Monday, January 28, 2013

R-Day Celebrations Pics (64 photos)

Dear all,

Visit the Picasa Web Album about "R-Day Celebrations Pics (64 photos)" at: https://picasaweb.google.com/109156918950500378452/RDayCelebrationsPics?noredirect=1


With regards,
P.SELVAM,
28-01-2013


கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?

கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும் ?

by Vel Yuvan Addicts on Sunday, January 6, 2013 at 5:56am ·

(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)


இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது பொருந்தும். பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.விளக்கம்: 

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான அமைவிடம் ஆகும். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குப் புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் அடையாளம்.கோயில்களில் ஒரு அபரிவிதமான காந்த சக்தியும், நேர்மறை சக்தியும் அதிகமாக இருக்கும். இது வடமுனை தென்முனை விசை வகையைச் சேர்ந்தது ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றிருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அந்த காந்த மற்றும் நேர்மறை சக்தி அதிகம் காணப்படும் இடம் ஆகும். 

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?அது தான் கீழே இருக்கும் அந்த சக்தியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொண்டு வரும்.அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று பக்கமும் மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும். இது அந்த சக்தியை வீண் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு கிடைக்கச் செய்யும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு சக்தி. வழக்கமாய் கோயிலுக்கு செல்லும் ஆட்களால் மட்டும் உணர முடிந்த ஒரு வித சக்தி.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் சக்தியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே சக்தி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித நேர்விசை மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு நேர்மறை அண்டக் கதிர் சக்தி ஆகும்.மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் மின் விளக்குதான்) அதை சுற்றி கண்ணாடி, அது செயற்கை ஒளி வட்டம் வருவதற்கு அல்ல அது அந்த சக்தியை தெறிக்கச் செய்யும் ஒரு அறிவியல் செயல்தான்.அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த சக்தியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான சக்தி உற்பத்திசாலைதான் மூலஸ்தானம்.இவ்வளவு அபிஷேகம், கற்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 அறையில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும்.

ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த சக்தியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கற்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு செப்புச் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவையை தரும் மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் வேறு எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை வழக்கமாய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு நுண்ணுயிர்க் கொல்லி என்றால் மிகையாகாது. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் மருந்து கூட்டும் முறையில் தயாரிக்கிறார்கள் என்பதன் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக சக்தி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும். அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த சக்தி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்கத்தாலி இதயத்தின் வெளியே நல்ல நேர்மறை சக்தியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தியாக இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். 

மாங்கல்யம், வாகனச் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் சக்தியை அப்படியே பற்றி கொள்ளுமாம். 

இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு சக்தியும் வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் சக்தியை கொடுக்கும் இடம்தான் இந்த கோயிலின் மூலஸ்தானம். அது போக கோயிலின் கொடி மரத்திற்கும் இந்த பிரகாரத்திற்கும் ஒரு நேரடி கம்பியில்லா தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் காந்த அலைகள் மற்றும் இடியின் தாக்கங்கள் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட இடிதாங்கி.அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு தொழில்நுட்ப காப்புக் கருவி.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபடும் ஒரு விஷயம். ஏன் என்றால் அதி மின்சக்தியையும் மட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு என்பதே ஆகும். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.சித்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த சக்தி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் தான்.கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த சுவையை எந்த ஒரு நட்சத்திர விடுதியிலும் கொடுத்துவிட முடியாது. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த சக்தி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் என்று மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான்.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்..........

Courtesy_

Friday, January 25, 2013

Madras HC upholds shifting of Assembly complex

High Court upholds shifting of Assembly complex

CHENNAI, January 24, 2013

K. T. SANGAMESWARAN

A view of the new Assembly building on Anna Salai. Photo: V. Ganesan

A view of the new Assembly building on Anna Salai. Photo: V. Ganesan

Declining to interfere with a major policy decision of the AIADMK government, the Madras High Court on Thursday upheld the shifting of the Legislative Assembly-cum-Secretariat complex back from the Omandurar Government Estate to Fort St.George and the plan to convert the structure into a multi super-specialty hospital and a government medical college.

Dismissing petitions challenging the shifting of the Secretariat and the proposal to use the building as a hospital, a specially-constituted Division Bench comprising Justices K.N.Basha and N.Paul Vasanthakumar said the decision to convene the sitting of the Legislative Assembly and the Secretariat was purely a matter of internal procedure adopted by the Legislature. This court was not entitled to interfere in the said decision, particularly when no violation of any constitutional provision was attracted.

The decision to establish the hospital was announced in the Assembly, which also approved it.

It was a policy decision to convert the complex into a hospital.

The court said the decision to convert the structure could not be stated to be arbitrary. The policy would promote and protect public interest, more particularly, weaker sections for getting better and expert treatment for serious ailments.

"It is made clear that the government should take all necessary steps for giving treatment to the poor and deserving people free of cost."

