Friday, August 29, 2014

Article about Katchatheevu Island






'கச்சத்தீவு' விளையாட்டு: அசத்தும் அரசியல்வாதிகள் - பரிதவிக்கும்  மீனவர்கள்

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28, 2014, 01:34 IST

தேவதாஸ்

கச்சத்தீவு 'அருகே' கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பிடித்து சென்றிருக்கிறது. அம்மீனவர்களை, உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியே, 1974, 1976ல் போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து, கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும்' - இவை தான், 1983 முதல், தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு அடிக்கடி வைக்கப்படும் கோரிக்கைகள்.

தற்போது கூட, தமிழக மீனவர்களின் 62 படகுகள், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 5 படகுகள் சேதமாகி மூழ்கி இருக்கும் நிலையில், இந்திய, இலங்கை அதிகாரிகள் இடையிலான கூட்டம், நாளை புதுடில்லியில் நடைபெற இருக்கிறது. 'இந்த பேச்சு முடிவாவது, பிரச்னையின் ஆணிவேருக்கு சிகிச்சை அளிப்பதாக இருக்க வேண்டும்; வழக்கமான, 'கச்சத்தீவு மீட்பு' எனும், அரசியல் விளையாட்டாக இருந்துவிடக் கூடாது' என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் தமிழக மீனவர்கள்.

கச்சத்தீவு தீர்வல்ல! 

'அடிக்கடி நம் படகுகள் இலங்கை கடற்படையிடம் சிக்கிக் கொள்வதும், நீங்கள் போராடுவதும், நம் அரசு மீட்டெடுப்பதும் தொடர்கதையாகி வருகிறதே! எல்லைப் பகுதியான பாக் ஜலசந்தி பகுதியில், உண்மையில் என்ன தான் நடக்கிறது?' என்ற கேள்வியோடு, 35 நாட்களுக்கு மேலாக, தீவிரமான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும், ராமேஸ்வரம் மீனவர்களை சந்தித்தோம். 

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த, 1974 ஒப்பந்தத்தில் வகுக்கப்பட்ட, நம் எல்லைக் கோட்டிற்கும், கச்சத்தீவுக்கும் இடையே உள்ள துாரம் வெறும், 2 கடல் மைல் தொலைவு தான். நம் அரசியல்வாதிகள் சொல்வது போல், கச்சத்தீவுக்கு, 'அருகே' நாங்கள் மீன் பிடிப்பதில்லை. கச்சத்தீவையும் தாண்டி, 10 கடல் மைல்கள் வரை செல்கிறோம். இப்போது சிறை பிடிக்கப்பட்டிருக்கும் படகுகள் கூட, அப்படி சென்றவை தான்!

எங்களின் படகுகள், 25 கடல் மைல்களை மிகச் சாதாரணமாக கடக்கும். அவர்களின் இடத்தில் சென்று மீன்பிடிக்கும் போது, அவர்கள் சிறை பிடிக்கின்றனர். இந்த சூழலை மாற்றிக் கொடுங்கள். மீனவனுக்கு எல்லை வகுக்காதீர்கள் என்பது தான், மத்திய, மாநில அரசுகளுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கையே தவிர, கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்பதல்ல.இவ்வாறு மீனவர்கள் கூறுகின்றனர்.

'அப்படியென்றால், கச்சத்தீவை மீட்டெடுத்தாலும் பிரச்னை தீராதா?' என்று கேட்டால், 'நிச்சயம் தீராது. காரணம், மீன்வளம் தேடி நாங்கள் அங்குதான் செல்ல வேண்டி இருக்கும். கச்சத்தீவை சுற்றியுள்ள, 10 முதல் 15 கடல்மைல் தொலைவு வரை (பாரம்பரிய நீர்நிலை) மீன்பிடிக்கும் உரிமைக்காக, நாங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், வெறும், 'கச்சத்தீவு மீட்பு' எப்படி இப்பிரச்னைக்கு தீர்வாகும்?' என்று ஆதங்கத்துடன் கேட்கின்றனர்.

அரசியல் விளையாட்டு

தற்போதைய தமிழக முதல்வரும், முன்னாள் முதல்வரும், கச்சத்தீவை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், 'இரண்டு மனுக்களையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம்' என்று, கடந்த 19ம் தேதி, நீதிபதிகள் தத்து, பாப்தே அமர்வு முடிவு செய்திருக்கும் நிலையில், 'கச்சத்தீவு மீட்பு எங்களின் பிரச்னைக்கு தீர்வாகாது' என்கின்றனர் மீனவர்கள். ஆக, 'கச்சத்தீவு மீட்பு' என்பது, அரசியல் விளையாட்டு தான் என்பது, ஊர்ஜிதமாகி இருக்கிறது.

யாருக்கு சொந்தம்? 

இந்த அரசியல் விளையாட்டின் ஆரம்பப் புள்ளி, 'கச்சத்தீவு யாருக்கு சொந்தம்?' என்ற கேள்வியுடன் தான் துவங்குகிறது. கச்சத்தீவு வரலாறு தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறியதாவது:மதுரை நாயக்க மன்னர்கள் காலத்திற்குப் பின், சேதுபதி அரசர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதியில், கச்சத்தீவும் அடங்கியிருக்கிறது. இதற்கு செப்பேடு ஆதாரம் உள்ளது. 

தொடர்ந்து, 1803வது வருட ஜமீன்தாரி நில உரிமை சட்டப்படி, ஆங்கில ஆட்சிக்கு உட்பட்ட ஜமீன்தார்களாக மாறிய சேதுபதிகளுக்கு, கச்சத்தீவு உரிமையானது. இதை உறுதிப்படுத்த, ஜமீன்தார்களின் பட்டயமான, 'இஸ்திமிரார் சன்னத்' அளிக்கப்பட்டது.கடந்த, டிசம்பர் 4, 1885ல், சேதுபதி அரசரின் மேலாளர் மூலம், கச்சத்தீவு அடங்கிய பகுதிகள், 215 ரூபாய்க்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. 

இந்த விவரம், ராமநாதபுரம், இணைபதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான பதிவு எண் 134. இதோடு, 1913 முதல் 1918 வரை, சென்னை மாகாண அரசு, கச்சத்தீவு சூழ்ந்த பகுதிகளை, சேதுபதி மன்னரிடம் இருந்து, நீண்ட கால குத்தகைக்குப் பெற்று, நம் மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை வழங்கியுள்ளது.ஜமீன் ஒழிப்பு சட்டம் 1949ல் அறிமுகமான பின், தமிழ்நாடு அரசாணை எண், 2093 மூலம், கச்சத்தீவு, புறம்போக்கு நிலமாக அறிவிக்கப்பட்டது. 

இதற்கான சர்வே எண், 1250. இவை எல்லாவற்றையும் விட, நம் அளவைத் துறையினர், 1874, 1895 மற்றும் 1930ம் ஆண்டுகளில், கச்சத்தீவை அளந்து, இந்திய வரைபடத்தில் ஓர் அங்கமாக ஆவணப்படுத்தியுள்ளனர். ஆக, கச்சத்தீவு, எப்போதுமே நமக்கு தான் சொந்தம். ஆனால், '1921ம் ஆண்டு ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது' என்கின்றனர். ஆனால், அந்த ஒப்பந்தத்தை, அப்போதைய பிரிட்டிஷ் அரசு அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

கச்சத்தீவு கொடுக்கப்பட்டதா?

வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சொல்வதெல்லாம், அடிப்படை ஆதாரத்திற்கு வலு சேர்க்கும் துணை ஆதாரங்கள். அடிப்படை ஆதாரம் என்பது, மிகத் துல்லியமானது. கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் சஞ்சய் காந்தி கையில், அந்த ஆதாரம் உள்ளது.

இது பற்றி அவர் கூறியதாவது:எங்கள் நாட்டுப் பகுதியான கச்சத்தீவை, உங்களுக்கு நாங்கள் தருகிறோம்' என், இந்தியா சார்பில், எந்த ஒப்பந்தமும் இதுவரை கையெழுத்தாகவில்லை. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடல் பகுதியில், நீர் எல்லைகளை வரையறை செய்து கொள்வதற்காக மட்டுமே, 1974 மற்றும் 1976களில், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதை, மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய மத்திய அரசு, உறுதி செய்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், அதற்கான ஆதாரத்தை நான் பெற்றுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்டுப்பாடு இல்லை 

கடந்த 1974ம் வருடம், இந்திரா ஆட்சிக் காலத்தில், இலங்கையோடு செய்து கொண்ட பாக் ஜலசந்தி எல்லை தொடர்பான ஒப்பந்தத்தின் பகுதி 5ல், 'கச்சத்தீவு சென்று வர, இலங்கையிடம் எந்த அனுமதியும் பெற வேண்டியதில்லை' என்று, தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது, 'கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதல்ல' என்பதை உறுதிப்படுத்துகிறது. பகுதி 6ல், இரு நாட்டு மீனவர்களும், அதுவரை அனுபவித்து வந்த கடல் உரிமைகளை, தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்களும், இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களும் மீன்பிடிக்கலாம் என்பதும், உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யலாமா? 

