Wednesday, July 2, 2014

கட்டிட விபத்து: வங்கிகளில் வாங்கப்பட்ட கடன் என்ன ஆகும்?-அதிகாரி விளக்கம்




Official Website of CMDA at: http://www.cmdachennai.gov.in

வீடு வாங்குவதற்கு கொடுத்த பணம் திரும்பக் கிடைக்குமா?: தவிக்கும் நடுத்தர மக்கள்

பதிவு செய்த நாள்: புதன்கிழமை, ஜூலை 02, 1:03 PM IST

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் லட்சோப லட்ச மக்கள் மனதில் ஒரு வித பீதியை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்து ஏற்படுத்தி இருக்கிறது.

நாம் வசிக்கும் வீடு பாதுகாப்பானது தானா என்ற சந்தேகம் மெல்ல அவர்கள் மனதின் ஒரு ஓரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்த ஊசலாட்டம் நாட்கள் செல்ல, செல்ல மங்கி மறைந்து விடும்.

ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க பணம் கொடுத்து விட்டு காத்து இருப்பவர்களையும், அடுக்குமாடி குடியிருப்பில் நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி வீடு கிடைக்குமா என்று ஆலோசித்துக் கொண்டிருப்பவர்களையும் மவுலிவாக்கம் சம்பவம் கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது.

இனி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கலாம் என்று நினைக்கும் போதே அவர்கள் மனதில் நிச்சயமாக 11 மாடி இடிந்து விழுந்து தரை மட்டமான கோரம் ஒரு வினாடி வந்து போகும். எனவே இன்னும் சில மாதங்களுக்கு சென்னையில் அடுக்குமாடி விற்பனையில் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கத்தில் மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடத்தில் வீடு வாங்குவதற்கு பணம் கொடுத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், பரிதவிப்பும் ஒரு பரிதாப நிலையை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்நாள் முழுவதும் சிறுக, சிறுக குருவி சேர்ப்பது போல சேர்த்த லட்சக்கணக்கான பணத்தை பில்டரை நம்பி கொடுத்து விட்டு, இன்று வீடும் இல்லை.... கொடுத்த பணமாவது திரும்ப வருமா? என்று பலரும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

பலர் வங்கிகளில் கடன் வாங்கி கொடுத்து விட்டு, தலையில் இடி விழுந்தவர்கள் போல உட்கார்ந்து இருக்கிறார்கள். மொத்தம் 72 பேர் இந்த சோக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் வரை இவர்கள் 72 பேர் மனதிலும் புது வீட்டுக்கு சொந்தக்காரர் ஆகப்போகிறோம் என்ற குதூகலம் நிறைந்து இருந்தது. 11 மாடியும் இரண்டாக பிளந்து விழுந்த போது அவர்கள் மனதும் கட்டிட இடிபாடுகள் போல நொறுங்கிப் போனது.

இந்த 72 பேரில் பலரும் அடுத்து என்ன செய்வது என்ற தவிப்பில் உள்ளனர். ஏனெனில் இவர்கள் அனைவரும் வீட்டின் கட்டுமானத் தொகையில் 90 சதவீதத்தை கொடுத்து முடித்து விட்டனர்.

மஸ்கத்தில் வேலை பார்த்து வரும் பாஸ்டியன் மார்டீன் என்பவர் தன் மொத்த சம்பாத்தியத்தையும் இந்த 11 மாடி குடியிருப்பில் வீடு வாங்க கொடுத்திருந்தார். அவர் ரூ. 67 லட்சத்தில் வீடு பெற ஒப்பந்தம் செய்திருந்தார். இதில் ரூ. 53 லட்சம் கொடுத்து விட்டதாக கூறினார்.

ஓமன் நாட்டில் வேலை பார்த்து வரும் குருராகவேந்திரன் என்பவர் ரூ. 38 லட்சம் கொடுத்து இருப்பதாக கூறினார். கட்டிடம் இடிந்த தகவல் அறிந்ததும் தன் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி இருப்பதாக வேதனைப்பட்டார்.

வசந்தகுமார் என்ற பல் டாக்டர் 11 மாடி கட்டிடத்தின் 6வது மாடியில் ரூ.53 லட்சத்தில் வீடு வாங்க ஒப்பந்தம் செய்திருந்தார். இது வரை அவர் ரூ. 35 லட்சம் கொடுத்து இருப்பதாக கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் வீடு கிடைத்து விடம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்... இப்படி ஆகி விட்டது என்று கூறினார்.

எல் அன்ட் டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் கூறுகையில், ''என் வாழ்நாள் சம்பாத்தியத்தை கொண்டு ரூ.68 லட்சம் கொடுத்துள்ளேன். இந்த பணத்தை எப்படி திரும்பப் பெற போகிறேன் என்றே தெரியவில்லை'' என்றார்.

