Wednesday, May 1, 2013

PMK men violate Shore Temple sanctity


மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சேதப்படுத்திய பா.ம.க.,வினர்: மாநாடு நடத்த நிரந்தர தடை கோரி தொல்லியல் துறை மனு 

பதிவு செய்த நாள்: மே 01, 2013, 01:29 IST

சமீபத்தில், மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் பங்கேற்ற, பா.ம.க.,வினர், 40 ஆயிரம் பேர், உலக பாரம்பரிய சின்னமான கடற்கரை கோவிலில், அத்துமீறி நுழைந்தனர். மேலும், கோவில் கோபுரத்தில் ஏறி, தங்கள் கட்சிக் கொடியையும் நட்டு, கோவில் பின்புறத்தில் உள்ள தடுப்பு வேலிகளை சேதப்படுத்தினர். இது, 1,300 ஆண்டுகள் பழமை வா#ந்த கோவிலுக்கு, பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அங்கு, அரசியல் கட்சி மாநாடு நடத்த, நிரந்தர தடை கோரி, மத்திய தொல்லியல் துறையினர், மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இப்பிரச்னையில், தமிழக அரசு, உடனடி முடிவெடுக்க வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாமல்லபுரத்தில், வன்னியர் சங்க மாநாடு நடத்த முடிவெடுத்து, விளம்பரங்கள் செய்த போது, தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. பின், 10க்கும் மேற்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என, தமிழக அரசு நிபந்தனை விதித்தது. அதற்கு, அச்சங்க தலைவர்கள், "நிபந்தனைகளை மீற மாட்டோம்' என, கையெழுத்திட்டு, அனுமதி பெற்றனர். 

அதில், "மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாமல்லபுர கடற்கரை கோவிலுக்கு, எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது' என்ற நிபந்தனை, மிக முக்கியமானது. ஆனால், மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற, பல ஆயிரக்கணக்கான, பா.ம.க., கட்சியினர், இந்த நிபந்தனையை மீறியுள்ளனர்.

இதனால், தொன்மை வா#ந்த பல்லவ காலச் சின்னத்திற்கு,சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, "மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் வேலி, பூங்கா போன்றவற்றை, பா.ம.க.,வினர் சேதப்படுத்தி, கோவில் கோபுரத்தில், கட்சி கொடியை நட்டனர். 

மேலும், அங்குள்ள பொதுமக்களையும், உள்ளூர் மக்களையும், மறைமுகமாக, வன்கொடுமை செய்துள்ளனர்' என்றார்.
இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த ஆண்டு, சித்திரை முழு நிலவு கொண்டாட்டத்தின் போது, கோவிலில், ஆயிரக்கணக்கானோர் நுழைவுக் கட்டணமின்றி, அத்துமீறி நுழைந்தனர். இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு ஏற்கனவே தகவல் தெரிவித்தோம். கோவில் பாதுகாப்பு பணியில், குறைந்த அளவு அதிகாரிகளே, இருப்பர். 

வழக்கமாக வரும் பார்வையாளர்களை, ஒழுங்குப்படுத்த குறைந்த அளவு பாதுகாவலர்கள் போதும் என நினைத்தோம்; அது மட்டுமின்றி, மாநாட்டுக்கு வருபவர்கள், கோவில் பக்கம் வர மாட்டார்கள் என, நினைத்தோம். ஆனால், கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது.

போதுமான அளவில் போலீஸ் பாதுகாப்பும் இல்லை. இதனால், எங்கள் பாதுகாப்பு எங்கள் கைமீறி போய் விட்டது.

அதே போலவே, இம்முறையும் நடக்கக் கூடாது என்பதற்காக, மாவட்ட நிர்வாகத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தோம். அதனால், போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால், மரக்காணத்தில், நடந்த கலவரத்தை தடுப்பதற்காக, பெரும்பாலான போலீசார், அங்கு சென்று விட்டனர்.

மாநாடு நடந்த அன்று, மதியத்திலிருந்து, மாலை வரை, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நுழைவு கட்டணம் செலுத்தாமல் கோவிலுக்குள் நுழைந்தனர். கோவில் கோபுரத்தில், பா.ம.க., கொடியை நட்டனர். அதை எதிர்த்து கேள்வி கேட்ட, பாதுகாப்பு பணியாளர்களையும், ஆபாச வார்த்தைகளால் திட்டினர். 

கோவில் பின்புறம் இருந்த, வேலிகம்பிகளை சேதப்படுத்தினர். போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மாநாடு முடிந்தவுடன், பா.ம.க.,வினர் கோவிலுக்குள் என்னென்ன செய்தனர், என்பது குறித்து, அறிக்கை அனுப்பி உள்ளோம். மேலும், இனிமேல் மாமல்லபுரம் கடற்கரையில், அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு, நிரந்தரதடை விதிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கும், மத்திய அர"க்கும் கோரிக்கை விடுத்து கடிதம்எழுதியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

உலக பாரம்பரியத்துக்கு எடுத்துக்காட்டு!

ஐ.நா., அமைப்பான, "யுனெஸ்கோ'வின், உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும், மாமல்லபுரம் கடற்கரை கோவில், பல்லவர் கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இரண்டாம் நரசிம்ம வர்மானால் ( ராஜசிம்மன், கி.பி., 700- 728) கட்டப்பட்டது. இக்கோவிலின் கட்டமைப்பு, தென்னிந்தியாவின் பிற்கால கோவில்களின் கட்டமைப்புக்கு அடித்தளமாக இருந்தது, என, தொல்லியல்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தமிழக கலைகளையும், கலாச்சாரத்தையும் காக்கும், கலாச்சார காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சியினர், தமிழகத்தின் முக்கிய பாரம்பரிய சின்னமான, கடற்கரை கோவிலை, சேதப்படுத்த முயன்றது, வேதனை அளிக்கிறது என்கின்றனர், மத்திய தொல்லியல் துறையினர்.