கடந்த 1976ம் ஆண்டு, இந்திய - இலங்கை வெளியுறவு செயலர்களால், வங்காள விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா வரைக்குமான, எல்லை நீட்டிப்புக்கு போடப்பட்ட ஒப்பந்தம், 1974 ஒப்பந்தத்தை எவ்வகையிலும் பாதிக்காது என்றாலும், தற்போது வரை, எல்லை தாண்டும் நம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து, கச்சத்தீவு மீட்பு இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீதையின் மைந்தன் கூறியதாவது:கடந்த, 1969ம் ஆண்டு, வியன்னா ஒப்பந்தங்கள் தொடர்பான விதி எண் - 6ன் படி, இரு நாடுகளுக்கிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் விதிகளை, ஒரு நாடு மீறி நடக்குமானால், பாதிக்கப்பட்ட நாடு, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விடலாம். ஆனால், இப்போது வரை, இந்த ஒப்பந்த ரத்து தொடர்பாக, இந்தியா எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதுதான், நம் மீனவர்கள் பிரச்னைக்கு முக்கிய காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

உண்மை பிரச்னை

ஆக, 'தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைக்கு 1974 மற்றும் 1976களில், இந்தியா - இலங்கை இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தம் தான் காரணம்' என்று சொல்கிறது அரசியல். ஆனால், மீனவர்களோ உண்மையான காரணத்தை தோலுரிக்கின்றனர். இது பற்றி, தமிழக கடலோர விசைப்படகு நலச்சங்க மாநில பொதுச் செயலர் என்.ஜே.போஸ் கூறுகையில் ''அரசாங்கத்தால தடை செய்யப்பட்டிருக்கிற இரட்டை மடி வலையை வைச்சும், இழுவலையை வைச்சும், 30 - 40 அடி ஆழத்துக்கு, மீன், முட்டை, குஞ்சுன்னு, எல்லாத்தையும் நல்லா வழிச்சு எடுத்துட்டு போயிட்டா, 50 அடி ஆழ கடல்ல, என்ன வளம் இருக்கும்? இலங்கை பகுதியிலேயும் போய், இதே அட்டூழியத்தை பண்ணினா, அவங்க சும்மா இருப்பாங்களா?'' என்று சீறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், ''ஒரு விசைப்படகு இன்ஜின், 150 குதிரைத்திறன் சக்தி கொண்டதா இருக்கணும்னு அரசாங்கம் சொல்லுது. ஆனா, 250 குதிரைத் திறனுக்கும் மேலே சக்தியுள்ள இன்ஜின் பொருத்தப்பட்ட படகுகள், இங்கே நிறைய இருக்கு. இதை அதிகாரிகள் கண்டுக்கிறது இல்லை. அதேமாதிரி, இழுவலை, இரட்டைமடி வலை பயன்பாட்டையும் அவங்க தடுக்கலை. இன்னைக்கு வேலை நிறுத்தத்தால, சாப்பாட்டுக்கு வழியில்லாம பலபேர் தொழிலை விட்டே போயிட்டாங்க. எங்களோட இந்த மோசமான நிலைமைக்கு மீன்வளத்துறையோட மெத்தனப் போக்கு தான் காரணம்,'' என, பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

தடை கால அட்டூழியம்

கடல்பகுதியில் மீன்வளம் குறைய, விசைப்படகுகளும், இரட்டை மடி மற்றும் இழுவலைகளும், முக்கிய காரணம் என்றாலும், 'இதில் நாட்டுப் படகுகளுக்கும் பங்குண்டு' என்கின்றனர் மீனவர்கள். பாம்பன் நாட்டுப் படகு மீனவர் முன்னேற்ற சங்க தலைவர் அருள் இதுகுறித்து கூறியதாவது:மீன்பிடி தடைகாலத்துல, மத்திய கடல்மீன் வள ஆராய்ச்சி நிலையம், கடல்ல இறால் குஞ்சுகளை விடுது. 

ஆனா, எங்க நாட்டுப் படகு மீனவர்கள்ல சிலர், தள்ளுவலையை வைச்சு, அதை அப்படியே அள்ளிட்டு வந்துடுறாங்க. இப்படி செய்யக் கூடாதுதான்! ஆனா, மோசமான வாழ்வாதாரத்தால் தான், இதுமாதிரியான வேலைகள்ல இவங்க ஈடுபடுறாங்கங்கறதை அரசு புரிஞ்சுக்கணும்.இரட்டை மடி, இழுவலைகளை கடல்ல சுத்த விட்டு, இரண்டு மணி நேரத்துல துாக்கிடலாம். ஆனா, நாங்க போடற வழிவலையை, குறைஞ்சது ஆறு மணி நேரத்துக்குப் பிறகு இழுத்தா தான், பலன் இருக்கும். அதனால தான், எங்க ஆளுகள்ல சிலர், தடை செய்யப்பட்டிருக்கிற சுருக்குமடி வலை பயன்படுத்தி, கடல் வளத்தை சுரண்ட ஆரம்பிச்சிட்டாங்க. இது தப்புதான். இவ்வாறு அவர் கூறினார்.

ஆழ்கடல் மீன்பிடிப்பு

இவை ஒருபுறம் இருக்க, ''தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதில் இருந்து, மீனவர்களால் மீண்டு வர முடியாத சூழலை ஏற்படுத்தியதே அரசு தான்,'' என்கிறார், நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு அறக்கட்டளை தலைவர் அருளானந்தம். 

அவர் கூறியதாவது:கடந்த 1964ல் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்தோ - நார்வேஜியன் திட்டம் மூலமாத்தான், கடல்வளத்தை அழிக்கக் 

கூடிய இந்த இழுவலைகள் எங்களுக்கு அறிமுகமாச்சு. அந்த நேரத்துல, இதை பயன்படுத்த பயிற்சி கொடுத்து, மீன் உற்பத்தியை பெருக்குன அரசாங்கம், இப்போ, இதை பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லுது.இன்னைக்கு விசைப்படகு வைச்சிருக்கிறவங்க, வாரத்துக்கு மூணுநாள் தான் கடலுக்கு போறாங்க. நாட்டுப்படகு வைச்சிருக்கிறவங்க, நாலு நாள் போறாங்க. நம்ம மீனவர்கள், நல்ல மாலுமிகள். அவங்களை இப்படி, சோம்பேறியாக்க கூடாது. கடல் வளத்தையும் பெருக்கி, அதை வைச்சு அன்னிய செலாவணி ஈட்ட, நம்ம மீனவர்களை நல்லா பயன்படுத்திக்கலாம். அதனால, 'கச்சத்தீவை மீட்கணும்'னு குரல் கொடுக்கறதை குறைச்சுட்டு, எல்லை கட்டுப்பாட்டை நீக்க முயற்சி பண்ணணும். இருதரப்பு மீனவர்கள் நடத்துற, பேச்சு வார்த்தை தீர்மானங்களை, முறையா நடைமுறைப்படுத்தணும். அப்படியே, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான வசதிகளை, நம்ம மீனவர்களுக்கு விரைவா செஞ்சு கொடுக்கணும்.இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்களின் விருப்பம்

அன்றாட பிழைப்புக்காக, எல்லை கடந்து அல்லல்படும் நம் மீனவர்களின் விருப்பம், கச்சத்தீவு அல்ல; இழந்த உரிமைகள். இது தொடர்பாக, அவர்கள் கூறியதாவது:கடந்த 1974ல் போடப்பட்ட ஒப்பந்தம் அறியாத நம் பகுதி மீன்கள், நம் இரட்டை மடி, இழுவலையில் இருந்து தப்பித்துக் கொள்ள, எல்லை தாண்டி, இலங்கை கடற்பகுதிக்குள் தஞ்சம் அடைய வாய்ப்பு அதிகம். இந்த சூழல், இலங்கை மீன்களுக்கும் உண்டு. அதனால், எல்லை கடந்து அலையும் மீன்களை விரட்டும் மீனவனுக்கு, எல்லை வகுத்தது தவறு என்பதை, அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். 

கச்சத்தீவை மீட்பதால், எங்கள்கண்ணீர் குறையப் போவதில்லை என்பதை உணர்ந்து, 1974 ஒப்பந்தம் சொல்லும், எல்லை தாண்டும் சுதந்திரத்தை, தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். முடிந்தால், எல்லைகளை நீக்கி, 1983 ஆகஸ்ட் 13க்கு (முதல் மீனவன், துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்த நாள்) முன் இருந்த நிலையை கொண்டு வர வேண்டும்.

அதற்கு முன்பாக, இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில், நம் இரட்டை மடி, இழுவலைகளை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மட்டும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும். அதற்கான வசதிகளை, விரைவாக செய்து தர வேண்டும். வங்காள விரிகுடா பக்கம், நம் விசைப்படகுகள் திரும்பினாலே, இப்பிரச்னை பாதி தீர்ந்து விடும். நம் கடல்பகுதியிலும், மீன்வளம் பெருகி விடும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஆக, நாளை நடைபெற இருக்கும் கூட்டத்தில், மீனவர்களின் இந்த விருப்பம் எதிரொலித்தால் மட்டுமே, கூட்டத்தின் நோக்கமான, 'நிரந்தர தீர்வு திட்டம்' உருவாகும்; உயிர் பெறும்.

சபாஷ், சரியான கேள்வி!

சமீபத்தில், மீனவர் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், ''தமிழக மக்களின் உணர்வும், நலனும் சார்ந்த பிரச்னையான இதனை, உடனுக்குடன் கையாள்வதற்கு, மத்திய வெளியுறவுத்துறையில் தனி செயல் அதிகாரியை, அரசு செயலர் அந்தஸ்தில் நியமிக்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்னையில், இனியும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதுதான்,'' என்று தெரிவித்திருந்தார். ''இதையெல்லாம், ஆட்சியில் இருந்தபோது, அவர் ஏன் சொல்லவில்லை? காங்கிரஸ் அரசு ஏன் செய்யவில்லை?'' என்கின்றனர் மீனவர்கள்.

மீனவர்கள் விரும்பும் கச்சத்தீவு

'வலைகளை உலர்த்த, ஓய்வெடுக்க, எங்கள் மீனவர்களுக்கு கச்சத்தீவு வேண்டும்' என்பது, நம் அரசியல்வாதிகளின் கோரிக்கை. ஆனால் மீனவர்களோ, ''1952களிலேயே, 'டன்லப்' என்று சொல்லப்பட்ட நுால் வலை, வழக்கொழிந்து விட்டது. தற்போது, நாங்கள் பயன்படுத்துவது 'நைலான்' வலை. இதை உலர்த்த வேண்டியதில்லை'' என்கிறார்கள். 

அதேபோல், ''வாரத்திற்கு அதிகபட்சம் நான்கு நாட்கள் கடலுக்கு செல்லும் நாங்கள், கச்சத்தீவிற்கு சென்று ஓய்வெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களை பொறுத்தவரை, இயற்கை சீற்ற காலங்களில், கரை ஒதுங்க மட்டுமே கச்சத்தீவு பயன்படும்'' என்கின்றனர்.

