரி 27, 2014, சென்னை பேச்சில், ஆண்டிற்கு 70 கடல் நாட்கள் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கும், இழுவலையை 3 ஆண்டிற்குள் நிறுத்தி விடுவதற்கும், இலங்கை தரப்பிடம் அனுமதி கோரப்பட்டது. 'இன்றிலிருந்து ஒரு மாதம், எங்கள் கடல்பகுதிக்குள் நீங்கள் வரக்கூடாது' என, இலங்கை தரப்பு வலியுறுத்தியது. 

ஆனால்,வாழ்வாதாரத்திற்காக, நம் மீனவர்கள், அதை மீறினர். இதனால், மே 12ல், கொழும்புவில் நடந்த பேச்சுவார்த்தையில், 'உடனடியாக நீங்கள் இழுவலையை தடை செய்ய வேண்டும்' என, இலங்கை தரப்பு வலியுறுத்தியது. பேச்சுவார்த்தை முறிந்து போனது. நாளைய கூட்டத்திற்கு பிறகாவது, அடுத்தக்கட்ட மீனவர் பேச்சுவார்த்தைக்கான வழிகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்'' 

- தேவதாஸ், ராமேஸ்வர மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்

Sources: http://goo.gl/VTF0pN

Also view the related links


1. Wiki English Article: http://goo.gl/4d7Zbr


2. Wiki Tamil Article: http://goo.gl/Edrztu


3. Katchatheevu Retrival Movement: http://goo.gl/ERfxp9


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Disclaimer


Collection of important and burning Topics, News from all Dailies, Fortnight Magazines, etc., in order to highlight its importance to the viewers and also to keep it as ready reckoner by them so as to access it quickly from the concerned Sources which we quote them at the bottom of each Posts so as to extend our gratitude towards the Author of that Posts in their releases.Followers