சேதப்படுத்தினால் தண்டனை என்ன?

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, பாரம்பரிய சின்னங்களை சேதப்படுத்தினாலோ, நினைவுச் சின்னங்களின் மீது பெயர் எழுதினாலோ, 

கடும் தண்டனை வழங்கப்படும். "தொல்லியல் நினைவு சின்னங்கள் பாதுகாப்பு சட்டம், 2010' ன் படி, நினைவு சின்னங்களை சேதப்படுத்தினால், 2 ஆண்டு, கடுங்காவல் தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம். சேதத்தின் தன்மையை பொறுத்து, லட்ச ரூபாயும், இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படும்.

தொல்லியல்துறைக்கு மதிப்பளித்த தமிழக அரசு!

சட்டசபை வைரவிழா கொண்டாடுவதை ஒட்டி, சென்னை ராஜாஜி சாலையில், வைரவிழா நினைவுத்தூண் அமைக்க, தமிழக அரசு முடிவெடுத்தது. போர் நினைவுச் சின்னம் அருகில், நினைவுத் தூண் அமைக்க, முதல்வர் ஜெ., அடிக்கல் நாட்டினார். கடந்த, 2010ம் ஆண்டு, தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கும் சட்டத்தின் படி, நினைவுச் சின்னமான, புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்திலிருந்து, 300 மீட்டர் தொலைவில், புதிய கட்டடங்கள் அமைக்க, தடை செய்யப்பட்ட பகுதியாகும். 

முதல்வர் அடிக்கல் நாட்டிய போதும், மத்திய தொல்லியல் சட்டத்திற்கு மதிப்பளித்து, நேப்பியர் பாலம் அருகில், வைரவிழா நினைவுத் தூண் அமைக்க, தமிழக அரசு முன் வந்தது. தமிழகத்தின் முக்கிய கட்டடம் கட்ட, தொல்லியல் துறை குறுக்கேவந்த போதும், முதல்வர் அதற்கு மதிப்பளித்து, நினைவுத் தூண் அமையும் இடத்தை மாற்றியமைத்தார்.

தற்போது, நினைவுச் சின்னத்துக்கே, பங்கம் ஏற்படும் சூழ்நிலையில், முதல்வர் கடுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அதுவே, நினைவு சின்னங்களை, சேதப்படுத்துவதற்கு முன்னுதாரணமாக அமைந்து விடும்.

ஒட்டு மொத்த கோவிலுக்கே ஆபத்து!

இது குறித்து, தொல்லியல் துறை அறிஞர் ஒருவர் கூறியதாவது: மாமல்லபுரம் கடற்கரை கோவில், 1,300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்பகுதியில், 7 கோவில்கள் இருந்ததாக, வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், ஒரே ஒரு கோவில் மட்டுமே எஞ்சி உள்ளது. தமிழக கோவில்களின் கட்டட கலைக்கு, இக்கோவில் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

1,300 ஆண்டுகளாக, கடற்கரையில் இருப்பதால், உப்புக்காற்று கோவில் கற்களில் படிந்து, கற்களை அரித்து வருகிறது. இதனால், கோவில் கட்டுமானம் சிதையும் நிலையில் உள்ளது. ஆண்டு தோறும், தொல்லியல் துறையின் சார்பில், கற்களில் படிந்துள்ள உப்பை நீக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 

அங்குள்ள கற்கள், அபாயகரமான சூழ்நிலையில் உள்ளதால், ஒரு கல் கீழே விழுந்தாலும், ஒட்டு மொத்த கோவிலும் சரியும் நிலை உள்ளது. தற்போது, மாநாட்டுக்கு வந்தவர்கள், அதில் ஏறியது, அதன் கட்டுமானத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. இது முற்றிலும் தவறானது. கோவில் சுவர்களுக்கு அருகிலேயே, எவரையும் அனுமதிக்காத போது, அக்கோவில் கோபுரத்தில் ஏறி, கொடியை நாட்டியது, முற்றிலும் தவறானது.இவ்வாறு அவர் கூறினார்.

Courtesy_

Also read the related stories


கைது: பா.ம.க., தலைவர் ராமதாஸ்.... திருச்சி சிறையில் அடைப்பு 

பதிவு செய்த நாள்: மே 01, 2013, 00:09 IST

விழுப்புரம்: மரக்காணத்தில் நடந்த கலவர சம்பவத்தில், போலீஸ் நடவடிக்கையை கண்டித்து, நேற்று, விழுப்புரத்தில் பா.ம.க.,வினர், தடையை மீறி நடத்திய ஆர்பாட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். 15 நாள், "ரிமாண்ட்' செய்யப்பட்ட அவர், திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 25ம் தேதி, வன்னிய இளைஞர் பெருவிழா, மாமல்லபுரத்தில் நடந்தது. 

கிழக்கு கடற்கரை சாலை வழியாக, மாமல்லபுரத்தில் நடக்கும் விழாவிற்கு சென்று கொண்டிருந்தவர்களுக்கும், மரக்காணத்தில் ஒரு பிரிவு மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு, "விழாவிற்கு வந்தவர்களே காரணம்' என, கடந்த 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார். பா.ம.க., தரப்பில், "போலீசார் போதிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செ#யாதது தான் மோதலுக்கு காரணம்' என, குற்றம்சாட்டப்பட்டது.


இந்த பின்னணியில், வி.சி., கட்சியினர் மற்றும் மோதலை ஒட்டிய போலீஸ் நடவடிக்கையை கண்டித்து, விழுப்புரத்தில், நேற்று காலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நேற்று முன்தினம் போலீசார் தடை விதித்தனர்.