பேச்சுவார்த்தை முறித்த இழுவை

''ஜனவரி 27, 2014, சென்னை பேச்சில், ஆண்டிற்கு 70 கடல் நாட்கள் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கும், இழுவலையை 3 ஆண்டிற்குள் நிறுத்தி விடுவதற்கும், இலங்கை தரப்பிடம் அனுமதி கோரப்பட்டது. 'இன்றிலிருந்து ஒரு மாதம், எங்கள் கடல்பகுதிக்குள் நீங்கள் வரக்கூடாது' என, இலங்கை தரப்பு வலியுறுத்தியது. 

ஆனால்,வாழ்வாதாரத்திற்காக, நம் மீனவர்கள், அதை மீறினர். இதனால், மே 12ல், கொழும்புவில் நடந்த பேச்சுவார்த்தையில், 'உடனடியாக நீங்கள் இழுவலையை தடை செய்ய வேண்டும்' என, இலங்கை தரப்பு வலியுறுத்தியது. பேச்சுவார்த்தை முறிந்து போனது. நாளைய கூட்டத்திற்கு பிறகாவது, அடுத்தக்கட்ட மீனவர் பேச்சுவார்த்தைக்கான வழிகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்'' 

- தேவதாஸ், ராமேஸ்வர மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்

Sources: http://goo.gl/VTF0pN

Also view the related links


1. Wiki English Article: http://goo.gl/4d7Zbr


2. Wiki Tamil Article: http://goo.gl/Edrztu


3. Katchatheevu Retrival Movement: http://goo.gl/ERfxp9


Saturday, August 16, 2014

CM: Nov.1 as Puducherry’s Independence Day

Courtesy_
Dinamalar ePaper

Also read the related stories

நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாள்

First Published: 16 August 2014 04:18 AM IST

புதுச்சேரியின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் வேண்டுகோளின்படி நவம்பர் 1ஆம் தேதியை "புதுவையின் விடுதலை நாளாக' முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தேசிய கொடியேற்றிய பின் முதல்வர் ரங்கசாமி ஆற்றிய சுதந்திர தின உரை: ஆகஸ்ட் 16ஆம் தேதியை புதுச்சேரி மாநிலத்தின் ஆட்சிமாற்ற தினமாக கொண்டாடுவதோடு, புதுவை விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப வரலாற்றுச் சான்றுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தோம்.

அதன் பரிந்துரையின் படி இந்த ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவித்து, அன்றைய நாளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. துணைநிலை ஆளுநர் தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி புதுவை அரசின் வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.

ரேஷன் பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ். தகவல்

மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஜிபிஆர்எஸ் (பொது அலைவரிசைத் தகவல் சேவை) இணைக்கப்பட்ட விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை அடையாளம் உறுதிபடுத்தப்பட்டப்பின் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவது உறுதி செய்யப்படும். மேலும் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் வரத்து குறித்த தகவல் விரும்பிய பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டு வெளிப்படையான தன்மை கடைபிடிக்கப்படும்.

சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு புதிய மின்மாற்றிகள் அமைக்கவும், 10 மின்மாற்றிகளின் திறனை அதிகரிக்கவும், 7.5 கி.மீ. உயர் மின் அழுத்தப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறையை நவீன மயமாக்கும் பொருட்டு 30 மீட்டர் உயரம் வரை செல்லும் தீத்தடுப்பு வாகனம் வாங்கப்படும். காலாப்பட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி மையம், காரைக்காலில் சுவை மற்றும் நறுமண மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். 12 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 532 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்பட்டது.

கடற்கரை காவல் நிலையம்

புதுச்சேரி, மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் மூன்று கடற்கரைக் காவல் நிலையங்கள் அமைக்க மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது. தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் புதிய படகு தங்குதளம் அமைக்கப்படும். அரியாங்குப்பம் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் மணல் தூர் வாரும் பணிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.24.45 கோடி மதிப்பீட்டில் அரும்பார்த்தபுரம் ரயில்வே கிராசிங் அருகே மேம்பால இணைப்புச் சாலைப் பணி, உப்பனாறு கால்வாய் மீது ரூ.43.15 கோடியில் மேம்பாலம் கட்டப்படும்.

காமராஜர் மணி மண்டபம்

கருவடிக்குப்பத்தில் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் கட்டும் பணி ரூ.25 கோடி மதிப்பீட்டில் நடைபெறும். புதுவை நகரம், புறநகர்ப் பகுதியில் ரூ.307.46 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகத் திட்டம், காரைக்காலில் ரூ.161.43 கோடி மதிப்பீட்டில் குடிநீர்த் திட்டப் பணிகள் துவங்கப்படும்.

ஜப்பான் அரசாங்க உதவியுடன் ரூ.1,510 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டம், சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்படும். புதுவையில் உள்ளது போல் காரைக்கால் திருநள்ளாறில் துணை மண்டல அறிவியல் மையம், கோளரங்கம் கட்டப்படும்.

50 புதிய பேருந்துகள்

போக்குவரத்தை அபிவிருத்தி செய்ய புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் மூலம் 50 புதிய பேருந்துகள் வாங்கப்படும். புதுவையிலிருந்து கடலூருக்கு புதிய இருப்புப் பாதை அமைக்கும் திட்டம் துரிதப்படுத்தப்படும்.

கிராமப் புற இளைஞர்களுக்காக வில்லியனூரில் இலவச ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும் என்றார் ரங்கசாமி.


Also read the related stories

Puducherry's I-Day

PUDUCHERRY, August 16, 2014

STAFF REPORTER

Chief Minister N.Rangasamy declared November 1 as Puducherry's Independence Day.

Along with India's Independence Day on August 15, 'De jure transfer day' is being celebrated here on August 16 every year as mark of the French colony becoming a Union Territory of India in 1962.

Chief Minister Mr. Rangasamy said the government had decided to celebrate November 1 as Puducherry's Independence Day acceding to requests by freedom fighters.

This was on the basis of a recommendation submitted by a committee constituted by the government to look into the demand by freedom fighters.


Also read the related stories

ரூ.1,510 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்

பதிவு செய்த நாள்: 16 ஆக 2014 03:17

புதுச்சேரி: நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவிக்கப்படுவதுடன், ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ரூ. 1,510 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட உள்ளது என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றி வைத்து பேசியதாவது:


புதுச்சேரியில் விவசாய பயிர்களுக்கு முழுமையான காப்பீடு அளிக்க, மத்திய அரசு நிதியுதவியுடன் தேசிய பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் பணி வேளாண் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கடைகளில் பொருட்கள் வரத்து குறித்து எஸ்.எம்.எஸ்.,மூலம் நுகர்வோர் அறிந்துகொள்ளும் ஒளிவு மறைவற்ற தன்மை கடைப்பிடிக்கப்படும்.

மத்திய அரசின் குறு சிறு நடுத்தர தொழிற்சாலைகள் அமைச்சக நிதியுதவியுடன் காலாப்பட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி மையம், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் சுவை மற்றும் நறுமண மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.

காரைக்காலில் 25 ஏக்கர் பரப்பளவில் ஊரக பொருளாதார மண்டலம் துவங்கப்பட உள்ளது. புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியங்களில் மூன்று கடற்கரை காவல் நிலையங்கள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் தற்போதுள்ள தடுப்பு மதிற் சுவருக்கு எதிரில் புதிய படகு தங்குதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

ரூ. 24.45 கோடியில் அரும்பார்த்தபுரம் ரயில்வே கிராசிங் அருகே மேம்பால இணைப்பு சாலை, ரூ. 43.15 கோடியில் காமராஜர் சாலை, பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து மறைமலையடிகள் சாலையில் உள்ள நியூடோன் தியேட்டர் வரை உப்பனாறு கால்வாய் மீது மேம்பாலம் கட்டப்பட உள்ளது. ரூ. 21.20 கோடியில் மேற்கு புறவழிச்சாலை முதற்கட்டமாக போடப்பட உள்ளது. ரூ. 23 கோடி செலவில் காமராஜர் மணிமண்டபம் கட்டுமான பணி மீண்டும் துவங்கப்பட உள்ளது.

புதுச்சேரி நகர மற்றும் புறநகர் பகுதியில் ஒருங்கிணைந்த குடிநீர் வினியோக திட்டம் ரூ. 307.46 கோடியிலும், காரைக்காலில் ரூ. ௧௬௧.௪௩ கோடியில் குடிநீர் திட்டமும் துவக்கப்படுகிறது. மேலும்,ரூ. 15.50 கோடியில் நெல்லித்தோப்பு, ராஜா நகர், உருளையன்பேட்டை தொகுதி சுற்றுப்புறங்களில் குடிநீர் வினியோக அமைப்பு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ரூ. 1,510- கோடியில் பாதாள சாக்கடை திட்டம், சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசனம், குடிநீர் வினியோக பிரிவுகளில் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. புதுச்சேரியிலிருந்து கடலுாருக்கு ரயில்பாதை அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும்.

கிராமப்புற இளைஞர்கள் பயனடையும் வகையில் வில்லியனுாரில் இலவச ஓட்டுனர் பயிற்சி பள்ளி விரைவில் துவங்கப்பட உள்ளது. 

இந்தாண்டு முதல், நவம்பர் 1ம் தேதி புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவித்து, அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்.


Thursday, August 14, 2014

Union Minister Nirmala Sitharaman replies in Tamil in Lok Sabha



Parliament Question Hour Debate is available at: http://goo.gl/xXQ8VH

Also read the related stories

லோக்சபாவில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்...கூத்து:'அம்மா' புகழ் பாடாமல் எதுவும் பேசுவதில்லை

பதிவு செய்த நாள்: ஆக 09, 2014 02:17

- நமது டில்லி நிருபர் -

பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில், தாங்கள் வாசிக்கும் எந்தவொரு உரையிலும், முடிந்த வரையில் அதிக முறை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிடுவதிலும், புகழ்வதிலும், அ.தி.மு.க., - எம்.பி.,க்களிடையே போட்டி காணப்படுகிறது. இதனால், தமிழக சட்டசபையைப் போல,பார்லிமென்டிலும் முதல்வர் பெயர் அடிக்கடி கேட்கிறது.