இவர்களைப் போலவே மற்றவர்களும் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து விட்டு கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள். பணம் திரும்ப கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? என்பது போன்று பல கேள்விகள் அவர்கள் மனதை உலுக்கியபடி உள்ளன.

பணம் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் கூறுகையில், ''11 மாடி கட்டிடத்தை உருவாக்கிய பில்டர் மனோகரனும், அவரது மகன் முத்து காமாட்சியும் மிகவும் வெளிப்படையாக நடந்து கொண்டனர். அவர்களை நம்பி பணம் கொடுத்தோம்'' என்றனர்.

அந்த வகையில் தற்போது அனைவரது ஒட்டு மொத்த பார்வையும் பில்டர் மனோகரன் மீது திரும்பி இருக்கிறது.

60 வயதாகும் மனோகரன் மதுரையைச் சேர்ந்தவர். அங்கு இந்தியன் வங்கியில் கிளார்க் ஆக பணிபுரிந்த வந்தார். 2011–ம் ஆண்டு வேலையில் இருந்து ஓய்வு பெற்று விலகிய அவர் உடனடியாக பில்டராக மாறிவிட்டார்.

வங்கியில் பணியில் இருந்த போது ரியல் – எஸ்டேட் டீலராகவும் இருந்த அவர் மதுரையில் மளமளவென பல வீடுகளை கட்டிக் கொடுத்தார். இதனால் ''நல்ல பில்டர்'' என்ற நற்பெயர் கிடைத்தது.

இந்த நிலையில் தான் அவர் ஒரே திட்டத்தில் பல கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஆசையில் சென்னை வந்து மவுலிவாக்கத்தில் 11 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர கட்டிடத்தைத் தொடங்கினார். ஆனால் அவர் கால் வைத்த இடம் தான் சரி இல்லை.

குளம் இருந்த இடத்தில் 11 மாடி கட்ட அவர் நினைத்ததே இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமாகி விட்டது.

அடித்தளம் சரியாக போடாதால் தான் மழை பெய்ததும் 11 மாடியும் சீட்டுக் கட்டு சரிவது போல் சரிந்து விட்டது என்று பலரும் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் பில்டர் மனோகரன் கூறுகையில், ''மழை பெய்த போது கடுமையான மின்னல் தாக்கியது. 

அந்த தாக்கத்தினால் 12வது மாடியில் இருந்த நீர்தேக்கத்தொட்டி உடைந்தது. இது தான் கட்டிடத்தையே சிதைந்து விட்டது. மற்றபடி கட்டிட வடிவமைப்பில் எந்த தவறும் இல்லை'' என்கிறார்.

ஆனால் கட்டிட வடிவமைப்பாளர் விஜய் பர்காத்ரா அங்கீகாரம் பெற்றவர் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனோகரன், விஜய் பர்காத்ரா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்டமாக இவர்கள் பணத்தை திருப்பிக் கொடுப்பார்களா? என்பதே எல்லாரது எதிர்பார்ப்பாக உள்ளது.

வீடு வாங்க கடன் வாங்குபவர்கள், அந்த பணத்தின் பாதுகாப்புக்காக, இன்சூரன்ஸ் பெற முடியாது. வீடு கட்டி முடிக்கப்பட்ட பிறகே இன்சூரன்ஸ் போட முடியும். எனவே வீடு வாங்க பணம் கொடுத்த 72 பேரும் இன்சூரன்ஸ் மூலம் பணம் பெற இயலாது.

அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி – பில்டர் மனோகரன் மனது வைத்து திருப்பிக் கொடுத்தால் தான் உண்டு. அவர் தான் திவால் ஆகி விட்டதாக நோட்டீசு கொடுத்தால் எதுவும் செய்ய முடியாது.

பணம் கொடுத்தவர்கள் ஒன்று சேர்ந்தோ அல்லது தனியாகவோ கோர்ட்டை அணுகலாம். ஆனால் வழக்கு விசாரணை எப்போது முடிந்து, எப்போது பணம் திரும்ப கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

இந்த நிலையில் பில்டர் மனோகரன் தன்னிடம் வீடு வாங்க பணம் கொடுத்தவர்களுக்கு இ–மெயில் அனுப்பியுள்ளார். அதில் அவர் உங்கள் முழு பணத்தையும் திருப்பித்தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

வழக்கு விசாரணை முடிந்த பிறகே இதற்கான நடவடிக்கை தொடங்கும். அதுவரை வீடு வாங்க பணம் கொடுத்தவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

கட்டிட விபத்து: வங்கிகளில் வாங்கப்பட்ட கடன் என்ன ஆகும்?-அதிகாரி விளக்கம்

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், அதில் வீடு வாங்கி இருந்த 72 பேரின் நிலை பரிதாபமாக உள்ளது.

இவர்கள் வங்கியில் கடன் வாங்கிய பணத்தை கட்ட வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை மானேஜர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

அடுக்குமாடி குடியிருப்புக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் முழுத் தொகையையும் கடனாக கொடுப்பது கிடையாது.