ஆனால், நேற்று காலை 9:00 மணிக்கு, பா.ம.க., மாநில துணை பொதுச்செயலர் செந்தமிழ்செல்வன் தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் ரயிலடியில் ஆர்ப்பாட்டத்திற்காகத் திரண்டனர். பாதுகாப்பு பணியில் டி.ஐ.ஜி., முருகன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

முற்பகல் 11:00 மணிக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், திண்டிவனத்திலிருந்து காரில் விழுப்புரம் வந்தார். நகர எல்லையில் உள்ள காட்பாடி ரயில்வே கேட் அருகே, 11:30 மணிக்கு, ராமதாஸ் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

காரிலிருந்த ராமதாசிடம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை கருதி, கைது செய்ய உள்ளதாக டி.ஐ.ஜி., முருகன் கூறினார். அதனை ஏற்க மறுத்த ராமதாஸ், ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சிக்கும்போது, கைது செய்யுமாறு கூறிவிட்டு சென்றார்.

பகல் 12:15 மணிக்கு, விழுப்புரம் ரயிலடிக்கு வந்து, காரிலிருந்து இறங்கிய ராமதாசை, போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். மேலும், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, புதுச்சேரி மாநில செயலர் அனந்தராமன், முன்னாள் எம்.பி, தன்ராஜ், அமைப்பு செயலர் செல்வக்குமார் உட்பட, 60 பேரை போலீசார் கைது செய்து, அதே வாகனத்தில் ஏற்றிச் சென்று, விழுப்புரம் கிழக்கு, பாண்டி ரோட்டில் உள்ள பாலாஜி மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மாலை 5:00 மணிக்கு, பாலாஜி மண்டபத்திற்கு வந்த டி.ஐ.ஜி., முருகன், ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை ஒன்றாக அமர வைத்தார். பா.ம.க., நிர்வாகிகள் வைத்துள்ள பணம், மொபைல் போன்களை உறவினர்களிடம் 
ஒப்படைக்குமாறு போலீசார் கூறினர். 

பா.ம.க.,வினர் மாலை 5:30 மணி முதல் 6:30 வரை உறவினர்களை வரவழைத்து தங்களின் மொபைலை தந்தனர்.இரவு 7:00 மணிக்கு, பாலாஜி மண்டபத்திற்கு வந்த விழுப்புரம் இரண்டாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் முகிலாம்பிகை முன்னிலையில், பா.ம.க., நிர்வாகிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை சிறையில், 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

வழக்குகள்

விழுப்புரத்தில் நடந்தஇச்சம்பவத்தில், ராமதாஸ் மீது, சட்டவிரோதமாக அனுமதியின்றி ஒன்றுகூடுதல்(143), கும்பலாகக் கூடி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்(188) மற்றும் அரசுக்கு எதிராக குந்தகம் விளைவித்தல், ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 15 நாள் காவலில் வைக்கப்பட்ட அனைவரும், திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிறை செல்ல தயாராகத்தான் வந்துள்ளேன் ராமதாஸ் 

நான் சிறை செல்ல தயார்படுத்தி கொண்டுதான் புறப்பட்டு வந்துள்ளேன்,'' என, ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது, கைது செய்யப்பட்ட ராமதாஸ், திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தார்.அப்போது, ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் அனுமதியளித்த போலீசார், நேற்று முன்தினம் மாலை, திடீரென அனுமதி மறுத்துள்ளனர். பா.ம.க., தொண்டர்கள் கூடி அமைதியான வழியில் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் அனைத்து நிர்வாகிகளையும் கைது செய்துள்ளனர்.

நான் சிறை செல்ல தயார்படுத்தி கொண்டுதான் புறப்பட்டு வந்துள்ளேன்.தொண்டர்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசக் கூடாது என போலீசார் கூறியதற்காக, பேசாமல் அமைதியாக வந்துள்ளேன். காவல் துறையினர் செய்த தவறுகளை மூடி மறைத்து, அவர்கள் எழுதி கொடுத்த அறிக்கையை முதல்வர் அப்படியே வாசித்துள்ளார். இதன் மூலம் முதல்வர், 2 கோடி வன்னிய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார். அவர்கள் வேதனைப்படும் வகையில் உண்மைக்கு மாறான செய்திகளை முதல்வர் சொல்லியுள்ளார்.

மரக்காணம் ஓர் பதற்றமான ஊர் என்பதை, கடந்த 24ம் தேதி, திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப் பட்டு உள்ளது. இதுபோல் மாமல்லபுரத்தில், 2002ம் ஆண்டு, வன்னிய இளைஞர்கள் மரக்காணம் வழியாக சென்ற போது, இருவரை, பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த சம்பவம் மரக்காணத்தில் நடந்துள்ளது. இதுபோன்ற பதற்றமான இடத்தில் போலீசார்,2 நாட்களுக்கு முன்னதாக தகுந்த நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்திருந்தால், கலவரம் நடந்திருக்காது. இதற்கு போலீசார் தவறிவிட்டனர். 

பதற்றமான மரக்காணம் பகுதியில், அன்று, மூன்று போலீசாரை மட்டும் பாதுகாப்பிற்கு நிறுத்தியிருந்தனர்.கலவரத்தின் போது, போலீசார், மரக்காணத்தில், 20 கி.மீ. தொலைவிற்கு அணிவகுத்து நின்ற பா.ம.க.,வினர் வாகனங்களை, வேறு திசையில், மாற்றுவழி மூலம் அனுப்பியிருந்தால், இச்சம்பவம் நடந்திருக்காது.

மாமல்லபுரம் நோக்கி வந்து என்ன நடக்கிறது என, தெரியாமல் வாகனத்தை விட்டு கீழே நின்றிருந்த வன்னியர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், 15 வன்னியர்கள் பாதிக்கப் பட்டு உள்ளனர்.கலவரத்தில், கும்பகோணத்தை சேர்ந்த விவேக், அரியலூரை சேர்ந்த செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டனர். இதில் விவேக் விபத்தால் தான் இறந்தார் என, அவரது உறவினரை போலீசார் மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர்.இந்த உண்மை அனைத்தையும் காவல் துறையினர் மறைத்து விட்டு, தவறான தகவல்களை முதல்வருக்கு கொடுத்துள்ளனர்.