லோக்சபாவில் இந்த முறை, மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள, அ.தி.மு.க.,வில், மூன்று பேர் மட்டுமே பழைய எம்.பி.,க்கள்; மற்ற அனைவரும் புதுமுகங்கள். இவர்கள் அனைவருக்கும், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் தான், முதல் பார்லிமென்ட் அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

இந்த கூட்டத்தொடரில், பட்ஜெட், மானிய கோரிக்கைகள், நிதி மசோதா போன்றவற்றின் மீதான விவாதங்கள் நடைபெறும் போதும், பூஜ்ய நேரத்தின் போதும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், தாங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உரைகளை, சபையில் வாசிக்கின்றனர்.

உரை வாசிப்பின் போதெல்லாம், அடிக்கடி, தமிழக முதல்வரை, இவர்கள் பாராட்ட, வானளாவ புகழ தவறுவதில்லை. குறிப்பாக, 'புரட்சித் தலைவி' என்றும், 'அம்மா' என்றும் மறக்காமல் குறிப்பிடுகின்றனர்.'இந்த சபையில் எங்களுக்கு பேசும் வாய்ப்பை வழங்கிய அம்மாவுக்கு நன்றி' என்று பேசிய பிறகே, விவாதங்கள் குறித்து பேச ஆரம்பிக்கின்றனர். எந்த விஷயம் குறித்து, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பேசினாலும், 'அம்மா'வும், 'புரட்சித் தலைவி'யும் எப்படியாவது இணைந்து விடும்.

இதெல்லாம், தமிழகத்தில், தமிழக சட்டசபையில் மிகவும் பழகிப் போன விஷயம். ஆனால், டில்லியில், பல மாநிலங்களில் இருந்து வந்துள்ள எம்.பி.,க்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் செயல் மிகவும் புதுமையாக இருக்கிறது.

பார்லிமென்டில் பேசும் போது, தமிழக கட்சிகளான, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், தங்கள் கட்சித் தலைவர்களின் பெயர்களை குறிப்பிடுவது, முந்தைய ஆட்சிகளின் போதும் நடந்துள்ளது. ஆனால், இந்த தடவை, புகழ்ந்து பேசுவதும், பாராட்டுவதும் அதிகமாகி விட்டதால், வட மாநில எம்.பி.,க்கள், ஒன்றும் புரியாமல் விழி பிதுங்குகின்றனர்.

தமிழில் பதிலளித்த நிர்மலா

லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் கடைசி நிமிடத்தில், தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அ.தி.மு.க., - எம்.பி., ராதாகிருஷ்ணன் எழுந்து, துணை கேள்வி ஒன்றை கேட்டார்.

கேள்வி நேரத்தை, ஒரு நொடி கூட, சபாநாயகர் நீட்டிக்க மாட்டார் என்பதால், வழக்கமாக, எம்.பி.,க்கள், சுருக்கமாகக் கேட்டு, அமைச்சரிடம் பதில் பெறுவதில் தீவிரமாக இருப்பர். ஆனால், அந்த எம்.பி., தனக்கு கிடைத்த கடைசி ஒரு நிமிடத்திலும், அரை நிமிடம், 'அம்மா'வை புகழ்ந்த பிறகு தான், கேள்வியே கேட்டார்.

''சீன பட்டாசுகள் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படுவதால், சிவகாசி பட்டாசுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?'' என, அவர் கேட்டார்.

உடனே, அமைச்சர், நிர்மலா சீதாராமன் எழுந்து, சபாநாயகர், சுமித்ரா மகாஜனிடம், ''நான் தமிழில் பதிலளிக்க அனுமதிக்க வேண்டும்,'' என்றார்; சபாநாயகரும் சம்மதித்தார்.உடனே, "புரட்சித் தலைவி அவர்கள் எழுதியிருந்த கடிதம், பிரதமருக்கு கிடைத்துள்ளது; உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்," என, தமிழில் பதிலளித்து அமர்ந்தார்.

அமைச்சர் நிர்மலாவே, புரட்சித் தலைவி என கூறி விட்டதை கேட்ட, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். இதை, நிதியமைச்சர் அருண் ஜெட்லி பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தார்.

அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த ராகுல், என்ன நினைத்தாரோ தெரியவில்லை; தானும் மேஜையை ஓங்கி ஓங்கி தட்டி, அ.தி.மு.க.,வினரை உற்சாகப்படுத்தினார்.

பாட்டு பாடி அசத்தல்:இரு தினங்களுக்கு முன், பங்கு பரிவர்த்தனை திருத்த மசோதா மீது, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த, ஒரு எம்.பி., பேச ஆரம்பித்தார். எழுதி வைத்த உரையை பேசத் துவங்கும் முன், பாட்டு பாட ஆரம்பித்து விட்டார்.

'அம்மா என்றழைக்காத உயிரில்லையே... அம்மாவை வணங்காது உயர்வில்லையே...' என்று பாடிவிட்டு, 'அம்மா இருக்கும் (தமிழக முதல்வர்) திசையை நோக்கி வணங்கி, என் உரையைத் துவங்குகிறேன்' என்று கூறி, குனிந்து வணங்கிய பிறகே வாசித்தார். அதைப் பார்த்து சிலர் சிரித்தனர்; வட மாநில எம்.பி.,க்கள் விழித்தனர்.

அதே எம்.பி.,க்கு அடுத்த நாள், மீண்டும் கேள்வி நேரத்தின் போது, மீண்டும் பேச வாய்ப்பு வந்தது. அவர், தன் கேள்வியை ஆரம்பிக்கும் முன், 'புரட்சித் தலைவி... தமிழ் தாய்... அம்மாவுக்கு வணக்கம்' என்றார்.அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. 'இந்தி தாய் என புகழப்படும், மதிப்பிற்குரிய சபாநாயகருக்கும் நமஸ்காரம்' என்றார்.

தொடர்ந்து, 'தாயில்லாமல் நானில்லை; தானே எவரும் பிறந்ததில்லை; எனக்கொரு தாய் இருக்கின்றாள்; என்றும் என்னை காக்கின்றாள்' என, தமிழ் சினிமா பாட்டை பாடினார்.அர்த்தம் தெரிந்த சிலர் சிரித்தனர்; பலரும் விழித்தனர்.

தெரிந்தது இரண்டு வார்த்தை

தமிழக முதல்வரை, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் புகழ்வது, பெரும்பாலும் தமிழிலேயே உள்ளதால், தமிழ் மொழி தெரியாத, வட மாநில மற்றும் பிற மாநில எம்.பி.,க்களுக்கு, இவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதே தெரிவதில்லை.குறிப்பாக, புரட்சித்தலைவி மற்றும் அம்மா ஆகிய இரு வார்த்தைகளை, பிற மாநில எம்.பி.,க்கள் அறிந்து வைத்துள்ளனர். பிற வார்த்தைகள் அவர்களுக்கு தெரியாததால், குழம்பிப் போகின்றனர்.

தங்கம் தென்னரசு தி.மு.க., - எம்.எல்.ஏ.,

ஒரு கட்சியின் தலைவரை புகழ்வது, அக்கட்சியினரின் உரிமை. அதே நேரத்தில், புகழ்வதால் புதிய பதவிகள் கிடைக்கின்றன. தலைமையும், புகழ்ச்சியை விரும்புகிறது. இதை, இரு தரப்பினரும் புரிந்து வைத்திருப்பதால், சட்டசபையில் இருந்து, லோக்சபாவுக்கு அது நீட்சி அடைந்துள்ளது.

நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க., துணை கொள்கை பரப்பு செயலர்

பார்லிமென்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அ.தி.மு.க.,வுக்கு, 48 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால், அவர்கள் பேச்சை, இப்படி சொல்கின்றனர். எந்த எம்.பி.,யும் வலிந்து புகழவில்லை. பிரச்னைகளின் அடிப்படையில் பேசும்போது, தமிழக முதல்வரை குறிப்பிடாமல் பேச முடியாது.

அழகிரி காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,

ஒரு தலைவரை பாராட்டுவது என்பது வேறு, துதிபாடுவது என்பது வேறு. அ.தி.மு.க.,வினர் செய்வது துதி பாடுவது. ஆளும் கட்சியின் குறைபாடுகளில், இதுவும் ஒன்று. இதை, முதல்வர் நினைத்தால் தான் தடுக்க முடியும். அதை, ஜெயலலிதா செய்வார் என, எதிர்பார்க்கிறேன்.


Nirmala Sitharaman replies in Tamil in Lok Sabha

PTI | Aug 8, 2014, 01.04PM IST

NEW DELHI: Perhaps for the first time in the Lok Sabha, a minister spoke in Tamil to respond to a question put in Tamil. 

Minister of state for commerce Nirmala Sitharaman, who hails from Tamil Nadu and is married into a Telugu family in Andhra Pradesh, sought the chair's permission to reply in Tamil to a supplementary posed by AIADMK member T Radhakrishnan. 

The member raised the the matter of Chinese crackers being brought illegally into India harming the domestic industry in Sivakasi in Tamil Nadu that virtually caters to the entire demand of firecrackers in the country. 

He referred to Tamil Nadu chief minister Jayalalithaa's letters to the Centre in this regard and wanted to know what action has been taken. 

"The letter sent by revolutionary leader amma (an honorific used by AIADMK cadre for Jayalalithaa) has been received. Necessary action will be taken in response," she said as members of the treasury benches thumped the desks. 

Finance minister Arun Jaitley, who was occupying a front row seat, was seen smiling. 


மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கு தமிழில் பதில் அளித்த நிர்மலா சீதாராமன்

பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 08, 3:18 PM IST

புதுடெல்லி, ஆக 8: மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எந்த மொழியில் கேள்விகள் கேட்கப்பட்டாலும், மந்திரிகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பதில் அளிப்பார்கள்.