வீட்டு கிரயத்தில் 20 சதவீத பணத்தை கடன் வாங்குபவர் பில்டரிடம் செலுத்தி இருக்க வேண்டும். அந்த ஒப்பந்தத்தை வைத்து தான் வங்கிகள் 80 சதவீத கடன் வழங்கும்.

அதுவும் கட்டி முடிக்கப்படாத கட்டிடம் என்றால் கட்டப்படும் நாளில் இருந்து 18 மாதம் கழித்து இ.எம்.ஐ. செலுத்தும் (மாத தவணை) வகையில் கடன் வழங்குவார்கள். கட்டிட நிலப்பகுதியை அட்டாச்மெண்ட் செய்துதான் வங்கி கடன் கொடுக்கும்.

இந்த கடன் தொகையை பாங்கிகள் பில்டருக்கு வழங்கும் போது முழுத் தொகையையும் கொடுக்க கூடாது.

பவுண்டேஷன் போடும் போது ஒரு தொகை, முதல் மாடி கட்டும் போது ஒரு தொகை என 10 நிலைகளில் கட்டிடம் கட்டப்படுவதை வைத்து தான் கடன் கொடுக்க வேண்டும்.

ஆனால் இந்த 11 மாடி கட்டிடத்தில் பாங்கி கடன் எப்படி வழங்கப்பட்டது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.

கடவுள் பெயரைக் கொண்ட தனியார் பாங்கி, இன்சூரன்ஸ் நிறுவனம் உள்பட 5 பாங்கிகள் இந்த 11 மாடி கட்டிடத்துக்கு கடன் கொடுத்ததாக கூறுகிறார்கள்.

கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு முழுத் தொகையையும் பில்டருக்கு கடன் கொடுத்திருந்தால் வங்கி அதிகாரிகளும் இதில் சிக்குவார்கள். தற்போது 44 வீடுகள் கொண்ட கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி விட்டது. இன்னொரு 44 வீடுகள் கொண்ட கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதில் கடன் வாங்கியவர்கள் வங்கிக்கு கடனை செலுத்த மறுக்கும் சூழ்நிலையில் நிலத்தின் பிரிக்கப்படாத பகுதியை விற்றுதான் பாங்கிகள் பணம் பெற முடியும்.

இதே சூழலில் வங்கியில் கடன் வாங்கிய வீட்டுக்காரர்களும் கோர்ட்டுக்கு சென்றால் கட்டுமான நிறுவனம்தான் அனைவருக்கும் இழப்பீடு வழங்கும் நிலை ஏற்படும். அப்போது கட்டுமான நிறுவனம் திவால் நோட்டீஸ் அறிவிப்பு வெளியிட்டால் ஒன்றும் செய்ய இயலாது.

தற்போதைய சூழலில் வீடு வாங்கியவர்கள், பில்டர், கடன் கொடுத்த வங்கிகள் என 3 பேருக்குமே இழப்பு தான். அரசுதான் இதில் முடிவெடுத்து அறிவிக்கும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

11 மாடி கட்டிட விபத்தில் சிக்கியவர்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா?

சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து தரை மட்டமானதில் இதுவரை 45 பேர் பலியாகி உள்ளனர்.

27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட கூலி தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. உயிர் இழந்த தொழிலாளர்களின் உறவினருக்கும், மீட்கப்பட்டவர்களுக்கும் எத்தகைய ஆறுதல் கூறினாலும் இழப்பை ஈடு செய்ய இயலாது. ஆனாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வறுமையானாலும், ஏழ்மையினாலும் மனைவி, குழந்தைகளை பிரிந்து இங்கு தங்கி வேலை செய்துள்ளனர். அவர்களுக்கு எந்தெந்த வகையில் உதவி செய்ய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இடிந்து விழுந்த கட்டிடத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கட்டிடத்தின் உரிமையாளர் அல்லது காண்ட்டிராக்டர் இன்சூரன்ஸ் செய்திருந்தால் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இது பற்றி எல்.ஐ.சி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

இது போன்ற அடுக்குமாடி வீடுகள் கட்டும் போது கட்டிட உரிமையாளர் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்காக இன்சூரன்ஸ் செய்வார்கள். பணியின் போது ஏதாவது நேர்ந்தால் அவர்களுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அது போல இந்த கட்டிடத்தின் உரிமையாளர் இன்சூரன்ஸ் செய்திருந்தால் இதில் உயிர் இழந்த, படுகாயம் அடைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்கும். ஆனால் அவர் இன்சூரன்ஸ் செய்தாரா? இல்லையா என்று தெரியவில்லை.