Search our Blog here

Google
 


News Feed from Various DailiesTHE HINDU - News Update

Expressbuzz - Columnists

Expressbuzz - Tamil Nadu

தினமணி: மெய்யாலுமா...? அரசியல் கிசுகிசு

Dinamani - Headlines

Dinamani - Politics

Dinamani - Tamil Nadu

Dinamani - Pondicherry

Dinamani - Cuddalore

Labels

Pondicherry (135) Tamil Nadu (130) ARTICLE (103) Editorial (91) aiadmk (63) jayalalithaa (59) dinamani (55) dmk (53) Karunanidhi (33) india (30) Ariankuppam (29) chief minister of tamil nadu (27) the hindu (27) railway (26) Congress (23) Dinamalar (22) Supreme Court (22) THE HINDU (22) southeren railway (22) Nuclear (21) chennai (21) US (20) wikipedia (20) Rain (19) frontline (19) PMK (18) Pratiba (18) President (18) karnataka (18) Education (17) Train (17) Elections (16) sri lanka (16) 2013 (15) 2012 (14) Madras High Court (14) 123 Agreement (13) Road (13) bangalore (13) election commission (13) nuke deal (13) Advocates (12) BEHS (12) Bridge (12) Facebook (12) Google (12) NPT (12) Politics (12) Youtube (12) 2010 (11) Interview (11) Legislative Assembly (11) Traffic (11) Video (11) abdul kalam (11) Accidents (10) Parliament (10) Private Schools (10) Tamil Eelam (10) police (10) BJP (9) Cuddalore District (9) Death (9) Environment (9) 2014 (8) BG Conversion (8) Ban (8) Website (8) water (8) water resources (8) Communist Parties (7) Examination (7) Flight (7) Government (7) Mayiladudurai (7) Pakistan (7) River (7) Schools (7) The New Indian Express (7) UNO (7) USA (7) Villupuram (7) ground water (7) prime minister (7) Andhra Pradesh (6) Beach (6) Car (6) Cauvery (6) Children (6) Coimbatore (6) Court (6) Cricket (6) Jaya TV (6) Lok Sabha (6) Mobile Phones (6) Strike (6) cellphones (6) 10th Exam (5) Dinakaran (5) High Court (5) MGR (5) MLAs (5) Municipality (5) One Year Performance (5) Online (5) Petrol (5) Plastic (5) Political Party (5) Progress Card (5) RBI (5) Sethusamudram (5) Sports (5) Sun TV (5) banks (5) lawyers (5) madras (5) russia (5) temple (5) CEC (4) Corporation (4) Credit Card (4) DMDK (4) Foods (4) Health (4) International (4) MDMK (4) Makkal TV (4) Mumbai (4) Nuclear standoff (4) PIB (4) Prices (4) SSLC (4) Sethu (4) Surgery (4) TIPS (4) TV (4) Tamil (4) Time Table (4) Vaiko (4) World Water Day (4) chief minister (4) computer (4) kerala (4) 2011 (3) 3rd World War (3) Actor (3) Adulterated items (3) Agriculture (3) Airport (3) Anti-Corruption (3) BSNL (3) Bandh (3) Bragadeeswara Temple (3) Britain (3) Cabinet Minister (3) Civil Supplies Department (3) Constitution (3) Cr.P.C. (3) Daily Thanthi (3) Dasara festival (3) EVMs (3) Garbage (3) Gazette (3) Helmets (3) Hospital (3) I-Day (3) IPC (3) IT (3) Ice (3) Kalaignar TV (3) Kiran Bedi (3) Kollidam (3) Lieutenant Governor (3) MPs (3) Marina Beach (3) Medical (3) Microsoft (3) Mini Flight (3) Mysore (3) Panruti (3) Photos (3) Politicians (3) Pollution (3) Pranab Mukherjee (3) Public Exam (3) RTI Act (3) Raj TV (3) Rajiv Gandhi (3) Schoolboy (3) Smoking (3) Sonia Gandhi (3) South Africa (3) Speaker (3) Tanjore (3) Teacher (3) Telangana (3) Telephone (3) UNPA (3) Vijayakant (3) Yahoo (3) cbi (3) delhi (3) gujarat (3) mssrf (3) newspaper (3) planet (3) salem division (3) times of india (3) 