மரக்காணம் சம்பவத்தில், நியாயமான விசாரணை வேண்டும் என்றால், சி.பி.ஐ., விசாரணை வையுங்கள் அல்லது பணியில் உள்ள ஐகோர்ட் நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்துங்கள் என, நாங்கள் கேட்கிறோம்.இவ்வாறு, ராமதாஸ் கூறினார்.

Courtesy_

Also read the related stories


PMK men violate Shore Temple sanctity

CHENNAI, April 30, 2013


D.MADHAVAN
PMK supporters hoist party flags atop Shore Temple during the party  conference on Thursday. Photo: ASI
PMK supporters hoist party flags atop Shore Temple during the party conference on Thursday. Photo: ASI

The sanctity of the Shore Temple at Mamallapuram was violated last Thursday when thousands of PMK cadres clambered on to it and hoisted flags of the party and Vanniyar Sangham.

In the process, the structure of the seventh century AD monument, one of 32 at the World Heritage site, could have been weakened.

The fences were uprooted, and the lawn and entrance gate damaged, sources in the Archaeological Survey of India (ASI) said.

PMK supporters had gathered at the Shore Temple for a public meeting as part of the annual Vanniyar Sangham conference that coincides with Chitra Pournami.

ASI sources said it had the authority to give or refuse permission only within the site area. The conference was conducted on the southern end of the World Heritage site.

"The structure of the shore temple has weakened due to years of onslaught from sea wind. Dozens of Vanniyar Sangham workers and PMK men walked all over the premises, climbed up the temple and hoisted six flags. During last year's conference, they acted in a similar fashion at the temple,"

G. Maheshwari, superintending archaeologist, ASI (Chennai Circle), told The Hindu. "We have written to the DGP about the damage to the structure," she added.

On April 15, the ASI (Chennai Circle) had written to the Kancheepuram revenue and police authorities seeking adequate police protection for the monuments on the day of the conference.

The ASI said the police and the District Collector did not provide adequate security. Only six policemen were deployed. Even they were withdrawn at around 11 a.m. for duty elsewhere in the district.

ASI sources said that at around 11 a.m, thousands of PMK men forcibly entered the premises by breaking the lock on the Shore Temple gate. A team led by A.Jellani Bashir, senior conservation archaeologist, rushed to the spot and requested the men to leave. They, however, engulfed the temple premises. "We had to stop issuing tickets to tourists as the entire temple was filled with PMK men. They also hoisted their party flag on the Pallava-era lighthouse, a protected monument and part of the heritage site," said an ASI official.  

Courtesy_


Also read the related stories


பா.ம.க.வினர் இன்றும் வன்முறை: வட மாவட்டங்களில் பதற்றம் (படங்கள்)

செய்திகள்: ப்ரீத்தி கார்த்திக், கிருபாகரன், பா.ஜெயவேல், எஸ்.ராஜசெல்லம், குணசீலன்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து அக்கட்சியினர் இன்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு, சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பா.ம.க.வினர் போராட்டங்களை  நடத்தி வருகின்றனர். இதனால் வட மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.


பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை நிலவு பெருவிழா நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து விழாவிற்கு சென்ற ஆயிரக்கணக்கானோரில் சிலர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் பேருந்துகள், கார்கள் எரிக்கப்பட்டன. தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.


இதனிடையே, மரக்காணம் கலவரத்தை கண்டித்து நேற்று விழுப்புரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால், ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.


இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட ராமதாசை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து இரவு 11 மணியளவில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்ட அவர், அதிகாலை 4 மணியளவில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும் கட்சித் தலைவர் ஜி.கே.மணி மற்றும் 400 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து திருச்சி மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறை முழுவதும் எங்கு பார்த்தாலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் தலைகளாகவே தெரிந்தன.


பத்திரிக்கையாளர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் ராமதாஸ் பேச மறுத்து விட்டார். காவல்துறையினர் பத்திரிக்கையாளர்களை தடுப்பதிலும். ராமதாசை சிறையில் அடைப்பதிலும் குறியாக இருந்தனர். நுழைவாயிலின் அருகே அவருடைய கார் சென்றது. இதையடுத்து அவசர அவசரமாக ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் அவரது கட்சியினரால்  போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கைதாகினர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் சென்னை -பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு 8 கிமீ தொலைவில் தாமல் என்ற இடத்தில் அரசு பேருந்து ஒன்று சமூக விரோதிகளால் கொளுத்தப்பட்டது.

காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் சென்ற டி.என் 23 நம்பர் 2296 என்ற எண் கொண்ட அப்பேருந்தை தாமல் அருகே வழிமடக்கிய ஒரு கும்பல் கற்களை சரமாரியாக வீசினர். இதில் பயந்துபோன பயணிகள் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். இச்சமயத்தில் அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை பேருந்து மீது ஊற்றி தீ வைத்துள்ளது. இதில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது.

தகவலறிந்து தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தன. உடனடியாக காஞ்சிபுரம் எஸ்.பி சேவியர் தன்ராஐ சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவத்தால் அடுத்தடுத்து வேலூர் செல்லவிருந்த பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.


இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிந்து 15 க்கும் மேற்பட்டவர்களை விசாரணை செய்ததில் தாமல் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் என்பவர் தலைமையில் வந்த மர்மகும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை காவல்துறை உறுதி செய்துள்ளது.

நேற்று மாலை 6.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளார் திருக்கச்சூர் ஆறுமுகம் மாமல்லபுரம் போலீசாரால் தடுத்து கைது செய்தனர். 7 மணிக்கு பாலூர் காவல்நிலையத்திற்கு அவர் கொண்டு வரப்பட்டார். சித்திரை விழாவிற்கு காவல்துறையால் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியதாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, திருக்கழுக்குன்றம் முன்சிப் கோர்ட்டில் நீதிபதி சிவா முன்பு இன்று காலை 7  மணிக்கு ஆஜர்படுத்தப்பட்ட ஆறுமுகத்தை 14ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஆறுமுகம், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாமல்லபுரம் அருகே உள்ள மணமை கிராமத்தில் நேற்று இரவு 10 மணிக்கு வேன் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. ஓ.எம்.ஆர் பகுதியிலும் அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் பகுதியில் இரண்டு அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது.