ஆனால், இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது விருதநகர் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன் சீன பட்டாசுகள் குறித்து தமிழில் கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த வர்த்தக துறை இணை மந்திரி நிர்மலா சீத்தாராமன், சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் தமிழில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். அதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜான் ஒப்புதல் அளித்தார். தமிழில் பதில் கூற அனுமதிற்காக சபாநாயகருக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

பின்னர் அ.தி.மு.எம்.பி. கேள்விக்கு தமிழில் பதில் அளித்த நிர்மலா சீதாராமன் 'மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடிக்கு, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது. அக்கடிதத்தின் மீது உரிமையான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

மக்களவையில் தமிழில் கேட்ட கேள்விக்கு தமிழிலேயே பதில் கிடைத்ததால் அ.தி.மு.க.எம்பிக்கள் மகிச்சிக்குள்ளாயினர். மக்களவையின் முன் வரிசையில் அமர்ந்திருந்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நிர்மலா சீதாராமன் தமிழில் பேசியதை கேட்டு புன் சிரிப்புடன் காணப்பட்டார்.


அ.தி.மு.க. எம்.பி.யின் கேள்விக்கு பாராளுமன்றத்தில் தமிழில் பதில் அளித்த பெண் மத்திய மந்திரி

பதிவு செய்த நாள்: சனி, ஆகஸ்ட் 09,2014, 3:04 AM IST

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.யின் கேள்விக்கு மத்திய மந்திரி தமிழில் பதில் அளித்தார்.

விருதுநகர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. டி.ராதாகிருஷ்ணன் நேற்று கேள்வி நேரத்தின்போது துணைக்கேள்வி ஒன்றை எழுப்பினார்.

என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

அப்போது அவர் கூறுகையில், சீனாவில் இருந்து சட்டவிரோதமாக வெடிகள் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது நமது நாட்டில் தயாரிக்கப்படும் சிவகாசி வெடிகளின் விற்பனையை பெரிதும் பாதிப்பதாக உள்ளது. ஏனென்றால் சிவகாசியில் தயாரிக்கப்படும் வெடிகள்தான் நாட்டின் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்கிறது.

இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுகோரி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

புரட்சி தலைவி அம்மா

அப்போது, வர்த்தக மற்றும் தொழில் துறை ராஜாங்க மந்திரி(தனிப்பொறுப்பு) நிர்மலா சீதாராமன் இந்த கேள்விக்கு, தான் தமிழில் பதில் அளிப்பதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சபாநாயகர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அவர் தமிழில் பேசினார்.

அப்போது நிர்மலா சீதாராமன் கூறும்போது, ''இது தொடர்பாக புரட்சித் தலைவி அம்மா(ஜெயலலிதா) மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றது. இப்பிரச்சினை குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

ஆளும் கட்சி எம்.பி.க்கள் பாராட்டு

மத்திய மந்திரி அழகு தமிழில் பேசியதைக் கேட்ட ஆளும் கட்சி எம்.பி.க்கள் மேஜையை தடதடவென தட்டி அவரது பேச்சுக்கு பாராட்டு தெரிவித்தனர். முன்வரிசையில் அமர்ந்திருந்த மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன் தமிழில் பேசியதைக் கேட்டு புன்னகையை வெளிப்படுத்தினார்.

(மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள திருச்சி என்பதும், அவர் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு குடும்பத்தில் திருமணம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

தடை விதிக்கப்பட்டு உள்ளது

தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேசும்போது, ஏராளமான சீனப் பொருட்கள் 3-வது நாட்டின் வழியாக இந்தியாவுக்கு வருகிறது. இந்த இறக்குமதியின் மூலம் உள்நாட்டு சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து சர்வதேச அடையாள எண்கள் இல்லாத செல்போன்களை இறக்குமதி செய்வதற்கும், இதேபோல் சிலவகையான பால் மற்றும் பால் பொருட்களும், தரமற்ற விளையாட்டு பொம்மைகள் இறக்குமதி செய்யவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது' என்று தெரிவித்தார்.


உறுப்பினர் கேள்விக்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர்: மக்களவையில் முதல் நிகழ்வு

Published: August 8, 2014 14:48 IST

மக்களவையில் முதல் முறையாக தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கும், மத்திய அமைச்சர் ஒருவர் தமிழிலேயே பதிலளித்துள்ளார்.

மக்களவையில் அதிமுக உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தமிழில் எழுப்பிய துணைக் கேள்விக்கு மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழில் பதிலளிக்க சபாநாயகர் அனுமதியை கோரினார். அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தமிழிலேயே பதிலளித்தார்.

அதிமுக எம்.பி. ராதாகிருஷ்ணன், சீன பட்டாசுகள் ஊடுருவலால் தமிழகத்தில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறினார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி, அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வினவினார்.

இதற்கு தமிழில் பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், "புரட்சித் தலைவி அம்மா அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பதிலளித்தபோது, அதை அருகில் அமர்ந்து உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி புன்முறுவலுடன் இருந்தார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பூர்விகம் தமிழகம் என்பது நினைவுகூரத்தக்கது.


மக்களவையில் தமிழில் பதில் அளித்த நிர்மலா சீதாராமன்

First Published: 09 August 2014 04:46 AM IST

மக்களவையில் அரிய நிகழ்வாக, உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் ஒருவர் தமிழில் பதிலளித்தார்.

தமிழ்நாட்டில் பிறந்து ஆந்திரத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துள்ள மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது அதிமுக எம்.பி. டி.ராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு தமிழில் பதிலளித்தார்.

அவையில் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ""இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பாக விற்கப்படும் சீன பட்டாசுகளால், சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். இவ்விவகாரத்தில் மத்திய அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது?'' என்று கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ""புரட்சித் தலைவி "அம்மா' எழுதிய கடிதம் கிடைத்தது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்'' என்று தமிழில் பதிலளித்தார்.

அமைச்சர் பதிலைக் கேட்டதும், அதிமுக எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Wish you Happy Independence Day

 photo India-240-animated-flag-gifs.gif
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pic Sources: http://goo.gl/3hn1DB

Thursday, August 7, 2014

Ebola virus disease spreading in Tamil Nadu

எபோலா வெடிகுண்டு: எதிர்கொள்ளத் தமிழகம் தயாரா?

Published: August 7, 2014 07:49 IST

சுதாகர் கஸ்தூரி

எபோலா வைரஸ்

ஏதோ ஆப்பிரிக்க நாட்டில் பரவும் நோய் என்று அலட்சியமாக நாம் இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கும் கட்டுரை.

எபோலா காய்ச்சல்பற்றி பீதி கிளம்பியிருக்கும் வேளையில், முதலில் நம்மில் பலர் நினைப்பது: “அதெல்லாம் ஆப்பிரிக்காவுலேர்ந்து இங்க வராது, வந்தாலும் நாம சமாளிக்க முடியாதா?”

இவை இரண்டுமே தவறான கருத்துகள்

முதலாவது, கொடிய தொற்றுநோய்கள் ஆப்பிரிக்கா விலிருந்துதான் வர வேண்டும் என்பதில்லை. ஈரான், உக்ரைன், கஜகஸ்தான் போன்ற மருத்துவ உள்கட்டமைப்புகள் குறைந்த நாடுகளிலும் எபோலா போன்ற நோய்கள் தோன்றிப் பரவியுள்ளன. இரண்டா வது, நமது மருத்துவ வசதியெல்லாம் இதுபோன்ற தொற்றுநோய்களை வென்றுவிட முடியாது. எபோலா, கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல் (சி.சிஹெச்.எஃப்), லஸ்ஸா போன்ற சில தொற்றுநோய்களுக்கு இன்று வரை மருந்து இல்லை. அவை, மிக வேகமாகப் பரவக் கூடியவை. இந்தக் கொடூர நோய்களில் ஒன்றான கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல், சமீபத்தில் அகமதாபாதின் அருகே தோன்றியது என்றால், நம்மில் பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

அகமதாபாத் அதிர்ச்சி!

டிசம்பர் 31, 2010 அன்று, அகமதாபாதின் ஷேல்பி மருத்துவமனையில் ஒரு பெண் தீவிரக் காய்ச்சலோடு அனுமதிக்கப்பட்டாள். நான்கு நாட்களாகக் காய்ச்சலும் தலைவலியும் மூச்சுத் திணறலுமாக இருந்த அந்தப் பெண், அதற்கு முன் மற்றொரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தவள். ஒரு சிகிச்சையும் பயனளிக்காமல் இறந்துபோனாள். 7 நாட்கள் கழித்து, ஷேல்பி மருத்துவமனையின் ஒரு செவிலி, அங்கேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிரக் காய்ச்சல், தலைவலி, வாந்தி என அறிகுறிகள் பதிவாயின. இறந்துபோன பெண்ணுக்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் பராமரிப்பு செய்துவந்ததால், மருத்துவர்களுக்குச் சந்தேகம் தோன்ற, அவரது ரத்த மாதிரியை, புணேவில் இருக்கும் தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு (என்.ஐ.வி.) அனுப்பி வைத்தனர்.

இந்தியாவில் வைரஸ் குறித்த ஆய்வுகளில் என்.ஐ.வி. முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் அதற்கு உயிரிய பாதுகாப்பு நிலை 4 என்ற அந்தஸ்து வழங்கப் பட்டிருக்கிறது. உலகிலேயே மிகக் குறைவான ஆய்வகங்களே இந்த அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. அவற்றில் , மிக அபாயகரமான தொற்றுநோய்க் கிருமிகள் பராமரிக்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. பெரியம்மை, எபோலா, சி.சி.ஹெச்.எஃப்., லிஸ்ஸா போன்ற தொற்றுநோய்களை உருவாக்கும் கொடிய நுண்ணுயிரிகள் இங்கு பாது காப்பாக வைக்கப்படுகின்றன. அத்துடன், எங் காவது இந்த நோய்கள் தோன்றினால், அவற்றை மரபணுரீதியாகக் கண்டறியும் ஆர்.டி. பி.சி.ஆர். போன்ற நவீனக் கருவிகள் இந்த ஆய்வகங்களில் இருக்கின்றன. ஆய்வக அறிக்கையின்படி, நாட்டின் பிற ஆய்வகங்களும், மருத்துவ, சுகாதார நிலையங்களும் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.