1000 Rupee Note (2) 12th Exam (2) ATM (2) Aadhar Card (2) Advertisements (2) AirTel (2) Assembly Meeting (2) BESCOM (2) Birth Certificate (2) Botanical Garden (2) Boycott (2) Bus Stand (2) CCTVs (2) CJI (2) CPI (2) CPM (2) Cadres (2) Cancer (2) Christians (2) Church (2) Cigarettes (2) Compensation (2) Complaint (2) Cyclone (2) DTH (2) Daily Telegraph (2) Dams (2) Death Anniversary (2) Debates (2) Debit Card (2) Driving (2) ECR (2) Earth (2) Electricity (2) Eye (2) Fire (2) Floods (2) Fonseka (2) Foreign Nations (2) Foreigners (2) Four Track Road (2) Full Moon (2) Genocide (2) Global Warming (2) Govt. Staffs (2) Green (2) Guru (2) Heart (2) Heritage buildings (2) Highways (2) Hogenakkal (2) Home Minister (2) Home Ministry (2) Hyderabad (2) ICICI (2) IT Capital (2) Independence (2) Judges (2) Katchatheevu Island (2) Kerala High Court (2) LORRY (2) LPG Gas Connection (2) Law College (2) Legislative Assembly Complex (2) London (2) Losses (2) M.K.Stalin (2) Maalaimalar (2) Mahe (2) Mahinda Rajapaksa (2) Medicine (2) Mega TV (2) Moon (2) Motor Vehicles (2) Municipal waste (2) Musharraf (2) NASA (2) NDTV (2) Nagapattinam (2) Narendra Modi (2) National Highways (2) Nepal (2) Notifications (2) Obama (2) Pamban (2) Parking Place (2) Passport (2) Pazha Nedumaaran (2) Phones (2) Portfolios (2) Pratibha Patil (2) Private TV Channels (2) RBI Governor (2) RTO (2) Railway Minister (2) Rajya Sabha (2) Ramanathapuram (2) Ramdoss (2) Rameswaram (2) Ration Card (2) Rename (2) Reservation (2) Rivers Inter-link (2) Rowdies (2) Royal Cable Vision (2) Rule of Law (2) S.K.Upadhyay (2) SAARC (2) Sachin (2) Salary (2) Satellite (2) School Van (2) Sea Level Rising (2) Search Engine (2) Somnath Chatterjee (2) Speech (2) Subramanian Swamy (2) Sumangali Cable Vision (2) T.R.Baalu (2) TRAI (2) Tamil Murasu (2) Tax issues (2) Tea (2) Telecom (2) Theft (2) Tibet (2) Tiruchi (2) Tiruchirapalli (2) Tirupur District (2) Tobacco (2) Tourism (2) Veeranam Lake (2) Vellore (2) Vellore Jail (2) Vice President (2) Vigilance (2) Voters' List (2) Woman (2) World Heritage (2) World Tour (2) bangaladesh (2) eTicket (2) iTicket (2) kizhur (2) madurai (2) minister (2) monuments (2) o.paneerselvam (2) security (2) states (2) technology (2) television (2) vkc (2) கச்சத்தீவு (2) 100 feet Road (1) 10th Schedule (1) 11-storey Building (1) 16th World Editors' Forum (1) 1996 (1) 2001 (1) 2007 (1) 2008 (1) 2009 (1) 60 Years (1) 62nd World Newspaper Congress (1) 75 years of history (1) A.P.Hithendran (1) AC Bus (1) AIIMS (1) Abbreviations (1) Act (1) Actor Vijay (1) Adichanallur (1) Advertisement (1) Advocate Durai (1) Aerobridge (1) Agitation (1) Agricultural Lands (1) Ahmedabad blasts (1) Alert (1) Alive (1) Ambassador (1) Anbumani Ramadoss (1) Animation (1) Anna (1) Announcement (1) Annual Day (1) Anti-conversion (1) Apollo Hospitals (1) Application Form (1) Applications (1) Archaeology (1) Army (1) Art.370 (1) Asif Ali Zardari (1) Assam (1) Assassin (1) Assassination (1) Attestation (1) Auditor (1) Aurobindo Ashram (1) Australia (1) BCCI (1) BPL (1) Baby (1) Badminton (1) Baggage missing (1) Bahour (1) Bankruptcy (1) Bar Council of India (1) Barricades (1) Battery (1) Beggers (1) Bhubaneswar