திருக்கழுக்குன்றம் முடையூர் பகுதியில் பா.ம.க.வினர் பனைமரங்களை வெட்டி சாலையில் போட்டி மறியல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது. திருப்பத்தூரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டி அருகே பா.ம.க.வினர் நேற்றிரவு 9 மணியளவில் மறித்துள்ளனர். கலவரக் கும்பல் பேருந்தில் இருந்த அனைவரையும் இறக்கி விட்டு பேருந்துக்கு தீ வைத்தனர். இதில் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்பு கூடானது. இது தொடர்பாக 17 கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் ஊத்தங்கரையிலிருந்து கல்லாவி செல்லும் வழியில் கலலூர் என்ற கிராமம் அருகே அரசு டவுன் பேருந்து கண்ணாடிகளை மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது. இது தொடர்பாகவும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

நேற்றிரவு 11 மணியளவில் கும்பகோணத்திலிருந்து ஜெயம்கொண்டம் சென்ற அரசு பேருந்து ஒன்று கோவலாச்சேரி என்ற இடத்தி்ல் வந்த போது மர்ம கும்பலால் கண்ணாடி உடைக்கப்பட்டது.

கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் சென்ற தனியார் பேருந்து ஒன்று திருவலஞ்சுழி என்ற இடத்தி்ல் வந்த போது மர்ம நபர்களால் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கும், கும்பகோணத்திலிருந்து சென்னைக்கும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இது போன்று சில பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், எஸ்.பி. அன்பு அங்கு முகாமிட்டு பிரச்னை ஏதும் நடைபெறாமல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Courtesy_
http://news.vikatan.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Compiled by

Disclaimer


Collection of important and burning Topics, News from all Dailies, Fortnight Magazines, etc., in order to highlight its importance to the viewers and also to keep it as ready reckoner by them so as to access it quickly from the concerned Sources which we quote them at the bottom of each Posts so as to extend our gratitude towards the Author of that Posts in their releases.