தொடர் மரணங்கள்

என்.ஐ.வி., அந்தச் செவிலியின் ரத்த மாதிரியின் சி.சி.ஹெச்.எஃப். வைரஸ் இருப்பதை மரபணு ஆய்வில் கண்டறிந்தது. ஷேல்பி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டார். உடலின் ஒவ்வொரு துவாரத்திலும் ரத்தம் கசிய, அவரும் எந்த சிகிச்சையும் பயனளிக்காது ஐந்தாம் நாளில் இறந்துபோனார். முதலாவதாக இறந்த பெண்ணுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணித்த இளம் மருத்துவர் ஒருவர், மற்றொரு மருத்துவமனையில், அவள் இறந்த 7 நாட்களில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் அதே அறிகுறிகள். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் அவரும் மிகுந்த வலியுடன், ரத்தக்கசிவில், உள்உறுப்புகள் சிதைந்த நிலையில் மரணமடைந்தார். தொற்றுநோய் சந்தேகம் வராததாலும், தகவல் பரிமாறப்படாததாலும் அவரது ரத்த மாதிரிகள் ஆராயப்படவில்லை. இதே நேரத்தில் மற்றொரு ஆண், காய்ச்சல், உடல் வலி, பேதியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நோய் அறிகுறிகள், ரத்தக்கசிவு போன்றவற்றைக் கண்டு எச்சரிக்கையான மருத்துவர்கள், அவரது வீட்டு நிலையை ஆராய்ந்தனர். அவரது மனைவி 9 நாட் களுக்கு முன்புதான் பெயர் அறியாத ரத்தப்போக்குக் காய்ச்சலால் மரணமடைந்திருந்தார். அந்தப் பெண் ணுக்குப் பணிவிடை செய்த செவிலி ஒருவரும், மற்றொரு மருத்துவமனையில் ரத்தப்போக்குக் காய்ச்சலில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவர, அவரையும் உடனடியாகத் தனி அறையில் வைத்துத் தீவிர சிகிச்சையைத் தொடங்கினார்கள். அவரது ரத்த மாதிரியை என்.ஐ.வி. பரிசோதித்து சி.சி.ஹெச்.வி இருப்பதாக உறுதிப்படுத்தியது. அவருக்கு ரிபாவிரின் என்ற மருந்து கொடுக்கப்பட்டு, பல நாட்களுக்குப் பிறகு அவர் உடல்நலம் தேறினார். அந்தச் செவிலியோ சிகிச்சை பலனளிக்காமல், பரிதாபமாக இறந்துபோனார்.

கால்நடை உண்ணிகள்

குஜராத் அரசுக்கு இந்த நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டு, மாநிலத் தொற்றுநோய் மையம் முடுக்கிவிடப்பட்டது. சி.சி.ஹெச்.எஃப். நோய், பொதுவாக உண்ணிகள் மூலம் பரவுகிறது. கால்நடை உண்ணிகள் இந்த வைரஸின் தாங்கிகள். அந்த உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் இவை மனிதர்களுக்குப் பரவுகின்றன.

முதலில் இறந்துபோன பெண்ணின் வரலாற்றை ஆராய்ந்த அரசு அதிகாரிகள், அவள் சானந்த் என்ற இடத்தினருகே ஒரு கிராமத்திலிருந்து வந்தவள் எனவும், ஆடு மாடு மேய்ப்பில் ஈடுபட்டிருந்தவள் எனவும் அறிந்தனர். அங்கு உண்ணிகள் பரவுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், மாநில அளவிலும், தேச அளவிலும் எச்சரிக்கை விடுக் கப்படவில்லை. அதற்குப் பின் வேறு நிகழ்வுகள் நடந்த தாகத் தெரியவில்லை.

ஒரு வருடம் கழித்து, 2012 மே மாதம், மற்றொரு மருத்துவர், அகமதாபாதின் வாடிலால் மருத்துவ மனையில், இதே அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார். மருத்துவர்கள் ஆராய்ந்தபோது, பத்து நாட்களுக்கு முன், அகமதாபாதை அடுத்த பாவ்லா கிராமத்திலிருந்து அதீதக் காய்ச்சல், ரத்தக்கசிவுடன் வந்த ஒரு பெண்ணுக்கு அவர் மருத்துவம் செய்திருக்கிறார் என்பதும், அவள் மூச்சுத் திணறியபோது, வாயில் குழாய் இட்டபோது ரத்தம் பீய்ச்சியடித்து அவரது கண்களில் தெறித்தது எனவும் அறிந்தனர். கண்களின் வழியே அந்த வைரஸ் அவருக்குள் புகுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அந்தப் பெண்ணும் மரணமடைந்திருந்தாள்.

குஜராத் தொற்றுநோய்ப் பிரிவு மையத்தினரும், மாநில சுகாதார அதிகாரிகளும் பாவ்லா கிராமத்தில் மிகுந்த பாதுகாப்புடன், அங்கு தொழுவத்தில் இருந்த கால்நடைகளின் ரத்த மாதிரிகளையும் உண்ணிகளையும் சேகரித்து என்.ஐ.வி-க்கு அனுப்பிவைத்தனர். அவற்றை ஆராய்ந்த என்.ஐ.வி. ஒரு கன்றின் ரத்தத்திலும், சில உண்ணிகளிலும் சி.சி.ஹெச்.எஃப். நுண்ணுயிரி இருப்பதாகக் கண்டறிந்தது.

எங்கிருந்து?

எங்கிருந்து இந்த வைரஸ் வந்திருக்கக் கூடும்? 90-களில் பாகிஸ்தானில் சி.சி.ஹெச்.எஃப். பரவியது. அங்கிருந்து உண்ணிகள் காற்றிலோ, கால்நடைகள் மூலமாகவோ எல்லைப் பகுதிகள் வழியாக வந்திருக்கக் கூடும் என்று ஊகிக்கிறார்கள். 1940-களுக்கு முன்பே ஜம்மு காஷ்மீரிலும் தென்னக மாநிலங்களிலும் சி.சி.ஹெச்.எஃப். இருந்ததாக ஆவணப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. சி.சி.ஹெச்.எஃப். எப்படி இந் நாட்டில் வந்தது என்பது புதிராகவே உள்ளது, அந்தக் காய்ச்சல்போலவே.

சி.சி.ஹெச்.எஃப். நோய்ப் பரவலைத் தடுக்க, குஜராத் மாநிலம் மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்ப நிலையிலானவை. பெரிய அளவில் அது பரவியிருந்தால், அந்த நடவடிக்கைகள் போதாது.

இந்தியாவில் எத்தனை மாநிலங்களின் தொற்று நோய்ப் பிரிவுகள் இந்த அபாயத்தின் தீவிரத்தை உணர்ந்திருக்கின்றன என்பது தெரியவில்லை. அப்படி உணர்ந்த மாநிலங்களில், மிக வேகமாகப் பரவும் இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எந்த அளவுக்கு முன் தயாரிப்புடன் இருக்கின்றன என்பது தெரியவில்லை (கர்நாடகம் மட்டுமே தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உள்கட்டமைப்பிலும் செயல்பாட்டிலும் முன்னணியில் இருக்கிறது). ஒருங்கிணைந்த தகவல்தொடர்பையும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழிமுறைகளையும், பேரிடர் தடுப்புக் காப்பு முறைகளையும் மாநில அரசுகள் முக்கியமாகக் கருதிச் செயல்படுத்தும்வரை… நாம் ஒரு தீப்பற்றிய வெடிகுண்டின் மேல்தான் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்!

- சுதாகர் கஸ்தூரி, அறிவியல் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகர், ‘6174' என்னும் அறிவியல் புனைகதை நாவலின் ஆசிரியர், தொடர்புக்கு: kasturi.sudhakar@gmail.com


Also read the related Articles in Wikipedia

1. In English: http://goo.gl/FpGS4I

2. In Tamil: http://goo.gl/9bSGhB


Related Posts Plugin for WordPress, Blogger...

Disclaimer


Collection of important and burning Topics, News from all Dailies, Fortnight Magazines, etc., in order to highlight its importance to the viewers and also to keep it as ready reckoner by them so as to access it quickly from the concerned Sources which we quote them at the bottom of each Posts so as to extend our gratitude towards the Author of that Posts in their releases.