பொதுவாக பில்டர்கள், நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் கட்டிடம் பாதிக்க கூடும் பட்சத்தில் அவற்றில் இருந்து தப்பி கொள்வதற்காக இன்சூரன்ஸ் செய்வது வழக்கம். அப்படி அவர் இன்சூரன்ஸ் செய்திருந்தால் இடிந்து தரைமட்டமான கட்டிட உரிமையாளருக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

புதிய வீடு வாங்குபவர்களும் அந்த வீட்டிற்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இயற்கை பேரிடர் போன்ற காரணத்தால் விபத்து ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளருக்கு நஷ்ட ஈடு தொகை கிடைக்கும்.

பொதுவாக கடன் வழங்கும் வங்கிகளே தற்போது இன்சூரன்ஸ் செய்கிறார்கள். இதனால் வீட்டு கடன் மூலம் வாங்குபவர்கள் இன்சூரன்ஸ் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் சிக்கியவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை எதுவும் கிடைக்க வாய்ப்பு உள்ளதா? கட்டிட உரிமையாளர் இன்சூரன்ஸ் செய்திருந்தாரா? என்று விசாரித்தால் மட்டுமே இந்த உண்மை தெரிய வரும்.

பலியான குடும்பத்திற்கு இந்த தொகை ஆறுதல் தரும் மருந்தாக இருக்கும். இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எதிர்பார்க்கிறார்கள்.

 இடிந்த 11 மாடி கட்டிடத்தில் வீடு வாங்கியவர்கள் நிலை?: பில்டர் கருத்து

11 மாடி கட்டிடம் இடிந்ததில் வீடு வாங்கியவர்களின் நிலை பற்றி மற்றொரு பில்டர் கூறிய கருத்து வருமாறு:–

கட்டிடம் கட்டும் போது வீடுகள் இடிந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்பட்டுவிட்டால் அதற்கு பில்டர்தான் முழுப் பொறுப்பு. அவர் கட்டிடத்துக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தாலும், கோடிக்கணக்கில் இன்சூரன்ஸ் செய்திருக்க மாட்டார். 30 பேர்களுக்கு மேல் உயிரி இழப்பு ஏற்பட்ட இடத்தில் இயற்கையை குறை கூறியும் தப்பிக்க முடியாது.

இதில் பில்டர் நிலை இனி கேள்விக்குறி தான். வீடு வாங்கியவர்கள் இழப்பீடு கேட்டு பில்டரை அணுகுவார்கள். பணத்தை திருப்பி கேட்பார்கள். அவர் பணத்தை திருப்பி தர மறுக்கும் சூழலில் கோர்ட்டுக்குதான் போக முடியும். வங்கிக்கும் இதே நிலைதான். பெரிய உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளதால் வங்கி கொடுத்துள்ள கடன் தொகையை அரசு தள்ளுபடி செய்ய உத்தரவிடவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு பில்டர் கூறினார்.

Sources: 



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Compiled by

Disclaimer


Collection of important and burning Topics, News from all Dailies, Fortnight Magazines, etc., in order to highlight its importance to the viewers and also to keep it as ready reckoner by them so as to access it quickly from the concerned Sources which we quote them at the bottom of each Posts so as to extend our gratitude towards the Author of that Posts in their releases.