Express (1) Bihar (1) Bike (1) Bill (1) Birth centenary (1) Black Film (1) Blogger News Network (1) Body (1) Book Fair (1) Booking Rules (1) Bribe (1) Bricks (1) British (1) Browser (1) Budget Session (1) Burnt (1) Buses (1) Business Line (1) Busisness (1) CAG (1) CEO (1) CMDA (1) CMRP (1) CMs Conference (1) CNN IBN (1) Calendar (1) Car Festival (1) Car goes up in flames (1) Cash Transaction Tax (1) Cataract (1) Cauvery Tribunal Award (1) Census (1) Chairman (1) Chalukyas (1) Change of Mobile (1) Charge Sheet (1) Chennai (South) Forum (1) Chennai Cricket Club (1) Chennai Metro Rail Project (1) Chidambaram (1) Chief Secretary (1) Child Pornography (1) China (1) Chinna Veerampattinam Beach (1) Chiranjeevi (1) Christmas (1) Chunnambar River (1) Cinema (1) Circular (1) Civil Judge (1) Civil Liability for Nuclear Damage Bill (1) Clash (1) Climate Change (1) Clonning (1) Closing (1) Cochin (1) Cock (1) Collector (1) Colleges (1) Colonial Rule (1) Comedian (1) Commune Panchayat (1) Companies (1) Compulsory military service (1) Consumer (1) Consumer goods (1) Contempt (1) Conversion (1) Convicts (1) Cooum (1) Copenhagen (1) Copenhagen Accord (1) Copyright (1) Courses (1) Daily Pioneer (1) Dayanidhi Maran (1) Defamation (1) Delhi High Court (1) Demise (1) Demolition (1) Derogatory remarks (1) Development Index for States (1) Devotional (1) Dhoti (1) Diamond Jubilee (1) Dina Thanthi (1) Dinamani Newspaper (1) Director (1) Diseases (1) Disney TV (1) Disqualification (1) Disrespect (1) Do's and Dont's (1) Doctors (1) Don Bosco School (1) Double Decker (1) Download (1) Dowry (1) Drainage (1) Dress Code (1) Drowned (1) Drunken (1) Dust bin (1) ECI (1) EU (1) EVKS Elangovan (1) Earth quake (1) Ebola virus disease (1) Egg (1) Egmore (1) Elocution Competition (1) Emergency (1) Employment (1) Engineer (1) English (1) Extension (1) FC (1) FDI (1) FII (1) FPR Waste (1) Fake Identiy Cards (1) Fakes (1) Family Name (1) Farm Lands (1) Fast Food Stalls (1) Fatal injury (1) Faulty Printing (1) Federal Police (1) Fees (1) Fellowship Award (1) Fever (1) Finance Minister (1) Finger Prints (1) First Name (1) Fishermen (1) Flower Show (1) Foreign Ministers (1) Former Minister (1) Fort (1) Fort St. George (1) Forum Mall (1) Free of Cost (1) French Diviner (1) Fuel (1) Funeral ceremony (1) GSLV (1) Galaxy (1) Ganesha Pandals (1) Gangaikondacholapuram (1) Garib Rath (1) Gazetted Officers (1) German Architects (1) Germany (1) Gingee Fort (1) Given Name (1) Gmail (1) Goa (1) Goods Train (1) Goondas Act (1) Goons (1) Gopalsamy (1) Governor (1) Greetings (1) Guardian Newspapers Limited (1) Guru Peyarchi Palan (1) Guruvalaya Sports Coaching Centre (1) Guwahati (1) HSRP Number Plates (1) HSc (1) Half-ticket (1) Hawkers (1) Helicopter (1) Hen (1) Hindus (1) Hindustan Times (1) Home Page (1) Hotel (1) Hotmail (1) Howrah Superfast Express (1) Humanism (1) Humanity (1) Hyderabad Twin Blasts (1) IAS (1) IATR (1) IBSA (1) ICC (1) ICC World Cup 2007 (1) ICJ (1) IMCHRC (1) IMDT Act (1) IRCTC (1) IRDAI (1) ISRO (1) IT Act (1) Identiy Cards (1) Images (1) Independence Day (1) India Guinness records (1) Indian Kanoon (1) Indian Rupee (1) Inflation (1) Insects (1) Insurance premium (1) Internet (1) Investment (1) Investors (1) Iran (1) Israel (1) JIPMER (1) Jammu & Kashmir (1) Jammu & Kashmir High Court (1) Jamsetji Tata National Virtual Academy (1) Japan (1) Job (1) Journey (1) Judicial Staffs (1) Judiciary (1) Jupiter (1) Justice Dalveer Bhandari (1) KAMBAR (1) Kachatheevu (1) Kachchathivu island (1) Kalaimagal Vizha (1) Kallanai (1) Kalrayan Hills (1) Kamal Nath (1) Kamarajar (1) Kamban Kalai Arangam (1) Kandasamy (1) Kapil Sibal (1) Karaikal-Nagoor (1) Kazhugumalai (1) Keerthiga (1) Kerla (1) Kids (1) Kingfisher (1) Kolar Gold Field (1) Kovaithambi (1) L.K.advani (1) LTTE (1) Lake (1) Lalu (1) Landline Phones (1) Levy (1) Licenses (1) Life Jackets (1) Lord Shiva (1) Lung disease (1) M-Sand (1) M.K.Alagiri (1) M.S.Gill (1) MCI (1) MET (1) MLC (1) MRP (1) MSO (1) MV Act (1) MYLAI (1) MYLAPORE (1) Madikrishnapuram (1) Madurai Bench (1) Madurai Corporation (1) Madurai Ramu (1) Mahabalipuram (1) Maharashtra (1) Mailam (1) Malaysian Airlines (1) Malladi Krishnarao (1) Mamata Banerjee (1) Manapet Govt. School (1) Mangalore (1) Mangalore Express (1) Manirathnam (1) Marriages (1) Mars (1) Matriculation (1) Matrimony (1) Mayor (1) Meets (1) Melodies Songs (1) Metro Train (1) Mettur Dam (1) Microsoft Office 2010 (1) Middle Name (1) Mississippi (1) Misuse of pro-women law (1) Modi (1) Monarchy (1) Monetary (1) Moot Court (1) Mosquitoes (1) Moulivakkam (1) Mukumbu (1) Mullaiperiyar Dam (1) Mullaperiyar Dam (1) Mumbai Dadar Chalukya Express (1) Murali (1) Murder case (1) Murugan (1) Muscle power (1) Muslims (1) Mysore Palace (1) N.Ram (1) NATO (1) NGO (1) NH (1) NHAI (1) NSK alias N.S.Krishnan (1) Nalini (1) Namathu MGR (1) Namma Ooru Seythi (1) Nanauk (1) Nandhi (1) Narayana Murthy (1) National Crime Records Bureau (1) National Security Act (1) Natural (1) Natwar Singh (1) Naxalites (1) Nehru Street (1) Nelson (1) New Delhi Superfast Express (1) New Year (1) Night Hours (1) Nostradamus (1) November 1 (1) Numbers (1) ODF (1) ODI (1) OPS (1) Ocean (1) Offers (1) Office Bearers (1) Old Prison (1) Old Songs (1) Olympics (1) Open Defecation Free (1) Open Page (1) Organ Transplant Operation (1) Ottavio Quattrocchi (1) Oussudu Lake (1) Overbridge (1) P.B.Sreenivas (1) P.Chidambaram (1) PBS (1) PIN Number (1) PMC (1) PONTEX (1) PRTC (1) PSLV (1) PTI (1) Paintings (1) Palakkad (1) Palani (1) Pallineliyanur (1) Pamphlets (1) Parents (1) Patta (1) Pennayar River (1) People's President (1) Perarivalan (1) Philosopher (1) Phone tapping (1) Physical Map (1) Pillaiyarkuppam (1) Pillayarkuppam (1) Planning Commission (1) Playback singer (1) Poisonous (1) Pollution Under Control Certificate (1) Pondicherry Code (1) Ponlait Milk Society (1) Poongothai (1) Porur Lake (1) Post Office (1) Postal Savings (1) Poverty (1) Power Generation (1) Prakash Karat (1) Prison (1) Privacy (1) Private Clinic (1) Priyanka (1) Proclaimed Offender (1) Property Tax (1) Prosecution (1) Prospectus (1) Protest (1) Public Meetings (1) Public Servant (1) Puli Devan (1) Pumpkin (1) Punjab (1) Puthiya Thalaimurai TV (1) Puzzle (1) Questions (1) RJD (1) RTE Act (1) Radiation (1) Raghuram Rajan (1) Railway Bridge (1) Raja (1) Raja Kannappan (1) Rajasulochana (1) Ramarajan (1) Real Name (1) Recovery Agents (1) Reddiarpalayam (1) Rejoinder (1) Release (1) Religion (1) Remand (1) Renovation (1) Reply in Tamil (1) Republic Day (1) Reshuffle (1) Results (1) Retirement (1) Riots (1) River Sand (1) Robo Sand (1) Rs.10 Food (1) Rule 417-A (1) S.Ve.Sekar (1) SBI (1) SEBI (1) SEZs (1) SP (1) SRC (1) Sachar Commission (1) Salem Railway Division (1) Sand quarries (1) Sand quarry issue (1) Saneeswarar (1) Sarkaria Commission (1) Sathankulam (1) Saturn (1) Saudia Arabia (1) Save Tamil (1) Scandal (1) Schedule (1) Sea Route (1) Self-attestation (1) Sex (1) Sharad Pawar (1) Sharekhan (1) Shilma Railway (1) Shimoga District (1) Ship (1) Shopping Malls (1) Shuttlecock (1) Signal (1) Sikh Temple (1) Singer (1) Sivanthi Adityan (1) Skulls (1) Smart Card (1) Social Network (1) Software (1) Sonia (1) Sony (1) Sornavur Anaicut (1) Spectrum (1) SpiceJet (1) Sree Nivas Tower (1) Sri Krishna Report (1) Sri Rangam (1) Sriharikota (1) State Consumer Disputes Redressal Commission (1) Statue (1) Stlain (1) Sub Registrar (1) Subramania Bharati (1) Summer Vacation (1) Sun (1) Sun Halo (1) Superfast Train (1) Surname (1) Survey Department (1) Suspension (1) Swine flu (1) Symbol (1) T.Kritinan (1) TATA (1) TATA Sumo (1) TNEB (1) TNPSC (1) Taluk (1) Tamil Actor (1) Tariff hiked (1) Terrace House Gardening (1) Thane (1) Thanjavur (1) Thenkinnam (1) Thirukkural (1) Thirumurai (1) Thirunallar (1) Thothukudi (1) Time-Table (1) Tindivanam (1) Tirunallar (1) Tirupati Train (1) Titanium (1) Toll-free number (1) Tornado (1) Transfer Certificate (1) Transferred Ticket (1) Transport Department (1) Trees (1) Tuticorin (1) Twitter (1) Two Youths (1) Two-wheeler (1) UK (1) UNESCO (1) UPA (1) Uchimedu (1) Union Council of Ministers (1) Universe (1) University (1) Unlimited Night Calls (1) Unmanned Level Crossing (1) Unreserved Compartments (1) Uppalam (1) V.Narayanasamy (1) VCK (1) VETA (1) VIP (1) VOC (1) Vacuum Cleaner (1) Vaigai (1) Vamba Keerapalayam (1) Vedharanyam (1) Vehicles (1) Video-conferencing (1) Vidhana Soudha (1) Village (1) Villianur (1) Visa (1) Volley Ball Cup (1) WHO (1) WTC (1) WTO (1) War (1) Wedding (1) Whales (1) Women Police (1) Women's Right and Status (1) Women’s Reservation Bill (1) World Bank (1) World Records (1) World Tamil Conference (1) Yanam (1) Yesvantpur Garib Rath (1) argentina (1) atomic energy (1) azhagiri (1) bifurcation (1) bofors pay off case (1) buddhist (1) channels (1) child abuse (1) cyber crime (1) cyber security (1) e-Library (1) forensic laboratory (1) google sky (1) hyde act (1) i (1) india today (1) indira Gandhi (1) indus valley civilisation (1) information (1) ipod (1) jains (1) katnataka (1) koil (1) kudankulam (1) lectronic Voting Machines (1) mamalla (1) money lender (1) moscow (1) mumbai riot (1) rangasamy (1) salem (1) sculptor (1) telefilm (1) trucks (1) wordpress (1) அரியாங்குப்பம் (1) ஆதிச்சநல்லூர் (1) இதயக்கோவில் (1) எபோலா தீநுண்ம நோய் (1) கல்வராயன் மலைகள் (1) கல்வி சாதனையாளர் பட்டயம் (1) குடுவை ஆறு (1) சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபா (1) சிவராந்தகம் (1) சுழல் காற்று (1) தமிழர் உணவகம் (1) நுரையீரல் நோய் (1) பயிர்களை பராமரிப்பது எப்படி? (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)