The petitions were filed by R.Veeramani and S.A.Miyajan. Mr.Veeramani, contended that the government's decision was arbitrary and opposed to public interest. The decision to convert the Assembly-cum-Secretariat complex, which was specifically designed and constructed for that purpose, into a hospital was due to non-application of mind and based on no material.

Accepting the submission of Senior Counsel Rakesh Dwivedi and Advocate-General A.Navaneethakrishnan, the Bench said on a perusal of Art.174 of the Constitution (Sessions of State Legislature, prorogation and dissolution), it was evident that the Governor should from time to time summon the House to meet at such time and place as he thought fit. The provision nowhere stated that the same would apply only for first sitting as contended by the petitioner's counsel. The words used were 'from time to time' and 'to meet at such time and place.' Messrs.Justices Basha and Paul Vasanthakumar said for implementing the decision to establish a hospital, an expert committee was constituted which visited the Omanthurar Government Estate along with technical experts, including architects. Based on their opinion further steps were taken for converting the 'A' Block of the new structure into a hospital. The government's decision was perfectly valid and legal.

The government decision could not be stated to be arbitrary or hasty without any material on record. If a multi-super specialty hospital was established, it would promote public interest. The authorities had obtained environmental clearance and a no objection certificate from the Fire and Rescue Services Department for the conversion of the new building. Applications had been made to the TNPCB and the CMDA.

As the issue of grant of environmental clearance for the conversion was pending before the National Green Tribunal, the court said it could not go into that aspect. It was the authorities' specific stand that the present endeavour was not to make any new construction, but only to modify the existing structure.

Courtesy_

Also read the related stories

தள்ளுபடி!

புதிய தலைமைச் செயலக விவகார வழக்கு...

அரசு முடிவில் தலையிட ஐகோர்ட் மறுப்பு 

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2013,22:49 IST


சென்னை: சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. "பொது மக்களின் நலனுக்காக, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும், அரசின் கொள்கை முடிவில், தலையிட முடியாது' என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபைக்கான கட்டடம் கட்டப்பட்டது. 425 கோடி ரூபாய்க்கும் மேல், இதற்காக செலவிடப்பட்டது. 

2010ம் ஆண்டு, மார்ச், புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக கட்டடத்தை, பிரதமர் மன்மோகன் சிங், திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டடத்தில், சட்டசபையும் கூடியது. தலைமைச் செயலகத்தில் உள்ள பல துறைகள், புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே, தலைமைச் செயலகமும், சட்டசபையும் மாற்றப்பட்டன.இதையடுத்து, புதிய கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவது என, தமிழக அரசு முடிவெடுத்தது. 2011ம் ஆண்டு, ஆகஸ்ட், 19ம் தேதி நடந்த, அமைச்சரவை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர் வீரமணி, மியாஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் அரசின் முடிவை ஆதரித்து, வழக்கறிஞர், ஜெ.ரமேஷ் என்பவர், மனு தாக்கல் செய்தார்.

இம்மனுக்களை, நீதிபதிகள் டி.முருகேசன், சசிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து, மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது. பின், இந்த வழக்கை, வேறு நீதிபதிகள் விசாரணைக்கு பட்டியலிட, 'டிவிஷன் பெஞ்ச்' பரிந்துரைத்தது. இதையடுத்து, 

இவ்வழக்கை விசாரிக்க, நீதிபதிகள் பாஷா, என்.பால்வசந்தகுமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' நியமிக்கப்பட்டது. அரசு தரப்பில், அட்வகேட் - ஜெனரல் நவநீதகிருஷ்ணன், டில்லி, மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகினர். மனுக்களை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற, சுற்றுப்புறச்சூழல் அனுமதியை, தமிழக அரசு ஏற்கனவே பெற்று விட்டது. தீ அணைப்புத் துறையிடம் இருந்து, ஆட்சேபனையில்லா சான்றிதழையும், பெற்று விட்டது. 

சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெற்றதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார். அது, நிலுவையில் உள்ளது. எனவே, அதுகுறித்து ஆராய முடியாது.தற்போதுள்ள கட்டடத்தில், "ஏ' பிளாக்கில், மருத்துவமனைக்காக மாற்றம் செய்யும் நடவடிக்கையும், "பி' பிளாக்கைப் பொறுத்தவரை, அதில், மருத்துவக் கல்லூரிக்காக மேற்கொண்டு கட்டுமானம் செய்வது என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.எந்த ஆதாரமும் இல்லாமல், அரசின் முடிவை, தன்னிச்சையானது என்றோ, அவசர கதியானது என்றோ, எங்களால் கருத முடியாது. பல்நோக்கு மருத்துவமனை அமைந்தால், பொது மக்களுக்கு பயன்படும்; பொது நலனுக்கு உகந்ததாக இருக்கும் என, அரசு தரப்பில் சரியாக வாதிடப்பட்டது.