Followers

Search our Blog here

Google
 


News Feed from Various Dailies



THE HINDU - News Update

Expressbuzz - Columnists

Expressbuzz - Tamil Nadu

தினமணி: மெய்யாலுமா...? அரசியல் கிசுகிசு

Dinamani - Headlines

Dinamani - Politics

Dinamani - Tamil Nadu

Dinamani - Pondicherry

Dinamani - Cuddalore

Labels

Pondicherry (131) Tamil Nadu (129) ARTICLE (103) Editorial (91) aiadmk (62) jayalalithaa (59) dinamani (55) dmk (53) Karunanidhi (33) india (30) Ariankuppam (29) chief minister of tamil nadu (27) the hindu (27) railway (25) Congress (23) Supreme Court (22) THE HINDU (22) southeren railway (22) Dinamalar (21) Nuclear (21) chennai (21) US (20) Rain (19) frontline (19) wikipedia (19) PMK (18) Pratiba (18) President (18) karnataka (18) Train (17) Education (16) Elections (16) sri lanka (16) 2013 (15) 2012 (14) 123 Agreement (13) Madras High Court (13) Road (13) bangalore (13) election commission (13) nuke deal (13) Advocates (12) BEHS (12) Bridge (12) Facebook (12) Google (12) NPT (12) Politics (12) Youtube (12) 2010 (11) Interview (11) Legislative Assembly (11) Traffic (11) Video (11) abdul kalam (11) Accidents (10) Parliament (10) Private Schools (10) Tamil Eelam (10) police (10) BJP (9) Cuddalore District (9) Death (9) Environment (9) 2014 (8) BG Conversion (8) Ban (8) Website (8) water (8) water resources (8) Communist Parties (7) Examination (7) Flight (7) Government (7) Mayiladudurai (7) Pakistan (7) River (7) Schools (7) The New Indian Express (7) UNO (7) USA (7) Villupuram (7) ground water (7) prime minister (7) Andhra Pradesh (6) Beach (6) Cauvery (6) Children (6) Coimbatore (6) Court (6) Cricket (6) Jaya TV (6) Lok Sabha (6) Mobile Phones (6) Strike (6) cellphones (6) 10th Exam (5) Car (5) Dinakaran (5) High Court (5) MGR (5) Municipality (5) One Year Performance (5) Online (5) Petrol (5) Plastic (5) Political Party (5) Progress Card (5) RBI (5) Sethusamudram (5) Sports (5) Sun TV (5) banks (5) lawyers (5) madras (5) russia (5) temple (5) CEC (4) Corporation (4) Credit Card (4) DMDK (4) Health (4) International (4) MDMK (4) MLAs (4) Makkal TV (4) Mumbai (4) Nuclear standoff (4) PIB (4) Prices (4) SSLC (4) Sethu (4) Surgery (4) TIPS (4) TV (4) Tamil (4) Time Table (4) Vaiko (4) World Water Day (4) chief minister (4) computer (4) kerala (4) 2011 (3) 3rd World War (3) Actor (3) Adulterated items (3) Agriculture (3) Airport (3) Anti-Corruption (3) BSNL (3) Bandh (3) Bragadeeswara Temple (3) Britain (3) Cabinet Minister (3) Civil Supplies Department (3) Constitution (3) Cr.P.C. (3) Daily Thanthi (3) Dasara festival (3) EVMs (3) Foods (3) Garbage (3) Gazette (3) Helmets (3) Hospital (3) I-Day (3) IPC (3) IT (3) Ice (3) Kalaignar TV (3) Kollidam (3) MPs (3) Marina Beach (3) Medical (3) Microsoft (3) Mini Flight (3) Mysore (3) Panruti (3) Photos (3) Politicians (3) Pollution (3) Pranab Mukherjee (3) Public Exam (3) RTI Act (3) Raj TV (3) Rajiv Gandhi (3) Schoolboy (3) Smoking (3) Sonia Gandhi (3) South Africa (3) Speaker (3) Tanjore (3) Teacher (3) Telangana (3) Telephone (3) UNPA (3) Vijayakant (3) Yahoo (3) cbi (3) delhi (3) gujarat (3) mssrf (3) newspaper (3) planet (3) salem division (3) times of india (3) 1000 Rupee Note (2) 12th Exam (2) ATM (2) Aadhar Card (2) Advertisements (2) AirTel (2) Assembly Meeting (2) BESCOM (2) Birth Certificate (2) Botanical Garden (2) Boycott (2) Bus Stand (2) CCTVs (2) CJI (2) CPI (2) CPM (2) Cadres (2) Cancer (2) Christians (2) Church (2) Cigarettes (2) Compensation (2) Complaint (2) Cyclone (2) DTH (2) Daily Telegraph (2) Dams (2) Death Anniversary (2) Debates (2) Debit Card (2) Driving (2) ECR (2) Earth (2) Eye (2) Floods (2) Fonseka (2) Foreign Nations (2) Foreigners (2) Four Track Road (2) Full Moon (2) Genocide (2) Global Warming (2) Govt. Staffs (2) Green (2) Guru (2) Heart (2) Heritage buildings (2) Highways (2) Hogenakkal (2) Home Minister (2) Home Ministry (2) Hyderabad (2) ICICI (2) IT Capital (2) Independence (2) Judges (2) Katchatheevu Island (2) Kerala High Court (2) Kiran Bedi (2) LORRY (2) LPG Gas Connection (2) Law College (2) Legislative Assembly Complex (2) Lieutenant Governor (2) London (2) Losses (2) M.K.Stalin (2) Maalaimalar (2) Mahe (2) Mahinda Rajapaksa (2) Medicine (2) Mega TV (2) Moon (2) Motor Vehicles (2) Municipal waste (2) Musharraf (2) NASA (2) NDTV (2) Nagapattinam (2) Narendra Modi (2) National Highways (2) Nepal (2) Notifications (2) Obama (2) Pamban (2) Parking Place (2) Passport (2) Pazha Nedumaaran (2) Phones (2) Portfolios (2) Pratibha Patil (2) Private TV Channels (2) RBI Governor (2) RTO (2) Railway Minister (2) Rajya Sabha (2) Ramanathapuram (2) Ramdoss (2) Rameswaram (2) Ration Card (2) Rename (2) Reservation (2) Rivers Inter-link (2) Rowdies (2) Royal Cable Vision (2) Rule of Law (2) S.K.Upadhyay (2) SAARC (2) Sachin (2) Salary (2) Satellite (2) School Van (2) Sea Level Rising (2) Search Engine (2) Somnath Chatterjee (2) Speech (2) Subramanian Swamy (2) Sumangali Cable Vision (2) T.R.Baalu (2) TRAI (2) Tamil Murasu (2) Tax issues (2) Tea (2) Telecom (2) Theft (2) Tibet (2) Tiruchi (2) Tiruchirapalli (2) Tirupur District (2) Tobacco (2) Tourism (2) Veeranam Lake (2) Vellore (2) Vellore Jail (2) Vice President (2) Vigilance (2) Voters' List (2) Woman (2) World Heritage (2) World Tour (2) bangaladesh (2) eTicket (2) iTicket (2) kizhur (2) madurai (2) minister (2) monuments (2) o.paneerselvam (2) security (2) states (2) technology (2) television (2) vkc (2) கச்சத்தீவு (2) 100 feet Road (1) 10th Schedule (1) 11-storey Building (1) 16th World Editors' Forum (1) 1996 (1) 2001 (1) 2007 (1) 2008 (1) 2009 (1) 60 Years (1) 62nd World Newspaper Congress (1) 75 years of history (1) A.P.Hithendran (1) AC Bus (1) AIIMS (1) Abbreviations (1) Act (1) Actor Vijay (1) Adichanallur (1) Advertisement (1) Advocate Durai (1) Aerobridge (1) Agitation (1) Agricultural Lands (1) Ahmedabad blasts (1) Alert (1) Alive (1) Ambassador (1) Anbumani Ramadoss (1) Animation (1) Anna (1) Announcement (1) Annual Day (1) Anti-conversion (1) Apollo Hospitals (1) Application Form (1) Applications (1) Archaeology (1) Army (1) Art.370 (1) Asif Ali Zardari (1) Assam (1) Assassin (1) Assassination (1) Attestation (1) Auditor (1) Aurobindo Ashram (1) Australia (1) BCCI (1) BPL (1) Baby (1) Badminton (1) Baggage missing (1) Bahour (1) Bankruptcy (1) Bar Council of India (1) Barricades (1) Battery (1) Beggers (1) Bhubaneswar Express (1) Bihar (1) Bill (1) Birth centenary (1) Black Film (1) Blogger News Network (1) Body (1) Book Fair (1) Booking Rules (1) Bribe (1) Bricks (1) British (1) Browser (1) Budget Session (1) Burnt (1) Buses (1) Business Line (1) Busisness (1) CAG (1) CEO (1) CMDA (1) CMRP (1) CMs Conference (1) CNN IBN (1) Calendar (1) Car Festival (1) Cash Transaction Tax (1) Cataract (1) Cauvery Tribunal Award (1) Census (1) Chairman (1) Chalukyas (1) Change of Mobile (1) Charge Sheet (1) Chennai (South) Forum (1) Chennai Cricket Club (1) Chennai Metro Rail Project (1) Chidambaram (1) Chief Secretary (1) Child Pornography (1) China (1) Chinna Veerampattinam Beach (1) Chiranjeevi (1) Christmas (1) Chunnambar River (1) Cinema (1) Circular (1) Civil Judge (1) Civil Liability for Nuclear Damage Bill (1) Clash (1) Climate Change (1) Clonning (1) Closing (1) Cochin (1) Cock (1) Collector (1) Colleges (1) Colonial Rule (1) Comedian (1) Commune Panchayat (1) Companies (1) Consumer (1) Consumer goods (1) Contempt (1) Conversion (1) Convicts (1) Cooum (1) Copenhagen (1) Copenhagen Accord (1) Copyright (1) Courses (1) Daily Pioneer (1) Dayanidhi Maran (1) Defamation (1) Delhi High Court (1) Demise (1) Demolition (1) Derogatory remarks (1) Development Index for States (1) Devotional (1) Dhoti (1) Diamond Jubilee (1) Dina Thanthi (1) Dinamani Newspaper (1) Director (1) Diseases (1) Disney TV (1) Disqualification (1) Disrespect (1) Do's and Dont's (1) Doctors (1) Don Bosco