Followers

Search our Blog here

Google
 


News Feed from Various Dailies



THE HINDU - News Update

Expressbuzz - Columnists

Expressbuzz - Tamil Nadu

தினமணி: மெய்யாலுமா...? அரசியல் கிசுகிசு

Dinamani - Headlines

Dinamani - Politics

Dinamani - Tamil Nadu

Dinamani - Pondicherry

Dinamani - Cuddalore

Labels

Pondicherry (131) Tamil Nadu (129) ARTICLE (103) Editorial (91) aiadmk (62) jayalalithaa (59) dinamani (55) dmk (53) Karunanidhi (33) india (30) Ariankuppam (29) chief minister of tamil nadu (27) the hindu (27) railway (25) Congress (23) Supreme Court (22) THE HINDU (22) southeren railway (22) Dinamalar (21) Nuclear (21) chennai (21) US (20) Rain (19) frontline (19) wikipedia (19) PMK (18) Pratiba (18) President (18) karnataka (18) Train (17) Education (16) Elections (16) sri lanka (16) 2013 (15) 2012 (14) 123 Agreement (13) Madras High Court (13) Road (13) bangalore (13) election commission (13) nuke deal (13) Advocates (12) BEHS (12) Bridge (12) Facebook (12) Google (12) NPT (12) Politics (12) Youtube (12) 2010 (11) Interview (11) Legislative Assembly (11) Traffic (11) Video (11) abdul kalam (11) Accidents (10) Parliament (10) Private Schools (10) Tamil Eelam (10) police (10) BJP (9) Cuddalore District (9) Death (9) Environment (9) 2014 (8) BG Conversion (8) Ban (8) Website (8) water (8) water resources (8) Communist Parties (7) Examination (7) Flight (7) Government (7) Mayiladudurai (7) Pakistan (7) River (7) Schools (7) The New Indian Express (7) UNO (7) USA (7) Villupuram (7) ground water (7) prime minister (7) Andhra Pradesh (6) Beach (6) Cauvery (6) Children (6) Coimbatore (6) Court (6) Cricket (6) Jaya TV (6) Lok Sabha (6) Mobile Phones (6) Strike (6) cellphones (6) 10th Exam (5) Car (5) Dinakaran (5) High Court (5) MGR (5) Municipality (5) One Year Performance (5) Online (5) Petrol (5) Plastic (5) Political Party (5) Progress Card (5) RBI (5) Sethusamudram (5) Sports (5) Sun TV (5) banks (5) lawyers (5) madras (5) russia (5) temple (5) CEC (4) Corporation (4) Credit Card (4) DMDK (4) Health (4) International (4) MDMK (4) MLAs (4) Makkal TV (4) Mumbai (4) Nuclear standoff (4) PIB (4) Prices (4) SSLC (4) Sethu (4) Surgery (4) TIPS (4) TV (4) Tamil (4) Time Table (4) Vaiko (4) World Water Day (4) chief minister (4) computer (4) kerala (4) 2011 (3) 3rd World War (3) Actor (3) Adulterated items (3) Agriculture (3) Airport (3) Anti-Corruption (3) BSNL (3) Bandh (3) Bragadeeswara Temple (3) Britain (3) Cabinet Minister (3) Civil Supplies Department (3) Constitution (3) Cr.P.C. (3) Daily Thanthi (3) Dasara festival (3) EVMs (3) Foods (3) Garbage (3) Gazette (3) Helmets (3) Hospital (3) I-Day (3) IPC (3) IT (3) Ice (3) Kalaignar TV (3) Kollidam (3) MPs (3) Marina Beach (3) Medical (3) Microsoft (3) Mini Flight (3) Mysore (3) Panruti (3) Photos (3) Politicians (3) Pollution (3) Pranab Mukherjee (3) Public Exam (3) RTI Act (3) Raj TV (3) Rajiv Gandhi (3) Schoolboy (3) Smoking (3) Sonia Gandhi (3) South Africa (3) Speaker (3) Tanjore (3) Teacher (3) Telangana (3) Telephone (3) UNPA (3) Vijayakant (3) Yahoo (3) cbi (3) delhi (3) gujarat (3) mssrf (3) newspaper (3) planet (3) salem division (3) times of india (3) 1000 Rupee Note (2) 12th Exam (2) ATM (2) Aadhar Card (2) Advertisements (2) AirTel (2) Assembly Meeting (2) BESCOM (2) Birth Certificate (2) Botanical Garden (2) Boycott (2) Bus Stand (2) CCTVs (2) CJI (2) CPI (2) CPM (2) Cadres (2) Cancer (2) Christians (2) Church (2) Cigarettes (2) Compensation (2) Complaint (2) Cyclone (2) DTH (2) Daily Telegraph (2) Dams (2) Death Anniversary (2) Debates (2) Debit Card (2) Driving (2) ECR (2) Earth (2) Eye (2) Floods (2) Fonseka (2) Foreign Nations (2) Foreigners (2) Four Track Road (2) Full Moon (2) Genocide (2) Global Warming (2) Govt. Staffs (2) Green (2) Guru (2) Heart (2) Heritage buildings (2) Highways (2) Hogenakkal (2) Home Minister (2) Home Ministry (2) Hyderabad (2) ICICI (2) IT Capital (2) Independence (2) Judges (2) Katchatheevu Island (2) Kerala High Court (2) Kiran Bedi (2) LORRY (2) LPG Gas Connection (2) Law College (2) Legislative Assembly Complex (2) Lieutenant Governor (2) London (2) Losses (2) M.K.Stalin (2) Maalaimalar (2) Mahe (2) Mahinda Rajapaksa (2) Medicine (2) Mega TV (2) Moon (2) Motor Vehicles (2) Municipal waste (2) Musharraf (2) NASA (2) NDTV (2) Nagapattinam (2) Narendra Modi (2) National Highways (2) Nepal (2) Notifications (2) Obama (2) Pamban (2) Parking Place (2) Passport (2) Pazha Nedumaaran (2) Phones (2) Portfolios (2) Pratibha Patil (2) Private TV Channels (2) RBI Governor (2) RTO (2) Railway Minister (2) Rajya Sabha (2) Ramanathapuram (2) Ramdoss (2) Rameswaram (2) Ration Card (2) Rename (2) Reservation (2) Rivers Inter-link (2) Rowdies (2) Royal Cable Vision (2) Rule of Law (2) S.K.Upadhyay (2) SAARC (2) Sachin (2) Salary (2) Satellite (2) School Van (2) Sea Level Rising (2) Search Engine (2) Somnath Chatterjee (2) Speech (2) Subramanian Swamy (2) Sumangali Cable Vision (2) T.R.Baalu (2) TRAI (2) Tamil Murasu (2) Tax issues (2) Tea (2) Telecom (2) Theft (2) Tibet (2) Tiruchi (2) Tiruchirapalli (2) Tirupur District (2) Tobacco (2) Tourism (2) Veeranam Lake (2) Vellore (2) Vellore Jail (2) Vice President (2) Vigilance (2) Voters' List (2) Woman (2) World Heritage (2) World Tour (2) bangaladesh (2) eTicket (2) iTicket (2) kizhur (2) madurai (2) minister (2) monuments (2) o.paneerselvam (2) security (2) states (2) technology (2) television (2) vkc (2) கச்சத்தீவு (2) 100 feet Road (1) 10th Schedule (1) 11-storey Building (1) 16th World Editors' Forum (1) 1996 (1) 2001 (1) 2007 (1) 2008 (1) 2009 (1) 60 Years (1) 62nd World Newspaper Congress (1) 75 years of history (1) A.P.Hithendran (1) AC Bus (1) AIIMS (1) Abbreviations (1) Act (1) Actor Vijay (1) Adichanallur (1) Advertisement (1) Advocate Durai (1) Aerobridge (1) Agitation (1) Agricultural Lands (1) Ahmedabad blasts (1) Alert (1) Alive (1) Ambassador (1) Anbumani Ramadoss (1) Animation (1) Anna (1) Announcement (1) Annual Day (1) Anti-conversion (1) Apollo Hospitals (1) Application Form (1) Applications (1) Archaeology (1) Army (1) Art.370 (1) Asif Ali Zardari (1) Assam (1) Assassin (1) Assassination (1) Attestation (1) Auditor (1) Aurobindo Ashram (1) Australia (1) BCCI (1) BPL (1) Baby (1) Badminton (1) Baggage missing (1) Bahour (1) Bankruptcy (1) Bar Council of India (1) Barricades (1) Battery (1) Beggers (1) Bhubaneswar Express (1) Bihar (1) Bill (1) Birth centenary (1) Black Film (1) Blogger News Network (1) Body (1) Book Fair (1) Booking Rules (1) Bribe (1) Bricks (1) British (1) Browser (1) Budget Session (1) Burnt (1) Buses (1) Business Line (1) Busisness (1) CAG (1) CEO (1) CMDA (1) CMRP (1) CMs Conference (1) CNN IBN (1) Calendar (1) Car Festival (1) Cash Transaction Tax (1) Cataract (1) Cauvery Tribunal Award (1) Census (1) Chairman (1) Chalukyas (1) Change of Mobile (1) Charge Sheet (1) Chennai (South) Forum (1) Chennai Cricket Club (1) Chennai Metro Rail Project (1) Chidambaram (1) Chief Secretary (1) Child Pornography (1) China (1) Chinna Veerampattinam Beach (1) Chiranjeevi (1) Christmas (1) Chunnambar River (1) Cinema (1) Circular (1) Civil Judge (1) Civil Liability for Nuclear Damage Bill (1) Clash (1) Climate Change (1) Clonning (1) Closing (1) Cochin (1) Cock (1) Collector (1) Colleges (1) Colonial Rule (1) Comedian (1) Commune Panchayat (1) Companies (1) Consumer (1) Consumer goods (1) Contempt (1) Conversion (1) Convicts (1) Cooum (1) Copenhagen (1) Copenhagen Accord (1) Copyright (1) Courses (1) Daily Pioneer (1) Dayanidhi Maran (1) Defamation (1) Delhi High Court (1) Demise (1) Demolition (1) Derogatory remarks (1) Development Index for States (1) Devotional (1) Dhoti (1) Diamond Jubilee (1) Dina Thanthi (1) Dinamani Newspaper (1) Director (1) Diseases (1) Disney TV (1) Disqualification (1) Disrespect (1) Do's and Dont's (1) Doctors (1) Don Bosco School (1) Double Decker (1) Download (1) Dowry (1) Drainage (1) Dress Code (1) Drowned (1) Drunken (1) Dust bin (1) ECI (1) EU (1) EVKS Elangovan (1) Earth quake (1) Ebola virus disease (1) Egg (1) Egmore (1) Electricity (1) Elocution Competition (1) Emergency (1) Employment (1) Engineer (1) English (1) Extension (1) FC (1) FDI (1) FII (1) FPR Waste (1) Fake Identiy Cards (1) Fakes (1) Family Name (1) Farm Lands (1) Fast Food Stalls (1) Fatal injury (1) Faulty Printing (1) Federal Police (1) Fees (1) Fellowship Award (1) Fever (1) Finance Minister (1) Finger Prints (1) Fire (1) First Name (1) Fishermen (1) Flower Show (1) Foreign Ministers (1) Former Minister (1) Fort (1) Fort St. George (1) Forum Mall (1) Free of Cost (1) French Diviner (1) Fuel (1) Funeral ceremony (1) GSLV (1) Galaxy (1) Ganesha Pandals (1) Gangaikondacholapuram (1) Garib Rath (1) Gazetted Officers (1) German Architects (1) Germany (1) Gingee Fort (1) Given Name (1) Gmail (1) Goa (1) Goods Train (1) Goondas Act (1) Goons (1) Gopalsamy (1) Governor (1) Greetings (1) Guardian Newspapers Limited (1) Guru Peyarchi Palan (1) Guruvalaya Sports Coaching Centre (1) Guwahati (1) HSRP Number Plates (1) HSc (1) Half-ticket (1) Hawkers (1) Helicopter (1) Hen (1) Hindus (1) Hindustan Times (1) Home Page (1) Hotel (1) Hotmail (1) Howrah Superfast Express (1) Humanism (1) Humanity (1) Hyderabad Twin Blasts (1) IAS (1) IATR (1) IBSA (1) ICC (1) ICC World Cup 2007 (1) ICJ (1) IMCHRC (1) IMDT Act (1) IRCTC (1) ISRO (1) IT Act (1) Identiy Cards (1) Images (1) Independence Day (1) India Guinness records (1) Indian Kanoon (1) Indian Rupee (1) Inflation (1) Insects (1) Internet (1) Investment (1) Investors (1) Iran (1) Israel (1) JIPMER (1) Jammu & Kashmir (1) Jammu & Kashmir High Court (1) Jamsetji Tata National Virtual Academy (1) Japan (1) Job (1) Judicial Staffs (1) Judiciary (1) Jupiter (1) Justice Dalveer Bhandari (1) KAMBAR (1) Kachatheevu (1) Kachchathivu island (1) Kalaimagal Vizha (1) Kallanai (1) Kalrayan Hills (1) Kamal Nath (1) Kamarajar (1) Kamban Kalai Arangam (1) Kandasamy (1) Kapil Sibal (1) Karaikal-Nagoor (1) Kazhugumalai (1) Keerthiga (1) Kerla (1) Kids (1) Kingfisher (1) Kolar Gold Field (1) Kovaithambi (1) L.K.advani (1) LTTE (1) Lake (1) Lalu (1) Landline Phones (1) Levy (1) Licenses (1) Life Jackets (1) Lord Shiva (1) Lung disease (1) M.K.Alagiri (1) M.S.Gill (1) MCI (1) MET (1) MLC (1) MRP (1) MSO (1) MV Act (1) MYLAI (1) MYLAPORE (1) Madikrishnapuram (1) Madurai Bench (1) Madurai Corporation (1) Mahabalipuram (1) Maharashtra (1) Mailam (1) Malaysian Airlines (1) Malladi Krishnarao (1) Mamata