Followers

Search our Blog here

Google
 


News Feed from Various Dailies



THE HINDU - News Update

Expressbuzz - Columnists

Expressbuzz - Tamil Nadu

தினமணி: மெய்யாலுமா...? அரசியல் கிசுகிசு

Dinamani - Headlines

Dinamani - Politics

Dinamani - Tamil Nadu

Dinamani - Pondicherry

Dinamani - Cuddalore

Labels

Pondicherry (135) Tamil Nadu (130) ARTICLE (103) Editorial (91) aiadmk (63) jayalalithaa (59) dinamani (55) dmk (53) Karunanidhi (33) india (30) Ariankuppam (29) chief minister of tamil nadu (27) the hindu (27) railway (26) Congress (23) Dinamalar (22) Supreme Court (22) THE HINDU (22) southeren railway (22) Nuclear (21) chennai (21) US (20) wikipedia (20) Rain (19) frontline (19) PMK (18) Pratiba (18) President (18) karnataka (18) Education (17) Train (17) Elections (16) sri lanka (16) 2013 (15) 2012 (14) Madras High Court (14) 123 Agreement (13) Road (13) bangalore (13) election commission (13) nuke deal (13) Advocates (12) BEHS (12) Bridge (12) Facebook (12) Google (12) NPT (12) Politics (12) Youtube (12) 2010 (11) Interview (11) Legislative Assembly (11) Traffic (11) Video (11) abdul kalam (11) Accidents (10) Parliament (10) Private Schools (10) Tamil Eelam (10) police (10) BJP (9) Cuddalore District (9) Death (9) Environment (9) 2014 (8) BG Conversion (8) Ban (8) Website (8) water (8) water resources (8) Communist Parties (7) Examination (7) Flight (7) Government (7) Mayiladudurai (7) Pakistan (7) River (7) Schools (7) The New Indian Express (7) UNO (7) USA (7) Villupuram (7) ground water (7) prime minister (7) Andhra Pradesh (6) Beach (6) Car (6) Cauvery (6) Children (6) Coimbatore (6) Court (6) Cricket (6) Jaya TV (6) Lok Sabha (6) Mobile Phones (6) Strike (6) cellphones (6) 10th Exam (5) Dinakaran (5) High Court (5) MGR (5) MLAs (5) Municipality (5) One Year Performance (5) Online (5) Petrol (5) Plastic (5) Political Party (5) Progress Card (5) RBI (5) Sethusamudram (5) Sports (5) Sun TV (5) banks (5) lawyers (5) madras (5) russia (5) temple (5) CEC (4) Corporation (4) Credit Card (4) DMDK (4) Foods (4) Health (4) International (4) MDMK (4) Makkal TV (4) Mumbai (4) Nuclear standoff (4) PIB (4) Prices (4) SSLC (4) Sethu (4) Surgery (4) TIPS (4) TV (4) Tamil (4) Time Table (4) Vaiko (4) World Water Day (4) chief minister (4) computer (4) kerala (4) 2011 (3) 3rd World War (3) Actor (3) Adulterated items (3) Agriculture (3) Airport (3) Anti-Corruption (3) BSNL (3) Bandh (3) Bragadeeswara Temple (3) Britain (3) Cabinet Minister (3) Civil Supplies Department (3) Constitution (3) Cr.P.C. (3) Daily Thanthi (3) Dasara festival (3) EVMs (3) Garbage (3) Gazette (3) Helmets (3) Hospital (3) I-Day (3) IPC (3) IT (3) Ice (3) Kalaignar TV (3) Kiran Bedi (3) Kollidam (3) Lieutenant Governor (3) MPs (3) Marina Beach (3) Medical (3) Microsoft (3) Mini Flight (3) Mysore (3) Panruti (3) Photos (3) Politicians (3) Pollution (3) Pranab Mukherjee (3) Public Exam (3) RTI Act (3) Raj TV (3) Rajiv Gandhi (3) Schoolboy (3) Smoking (3) Sonia Gandhi (3) South Africa (3) Speaker (3) Tanjore (3) Teacher (3) Telangana (3) Telephone (3) UNPA (3) Vijayakant (3) Yahoo (3) cbi (3) delhi (3) gujarat (3) mssrf (3) newspaper (3) planet (3) salem division (3) times of india (3) 1000 Rupee Note (2) 12th Exam (2) ATM (2) Aadhar Card (2) Advertisements (2) AirTel (2) Assembly Meeting (2) BESCOM (2) Birth Certificate (2) Botanical Garden (2) Boycott (2) Bus Stand (2) CCTVs (2) CJI (2) CPI (2) CPM (2) Cadres (2) Cancer (2) Christians (2) Church (2) Cigarettes (2) Compensation (2) Complaint (2) Cyclone (2) DTH (2) Daily Telegraph (2) Dams (2) Death Anniversary (2) Debates (2) Debit Card (2) Driving (2) ECR (2) Earth (2) Electricity (2) Eye (2) Fire (2) Floods (2) Fonseka (2) Foreign Nations (2) Foreigners (2) Four Track Road (2) Full Moon (2) Genocide (2) Global Warming (2) Govt. Staffs (2) Green (2) Guru (2) Heart (2) Heritage buildings (2) Highways (2) Hogenakkal (2) Home Minister (2) Home Ministry (2) Hyderabad (2) ICICI (2) IT Capital (2) Independence (2) Judges (2) Katchatheevu Island (2) Kerala High Court (2) LORRY (2) LPG Gas Connection (2) Law College (2) Legislative Assembly Complex (2) London (2) Losses (2) M.K.Stalin (2) Maalaimalar (2) Mahe (2) Mahinda Rajapaksa (2) Medicine (2) Mega TV (2) Moon (2) Motor Vehicles (2) Municipal waste (2) Musharraf (2) NASA (2) NDTV (2) Nagapattinam (2) Narendra Modi (2) National Highways (2) Nepal (2) Notifications (2) Obama (2) Pamban (2) Parking Place (2) Passport (2) Pazha Nedumaaran (2) Phones (2) Portfolios (2) Pratibha Patil (2) Private TV Channels (2) RBI Governor (2) RTO (2) Railway Minister (2) Rajya Sabha (2) Ramanathapuram (2) Ramdoss (2) Rameswaram (2) Ration Card (2) Rename (2) Reservation (2) Rivers Inter-link (2) Rowdies (2) Royal Cable Vision (2) Rule of Law (2) S.K.Upadhyay (2) SAARC (2) Sachin (2) Salary (2) Satellite (2) School Van (2) Sea Level Rising (2) Search Engine (2) Somnath Chatterjee (2) Speech (2) Subramanian Swamy (2) Sumangali Cable Vision (2) T.R.Baalu (2) TRAI (2) Tamil Murasu (2) Tax issues (2) Tea (2) Telecom (2) Theft (2) Tibet (2) Tiruchi (2) Tiruchirapalli (2) Tirupur District (2) Tobacco (2) Tourism (2) Veeranam Lake (2) Vellore (2) Vellore Jail (2) Vice President (2) Vigilance (2) Voters' List (2) Woman (2) World Heritage (2) World Tour (2) bangaladesh (2) eTicket (2) iTicket (2) kizhur (2) madurai (2) minister (2) monuments (2) o.paneerselvam (2) security (2) states (2) technology (2) television (2) vkc (2) கச்சத்தீவு (2) 100 feet Road (1) 10th Schedule (1) 11-storey Building (1) 16th World Editors' Forum (1) 1996 (1) 2001 (1) 2007 (1) 2008 (1) 2009 (1) 60 Years (1) 62nd World Newspaper Congress (1) 75 years of history (1) A.P.Hithendran (1) AC Bus (1) AIIMS (1) Abbreviations (1) Act (1) Actor Vijay (1) Adichanallur (1) Advertisement (1) Advocate Durai (1) Aerobridge (1) Agitation (1) Agricultural Lands (1) Ahmedabad blasts (1) Alert (1) Alive (1) Ambassador (1) Anbumani Ramadoss (1) Animation (1) Anna (1) Announcement (1) Annual Day (1) Anti-conversion (1) Apollo Hospitals (1) Application Form (1) Applications (1) Archaeology (1) Army (1) Art.370 (1) Asif Ali Zardari (1) Assam (1) Assassin (1) Assassination (1) Attestation (1) Auditor (1) Aurobindo Ashram (1) Australia (1) BCCI (1) BPL (1) Baby (1) Badminton (1) Baggage missing (1) Bahour (1) Bankruptcy (1) Bar Council of India (1) Barricades (1) Battery (1) Beggers (1) Bhubaneswar Express (1) Bihar (1) Bike (1) Bill (1) Birth centenary (1) Black Film (1) Blogger News Network (1) Body (1) Book Fair (1) Booking Rules (1) Bribe (1) Bricks (1) British (1) Browser (1) Budget Session (1) Burnt (1) Buses (1) Business Line (1) Busisness (1) CAG (1) CEO (1) CMDA (1) CMRP (1) CMs Conference (1) CNN IBN (1) Calendar (1) Car Festival (1) Car goes up in flames (1) Cash Transaction Tax (1) Cataract (1) Cauvery Tribunal Award (1) Census (1) Chairman (1) Chalukyas (1) Change of Mobile (1) Charge Sheet (1) Chennai (South) Forum (1) Chennai Cricket Club (1) Chennai Metro Rail Project (1) Chidambaram (1) Chief Secretary (1) Child Pornography (1) China (1) Chinna Veerampattinam Beach (1) Chiranjeevi (1) Christmas (1) Chunnambar River (1) Cinema (1) Circular (1) Civil Judge (1) Civil Liability for Nuclear Damage Bill (1) Clash (1) Climate Change (1) Clonning (1) Closing (1) Cochin (1) Cock (1) Collector (1) Colleges (1) Colonial Rule (1) Comedian (1) Commune Panchayat (1) Companies (1) Compulsory military service (1) Consumer (1) Consumer goods (1) Contempt (1) Conversion (1) Convicts (1) Cooum (1) Copenhagen (1) Copenhagen Accord (1) Copyright (1) Courses (1) Daily Pioneer (1) Dayanidhi Maran (1) Defamation (1) Delhi High Court (1) Demise (1) Demolition (1) Derogatory remarks (1) Development Index for States (1) Devotional (1) Dhoti (1) Diamond Jubilee (1) Dina Thanthi (1) Dinamani Newspaper (1) Director (1) Diseases (1) Disney TV (1) Disqualification (1) Disrespect (1) Do's and Dont's (1) Doctors (1) Don Bosco School (1) Double Decker (1) Download (1) Dowry (1) Drainage (1) Dress Code (1) Drowned (1) Drunken (1) Dust bin (1) ECI (1) EU (1) EVKS Elangovan (1) Earth quake (1) Ebola virus disease (1) Egg (1) Egmore (1) Elocution Competition (1) Emergency (1) Employment (1) Engineer (1) English (1) Extension (1) FC (1) FDI (1) FII (1) FPR Waste (1) Fake Identiy Cards (1) Fakes (1) Family Name (1) Farm Lands (1) Fast Food Stalls (1) Fatal injury (1) Faulty Printing (1) Federal Police (1) Fees (1) Fellowship Award (1) Fever (1) Finance Minister (1) Finger Prints (1) First Name (1) Fishermen (1) Flower Show (1) Foreign Ministers (1) Former Minister (1) Fort (1) Fort St. George (1) Forum Mall (1) Free of Cost (1) French Diviner (1) Fuel (1) Funeral ceremony (1) GSLV (1) Galaxy (1) Ganesha Pandals (1) Gangaikondacholapuram (1) Garib Rath (1) Gazetted Officers (1) German Architects (1) Germany (1) Gingee Fort (1) Given Name (1) Gmail (1) Goa (1) Goods Train (1) Goondas Act (1) Goons (1) Gopalsamy (1) Governor (1) Greetings (1) Guardian Newspapers Limited (1) Guru Peyarchi Palan (1) Guruvalaya Sports Coaching Centre (1) Guwahati (1) HSRP Number Plates (1) HSc (1) Half-ticket (1) Hawkers (1) Helicopter (1) Hen (1) Hindus (1) Hindustan Times (1) Home Page (1) Hotel (1) Hotmail (1) Howrah Superfast Express (1) Humanism (1) Humanity (1) Hyderabad Twin Blasts (1) IAS (1) IATR (1) IBSA (1) ICC (1) ICC World Cup 2007 (1) ICJ (1) IMCHRC (1) IMDT Act (1) IRCTC (1) IRDAI (1) ISRO (1) IT Act (1) Identiy Cards (1) Images (1) Independence Day (1) India Guinness records (1) Indian Kanoon (1) Indian Rupee (1) Inflation (1) Insects (1) Insurance premium (1) Internet (1) Investment (1) Investors (1) Iran (1) Israel (1) JIPMER (1) Jammu & Kashmir (1) Jammu & Kashmir High Court (1) Jamsetji Tata National Virtual Academy (1) Japan (1) Job (1) Journey (1) Judicial Staffs (1) Judiciary (1) Jupiter (1) Justice Dalveer Bhandari (1) KAMBAR (1) Kachatheevu (1) Kachchathivu island (1) Kalaimagal Vizha (1) Kallanai (1) Kalrayan Hills (1) Kamal Nath (1) Kamarajar (1) Kamban Kalai Arangam (1) Kandasamy (1) Kapil Sibal (1) Karaikal-Nagoor (1) Kazhugumalai (1) Keerthiga (1) Kerla (1) Kids (1) Kingfisher (1) Kolar Gold Field (1) Kovaithambi (1) L.K.advani (1) LTTE (1) Lake (1) Lalu (1) Landline Phones (1) Levy (1) Licenses (1) Life Jackets (1) Lord Shiva (1) Lung disease (1) M-Sand (1) M.K.Alagiri (1) M.S.Gill (1) MCI (1) MET (1) MLC (1) MRP (1) MSO (1) MV Act (1) MYLAI (1) MYLAPORE (1) Madikrishnapuram (1) Madurai Bench (1) Madurai Corporation (1) Madurai Ramu (1) Mahabalipuram (1) Maharashtra (1) Mailam (1) Malaysian Airlines (1) Malladi Krishnarao (1) Mamata Banerjee (1) Manapet Govt. School (1) Mangalore (1) Mangalore Express (1) Manirathnam (1) Marriages (1) Mars (1) Matriculation (1) Matrimony (1) Mayor (1) Meets (1) Melodies Songs (1) Metro Train (1) Mettur Dam (1) Microsoft Office 2010 (1) Middle Name (1) Mississippi (1) Misuse of pro-women law (1) Modi (1) Monarchy (1) Monetary (1) Moot Court (1) Mosquitoes (1) Moulivakkam (1) Mukumbu (1) Mullaiperiyar Dam (1) Mullaperiyar Dam (1) Mumbai Dadar Chalukya Express (1) Murali (1) Murder case (1) Murugan (1) Muscle power (1) Muslims (1) Mysore Palace (1) N.Ram (1) NATO (1) NGO (1) NH (1) NHAI (1) NSK alias N.S.Krishnan (1) Nalini (1) Namathu MGR (1) Namma Ooru Seythi (1) Nanauk (1) Nandhi (1) Narayana Murthy (1) National Crime Records Bureau (1) National Security Act (1) Natural (1) Natwar Singh (1) Naxalites (1) Nehru Street (1) Nelson (1) New Delhi Superfast Express (1) New Year (1) Night Hours (1) Nostradamus (1) November 1 (1) Numbers (1) ODF (1) ODI (1) OPS (1) Ocean (1) Offers (1) Office Bearers (1) Old Prison (1) Old Songs (1) Olympics (1) Open Defecation Free (1) Open Page (1) Organ Transplant Operation (1) Ottavio Quattrocchi (1) Oussudu Lake (1) Overbridge (1) P.B.Sreenivas (1) P.Chidambaram (1) PBS (1) PIN Number (1) PMC (1) PONTEX (1) PRTC (1) PSLV (1) PTI (1) Paintings (1) Palakkad (1) Palani (1) Pallineliyanur (1) Pamphlets (1) Parents (1) Patta (1) Pennayar River (1) People's President (1) Perarivalan (1) Philosopher (1) Phone tapping (1) Physical Map (1) Pillaiyarkuppam (1) Pillayarkuppam (1) Planning Commission (1) Playback singer (1) Poisonous (1) Pollution Under Control Certificate (1) Pondicherry Code (1) Ponlait Milk Society (1) Poongothai (1) Porur Lake (1) Post Office (1) Postal Savings (1) Poverty (1) Power Generation (1) Prakash Karat (1) Prison (1) Privacy (1) Private Clinic (1) Priyanka (1) Proclaimed Offender (1) Property Tax (1) Prosecution (1) Prospectus (1) Protest (1) Public Meetings (1) Public Servant (1) Puli Devan (1) Pumpkin (1) Punjab (1) Puthiya Thalaimurai TV (1) Puzzle (1) Questions (1) RJD (1) RTE Act (1) Radiation (1) Raghuram Rajan (1) Railway Bridge (1) Raja (1) Raja Kannappan (1) Rajasulochana (1) Ramarajan (1) Real Name (1) Recovery Agents (1) Reddiarpalayam (1) Rejoinder (1) Release (1) Religion (1) Remand (1) Renovation (1) Reply in Tamil (1) Republic Day (1) Reshuffle (1) Results (1) Retirement (1) Riots (1) River Sand (1) Robo Sand (1) Rs.10 Food (1) Rule 417-A (1) S.Ve.Sekar (1) SBI (1) SEBI (1) SEZs (1) SP (1) SRC (1) Sachar Commission (1) Salem Railway Division (1) Sand quarries (1) Sand quarry issue (1) Saneeswarar (1) Sarkaria Commission (1) Sathankulam (1) Saturn (1) Saudia Arabia (1) Save Tamil (1) Scandal (1) Schedule (1) Sea Route (1) Self-attestation (1) Sex (1) Sharad Pawar (1) Sharekhan (1) Shilma Railway (1) Shimoga District (1) Ship (1) Shopping Malls (1) Shuttlecock (1) Signal (1) Sikh Temple (1) Singer (1) Sivanthi Adityan (1) Skulls (1) Smart Card (1) Social Network (1) Software (1) Sonia (1) Sony (1) Sornavur Anaicut (1) Spectrum (1) SpiceJet (1) Sree Nivas Tower (1) Sri Krishna Report (1) Sri Rangam (1) Sriharikota (1) State Consumer Disputes Redressal Commission (1) Statue (1) Stlain (1) Sub Registrar (1) Subramania Bharati (1) Summer Vacation (1) Sun (1) Sun Halo (1) Superfast Train (1) Surname (1) Survey Department (1) Suspension (1) Swine flu (1) Symbol (1) T.Kritinan (1) TATA (1) TATA Sumo (1) TNEB (1) TNPSC (1) Taluk (1) Tamil Actor (1) Tariff hiked (1) Terrace House Gardening (1) Thane (1) Thanjavur (1) Thenkinnam (1) Thirukkural (1) Thirumurai (1) Thirunallar (1) Thothukudi (1) Time-Table (1) Tindivanam (1) Tirunallar (1) Tirupati Train (1) Titanium (1) Toll-free number (1) Tornado (1) Transfer Certificate (1) Transferred Ticket (1) Transport Department (1) Trees (1) Tuticorin (1) Twitter (1) Two Youths (1) Two-wheeler (1) UK (1) UNESCO (1) UPA (1) Uchimedu (1) Union Council of Ministers (1) Universe (1) University (1) Unlimited Night Calls (1) Unmanned Level Crossing (1) Unreserved Compartments (1) Uppalam (1) V.Narayanasamy (1) VCK (1) VETA (1) VIP (1) VOC (1) Vacuum Cleaner (1) Vaigai (1) Vamba Keerapalayam (1) Vedharanyam (1) Vehicles (1) Video-conferencing (1) Vidhana Soudha (1) Village (1) Villianur (1) Visa (1) Volley Ball Cup (1) WHO (1) WTC (1) WTO (1) War (1) Wedding (1) Whales (1) Women Police (1) Women's Right and Status (1) Women’s Reservation Bill (1) World Bank (1) World Records (1) World Tamil Conference (1) Yanam (1) Yesvantpur Garib Rath (1) argentina (1) atomic energy (1) azhagiri (1) bifurcation (1) bofors pay off case (1) buddhist (1) channels (1) child abuse (1) cyber crime (1) cyber security (1) e-Library (1) forensic laboratory (1) google sky (1) hyde act (1) i (1) india today (1) indira Gandhi (1) indus valley civilisation (1) information (1) ipod (1) jains (1) katnataka (1) koil (1) kudankulam (1) lectronic Voting Machines (1) mamalla (1) money lender (1) moscow (1) mumbai riot (1) rangasamy (1) salem (1) sculptor (1) telefilm (1) trucks (1) wordpress (1) அரியாங்குப்பம் (1) ஆதிச்சநல்லூர் (1) இதயக்கோவில் (1) எபோலா தீநுண்ம நோய் (1) கல்வராயன் மலைகள் (1) கல்வி சாதனையாளர் பட்டயம் (1) குடுவை ஆறு (1) சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபா (1) சிவராந்தகம் (1) சுழல் காற்று (1) தமிழர் உணவகம் (1) நுரையீரல் நோய் (1) பயிர்களை பராமரிப்பது எப்படி? (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)