School (1) Double Decker (1) Download (1) Dowry (1) Drainage (1) Dress Code (1) Drowned (1) Drunken (1) Dust bin (1) ECI (1) EU (1) EVKS Elangovan (1) Earth quake (1) Ebola virus disease (1) Egg (1) Egmore (1) Electricity (1) Elocution Competition (1) Emergency (1) Employment (1) Engineer (1) English (1) Extension (1) FC (1) FDI (1) FII (1) FPR Waste (1) Fake Identiy Cards (1) Fakes (1) Family Name (1) Farm Lands (1) Fast Food Stalls (1) Fatal injury (1) Faulty Printing (1) Federal Police (1) Fees (1) Fellowship Award (1) Fever (1) Finance Minister (1) Finger Prints (1) Fire (1) First Name (1) Fishermen (1) Flower Show (1) Foreign Ministers (1) Former Minister (1) Fort (1) Fort St. George (1) Forum Mall (1) Free of Cost (1) French Diviner (1) Fuel (1) Funeral ceremony (1) GSLV (1) Galaxy (1) Ganesha Pandals (1) Gangaikondacholapuram (1) Garib Rath (1) Gazetted Officers (1) German Architects (1) Germany (1) Gingee Fort (1) Given Name (1) Gmail (1) Goa (1) Goods Train (1) Goondas Act (1) Goons (1) Gopalsamy (1) Governor (1) Greetings (1) Guardian Newspapers Limited (1) Guru Peyarchi Palan (1) Guruvalaya Sports Coaching Centre (1) Guwahati (1) HSRP Number Plates (1) HSc (1) Half-ticket (1) Hawkers (1) Helicopter (1) Hen (1) Hindus (1) Hindustan Times (1) Home Page (1) Hotel (1) Hotmail (1) Howrah Superfast Express (1) Humanism (1) Humanity (1) Hyderabad Twin Blasts (1) IAS (1) IATR (1) IBSA (1) ICC (1) ICC World Cup 2007 (1) ICJ (1) IMCHRC (1) IMDT Act (1) IRCTC (1) ISRO (1) IT Act (1) Identiy Cards (1) Images (1) Independence Day (1) India Guinness records (1) Indian Kanoon (1) Indian Rupee (1) Inflation (1) Insects (1) Internet (1) Investment (1) Investors (1) Iran (1) Israel (1) JIPMER (1) Jammu & Kashmir (1) Jammu & Kashmir High Court (1) Jamsetji Tata National Virtual Academy (1) Japan (1) Job (1) Judicial Staffs (1) Judiciary (1) Jupiter (1) Justice Dalveer Bhandari (1) KAMBAR (1) Kachatheevu (1) Kachchathivu island (1) Kalaimagal Vizha (1) Kallanai (1) Kalrayan Hills (1) Kamal Nath (1) Kamarajar (1) Kamban Kalai Arangam (1) Kandasamy (1) Kapil Sibal (1) Karaikal-Nagoor (1) Kazhugumalai (1) Keerthiga (1) Kerla (1) Kids (1) Kingfisher (1) Kolar Gold Field (1) Kovaithambi (1) L.K.advani (1) LTTE (1) Lake (1) Lalu (1) Landline Phones (1) Levy (1) Licenses (1) Life Jackets (1) Lord Shiva (1) Lung disease (1) M.K.Alagiri (1) M.S.Gill (1) MCI (1) MET (1) MLC (1) MRP (1) MSO (1) MV Act (1) MYLAI (1) MYLAPORE (1) Madikrishnapuram (1) Madurai Bench (1) Madurai Corporation (1) Mahabalipuram (1) Maharashtra (1) Mailam (1) Malaysian Airlines (1) Malladi Krishnarao (1) Mamata Banerjee (1) Mangalore (1) Mangalore Express (1) Manirathnam (1) Marriages (1) Mars (1) Matriculation (1) Matrimony (1) Mayor (1) Meets (1) Melodies Songs (1) Metro Train (1) Mettur Dam (1) Microsoft Office 2010 (1) Middle Name (1) Mississippi (1) Misuse of pro-women law (1) Modi (1) Monarchy (1) Monetary (1) Moot Court (1) Mosquitoes (1) Moulivakkam (1) Mukumbu (1) Mullaiperiyar Dam (1) Mullaperiyar Dam (1) Mumbai Dadar Chalukya Express (1) Murali (1) Murder case (1) Murugan (1) Muscle power (1) Muslims (1) Mysore Palace (1) N.Ram (1) NATO (1) NGO (1) NH (1) NHAI (1) NSK alias N.S.Krishnan (1) Nalini (1) Namathu MGR (1) Namma Ooru Seythi (1) Nanauk (1) Nandhi (1) Narayana Murthy (1) National Crime Records Bureau (1) National Security Act (1) Natural (1) Natwar Singh (1) Naxalites (1) Nehru Street (1) Nelson (1) New Delhi Superfast Express (1) New Year (1) Night Hours (1) Nostradamus (1) November 1 (1) Numbers (1) ODI (1) OPS (1) Ocean (1) Offers (1) Office Bearers (1) Old Prison (1) Old Songs (1) Olympics (1) Open Page (1) Organ Transplant Operation (1) Ottavio Quattrocchi (1) Oussudu Lake (1) Overbridge (1) P.B.Sreenivas (1) P.Chidambaram (1) PBS (1) PIN Number (1) PMC (1) PONTEX (1) PRTC (1) PSLV (1) PTI (1) Paintings (1) Palakkad (1) Palani (1) Pallineliyanur (1) Pamphlets (1) Parents (1) Patta (1) Pennayar River (1) People's President (1) Perarivalan (1) Philosopher (1) Phone tapping (1) Physical Map (1) Pillaiyarkuppam (1) Pillayarkuppam (1) Planning Commission (1) Playback singer (1) Poisonous (1) Pollution Under Control Certificate (1) Pondicherry Code (1) Ponlait Milk Society (1) Poongothai (1) Porur Lake (1) Post Office (1) Postal Savings (1) Poverty (1) Power Generation (1) Prakash Karat (1) Prison (1) Privacy (1) Private Clinic (1) Priyanka (1) Proclaimed Offender (1) Property Tax (1) Prosecution (1) Prospectus (1) Protest (1) Public Meetings (1) Public Servant (1) Puli Devan (1) Pumpkin (1) Punjab (1) Puthiya Thalaimurai TV (1) Puzzle (1) Questions (1) RJD (1) RTE Act (1) Radiation (1) Raghuram Rajan (1) Railway Bridge (1) Raja (1) Raja Kannappan (1) Rajasulochana (1) Ramarajan (1) Real Name (1) Recovery Agents (1) Reddiarpalayam (1) Rejoinder (1) Release (1) Religion (1) Remand (1) Renovation (1) Reply in Tamil (1) Republic Day (1) Reshuffle (1) Results (1) Retirement (1) Riots (1) Rule 417-A (1) S.Ve.Sekar (1) SBI (1) SEBI (1) SEZs (1) SP (1) SRC (1) Sachar Commission (1) Salem Railway Division (1) Sand quarry issue (1) Saneeswarar (1) Sarkaria Commission (1) Sathankulam (1) Saturn (1) Saudia Arabia (1) Save Tamil (1) Scandal (1) Schedule (1) Sea Route (1) Self-attestation (1) Sex (1) Sharad Pawar (1) Sharekhan (1) Shilma Railway (1) Shimoga District (1) Ship (1) Shopping Malls (1) Shuttlecock (1) Signal (1) Sikh Temple (1) Singer (1) Sivanthi Adityan (1) Skulls (1) Smart Card (1) Social Network (1) Software (1) Sonia (1) Sony (1) Sornavur Anaicut (1) Spectrum (1) SpiceJet (1) Sree Nivas Tower (1) Sri Krishna Report (1) Sri Rangam (1) Sriharikota (1) State Consumer Disputes Redressal Commission (1) Statue (1) Stlain (1) Sub Registrar (1) Subramania Bharati (1) Summer Vacation (1) Sun (1) Sun Halo (1) Superfast Train (1) Surname (1) Survey Department (1) Suspension (1) Swine flu (1) Symbol (1) T.Kritinan (1) TATA (1) TATA Sumo (1) TNEB (1) TNPSC (1) Taluk (1) Tamil Actor (1) Terrace House Gardening (1) Thane (1) Thanjavur (1) Thenkinnam (1) Thirukkural (1) Thirumurai (1) Thirunallar (1) Thothukudi (1) Time-Table (1) Tindivanam (1) Tirunallar (1) Tirupati Train (1) Titanium (1) Toll-free number (1) Tornado (1) Transfer Certificate (1) Transport Department (1) Trees (1) Tuticorin (1) Twitter (1) Two Youths (1) Two-wheeler (1) UK (1) UNESCO (1) UPA (1) Uchimedu (1) Union Council of Ministers (1) Universe (1) University (1) Unlimited Night Calls (1) Unmanned Level Crossing (1) Unreserved Compartments (1) Uppalam (1) V.Narayanasamy (1) VCK (1) VETA (1) VIP (1) VOC (1) Vacuum Cleaner (1) Vaigai (1) Vamba Keerapalayam (1) Vedharanyam (1) Vehicles (1) Video-conferencing (1) Vidhana Soudha (1) Village (1) Villianur (1) Visa (1) Volley Ball Cup (1) WHO (1) WTC (1) WTO (1) War (1) Wedding (1) Whales (1) Women Police (1) Women's Right and Status (1) Women’s Reservation Bill (1) World Bank (1) World Records (1) World Tamil Conference (1) Yanam (1) Yesvantpur Garib Rath (1) argentina (1) atomic energy (1) azhagiri (1) bifurcation (1) bofors pay off case (1) buddhist (1) channels (1) child abuse (1) cyber crime (1) cyber security (1) e-Library (1) forensic laboratory (1) google sky (1) hyde act (1) i (1) india today (1) indira Gandhi (1) indus valley civilisation (1) information (1) ipod (1) jains (1) katnataka (1) koil (1) kudankulam (1) lectronic Voting Machines (1) mamalla (1) money lender (1) moscow (1) mumbai riot (1) rangasamy (1) salem (1) sculptor (1) telefilm (1) trucks (1) wordpress (1) அரியாங்குப்பம் (1) ஆதிச்சநல்லூர் (1) இதயக்கோவில் (1) எபோலா தீநுண்ம நோய் (1) கல்வராயன் மலைகள் (1) கல்வி சாதனையாளர் பட்டயம் (1) குடுவை ஆறு (1) சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபா (1) சிவராந்தகம் (1) சுழல் காற்று (1) தமிழர் உணவகம் (1) நுரையீரல் நோய் (1) பயிர்களை பராமரிப்பது எப்படி? (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)