Banerjee (1) Mangalore (1) Mangalore Express (1) Manirathnam (1) Marriages (1) Mars (1) Matriculation (1) Matrimony (1) Mayor (1) Meets (1) Melodies Songs (1) Metro Train (1) Mettur Dam (1) Microsoft Office 2010 (1) Middle Name (1) Mississippi (1) Misuse of pro-women law (1) Modi (1) Monarchy (1) Monetary (1) Moot Court (1) Mosquitoes (1) Moulivakkam (1) Mukumbu (1) Mullaiperiyar Dam (1) Mullaperiyar Dam (1) Mumbai Dadar Chalukya Express (1) Murali (1) Murder case (1) Murugan (1) Muscle power (1) Muslims (1) Mysore Palace (1) N.Ram (1) NATO (1) NGO (1) NH (1) NHAI (1) NSK alias N.S.Krishnan (1) Nalini (1) Namathu MGR (1) Namma Ooru Seythi (1) Nanauk (1) Nandhi (1) Narayana Murthy (1) National Crime Records Bureau (1) National Security Act (1) Natural (1) Natwar Singh (1) Naxalites (1) Nehru Street (1) Nelson (1) New Delhi Superfast Express (1) New Year (1) Night Hours (1) Nostradamus (1) November 1 (1) Numbers (1) ODI (1) OPS (1) Ocean (1) Offers (1) Office Bearers (1) Old Prison (1) Old Songs (1) Olympics (1) Open Page (1) Organ Transplant Operation (1) Ottavio Quattrocchi (1) Oussudu Lake (1) Overbridge (1) P.B.Sreenivas (1) P.Chidambaram (1) PBS (1) PIN Number (1) PMC (1) PONTEX (1) PRTC (1) PSLV (1) PTI (1) Paintings (1) Palakkad (1) Palani (1) Pallineliyanur (1) Pamphlets (1) Parents (1) Patta (1) Pennayar River (1) People's President (1) Perarivalan (1) Philosopher (1) Phone tapping (1) Physical Map (1) Pillaiyarkuppam (1) Pillayarkuppam (1) Planning Commission (1) Playback singer (1) Poisonous (1) Pollution Under Control Certificate (1) Pondicherry Code (1) Ponlait Milk Society (1) Poongothai (1) Porur Lake (1) Post Office (1) Postal Savings (1) Poverty (1) Power Generation (1) Prakash Karat (1) Prison (1) Privacy (1) Private Clinic (1) Priyanka (1) Proclaimed Offender (1) Property Tax (1) Prosecution (1) Prospectus (1) Protest (1) Public Meetings (1) Public Servant (1) Puli Devan (1) Pumpkin (1) Punjab (1) Puthiya Thalaimurai TV (1) Puzzle (1) Questions (1) RJD (1) RTE Act (1) Radiation (1) Raghuram Rajan (1) Railway Bridge (1) Raja (1) Raja Kannappan (1) Rajasulochana (1) Ramarajan (1) Real Name (1) Recovery Agents (1) Reddiarpalayam (1) Rejoinder (1) Release (1) Religion (1) Remand (1) Renovation (1) Reply in Tamil (1) Republic Day (1) Reshuffle (1) Results (1) Retirement (1) Riots (1) Rule 417-A (1) S.Ve.Sekar (1) SBI (1) SEBI (1) SEZs (1) SP (1) SRC (1) Sachar Commission (1) Salem Railway Division (1) Sand quarry issue (1) Saneeswarar (1) Sarkaria Commission (1) Sathankulam (1) Saturn (1) Saudia Arabia (1) Save Tamil (1) Scandal (1) Schedule (1) Sea Route (1) Self-attestation (1) Sex (1) Sharad Pawar (1) Sharekhan (1) Shilma Railway (1) Shimoga District (1) Ship (1) Shopping Malls (1) Shuttlecock (1) Signal (1) Sikh Temple (1) Singer (1) Sivanthi Adityan (1) Skulls (1) Smart Card (1) Social Network (1) Software (1) Sonia (1) Sony (1) Sornavur Anaicut (1) Spectrum (1) SpiceJet (1) Sree Nivas Tower (1) Sri Krishna Report (1) Sri Rangam (1) Sriharikota (1) State Consumer Disputes Redressal Commission (1) Statue (1) Stlain (1) Sub Registrar (1) Subramania Bharati (1) Summer Vacation (1) Sun (1) Sun Halo (1) Superfast Train (1) Surname (1) Survey Department (1) Suspension (1) Swine flu (1) Symbol (1) T.Kritinan (1) TATA (1) TATA Sumo (1) TNEB (1) TNPSC (1) Taluk (1) Tamil Actor (1) Terrace House Gardening (1) Thane (1) Thanjavur (1) Thenkinnam (1) Thirukkural (1) Thirumurai (1) Thirunallar (1) Thothukudi (1) Time-Table (1) Tindivanam (1) Tirunallar (1) Tirupati Train (1) Titanium (1) Toll-free number (1) Tornado (1) Transfer Certificate (1) Transport Department (1) Trees (1) Tuticorin (1) Twitter (1) Two Youths (1) Two-wheeler (1) UK (1) UNESCO (1) UPA (1) Uchimedu (1) Union Council of Ministers (1) Universe (1) University (1) Unlimited Night Calls (1) Unmanned Level Crossing (1) Unreserved Compartments (1) Uppalam (1) V.Narayanasamy (1) VCK (1) VETA (1) VIP (1) VOC (1) Vacuum Cleaner (1) Vaigai (1) Vamba Keerapalayam (1) Vedharanyam (1) Vehicles (1) Video-conferencing (1) Vidhana Soudha (1) Village (1) Villianur (1) Visa (1) Volley Ball Cup (1) WHO (1) WTC (1) WTO (1) War (1) Wedding (1) Whales (1) Women Police (1) Women's Right and Status (1) Women’s Reservation Bill (1) World Bank (1) World Records (1) World Tamil Conference (1) Yanam (1) Yesvantpur Garib Rath (1) argentina (1) atomic energy (1) azhagiri (1) bifurcation (1) bofors pay off case (1) buddhist (1) channels (1) child abuse (1) cyber crime (1) cyber security (1) e-Library (1) forensic laboratory (1) google sky (1) hyde act (1) i (1) india today (1) indira Gandhi (1) indus valley civilisation (1) information (1) ipod (1) jains (1) katnataka (1) koil (1) kudankulam (1) lectronic Voting Machines (1) mamalla (1) money lender (1) moscow (1) mumbai riot (1) rangasamy (1) salem (1) sculptor (1) telefilm (1) trucks (1) wordpress (1) அரியாங்குப்பம் (1) ஆதிச்சநல்லூர் (1) இதயக்கோவில் (1) எபோலா தீநுண்ம நோய் (1) கல்வராயன் மலைகள் (1) கல்வி சாதனையாளர் பட்டயம் (1) குடுவை ஆறு (1) சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபா (1) சிவராந்தகம் (1) சுழல் காற்று (1) தமிழர் உணவகம் (1) நுரையீரல் நோய் (1) பயிர்களை பராமரிப்பது எப்படி? (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)