சென்னையில், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. சென்னையில் உள்ள மக்கள் தொகைக்கு, குறிப்பாக, ஏழை எளியவர்கள், சிறப்பான மருத்துவ சிகிச்சைப் பெற, இவைகள் போதுமானதாக இல்லை.எனவே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவது வீணானது என்ற வாதத்தில், பொருள் இல்லை. இன்றைய தேதி வரை, டில்லியில் உள்ள, "எய்ம்ஸ்' மருத்துவமனை போல், சென்னையில், 

அரசு மருத்துவமனை எதுவும் இல்லை.தமிழக அரசு ஏற்படுத்தும், பல்நோக்கு மருத்துவமனை, ஏழை எளியவர்களுக்கு, இதயம், சிறுநீரகம், கல்லீரல், உறுப்பு மாற்று போன்ற சிறப்பு சிகிச்சைகளை அளிக்க வேண்டும். இதை அரசு, மனதில் கொள்ள வேண்டும். பொது மக்களின் நலனுக்காக தான், இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவது என, கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது. அதை, தமிழக சட்டசபையும் அங்கீகரித்துள்ளது. இதில், கோர்ட் தலையிட முடியாது. அரசு எடுத்த கொள்கை முடிவானது, அவசர கதியானது என்றோ, வீணானது என்றோ கூற முடியாது. மேலும், இதை தன்னிச்சையானது எனக் கூற முடியாது.

புதிய கட்டடத்தில் தான், சட்டசபை இயங்க வேண்டும் எனக் கோரி, தாக்கல்செய்த மனுவை, ஏற்கனவே, ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும், அரசின் முடிவு செல்லும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

இன்று பணிகள் துவக்கம்

புது தலைமை செயலக கட்டடத்தை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக்குவதற்கு, ஐகோர்ட் அனுமதித்துள்ள நிலையில், மருத்துவமனையாக மாற்றும் பணியில், பொதுப்பணித் துறை உடனடியாக களமிறங்கியுள்ளது. குறிப்பாக, கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்கள், நேற்று மாலையே வந்து இறங்கின.பொதுப்பணித் துறையின், சென்னை மண்டல முக்கிய பொறியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், "இன்று காலை, மருத்துவமனை பணிகள் துவங்கும். குறிப்பாக, எந்தெந்த பகுதிகளில், கழிப்பறைகள் அமைக்க வேண்டும், எந்த இடத்தில் அறுவை சிகிச்சை அறை அமைக்க வேண்டும் என்பது குறித்து, சுகாதாரத் துறையுடன் இணைந்து, ஆய்வு செய்து வருகிறோம்' என்றனர்.

Courtesy_

Wednesday, January 23, 2013

Jan 23: Netaji Subhas Chandra Bose Birthday

நேதாஜி பற்றி சுவையான சிறு குறிப்புகள்

இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர். இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர். தன் மரணத்தையே மர்மமாக்கியவர். அவரது வாழ்க்கையின் திறந்த பக்கங்களில் இருந்து...

v  ஜனவரி 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ்- பிரபாவதி தேதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9-வது குழந்தை போஸ்!

v  கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால், பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ், அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்துக்கான நேதாஜியின் முதல் அடி அது!

v  ``லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவர்கள் எனது ஷீக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்துதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன!"-ஐ.சி.எஸ் தேர்வு எழுத லண்டன் சென்று திரும்பியதும் இப்படிச் சொன்னார் நேதாஜி!

v  ஐ.சி.எஸ். தேர்வில் தேறிய போஸ், லண்டனில் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போதுதான் இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரம் அரங்கேறியது. அது அவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட, 1921-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா திரும்பினார்!

v  சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு. அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார். `ஸ்வராஜ்'என்ற பத்திரிகையிலும் பணியாற்றினார்!

v  `குருதியைக் கொடுங்கள். உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்!' என்று இவர் உரக்கக் கூவிய பிறகுதான் இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமுடன் முன் வந்தார்கள்!

v  `நான் தீவிரவாதிதான். எல்லாம் கிடைக்க வேண்டும். அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனது கொள்கை!' – 1938ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இப்படி முழங்கினார்!

v  போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார். அப்போதுதான் போஸீக்கு `நேதாஜி' என்ற பட்டத்தை அளித்தார் தாகூர். `மரியாதைக்குரிய தலைவர்' என்பது அர்த்தம்!

v  ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி, காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான உரசலை அதிகமாக்கிய சம்பவம் இது!

v  1939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர்.

v  சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்' கட்சி!

v  பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ், 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து, மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்ததை `Great Escape' என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்!

v  ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார் நேதாஜி `இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமைகொள்கிறேன்!' என்று ஹிட்லர் கை குலுக்க, `வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்!' என்று உடனே பதில் அளித்தார் நேதாஜி!

v  திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார். ஆனால், 1934-ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது. இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா, ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றது தான் எமிலியுடனான இறுதிச் சந்திப்பு!

v  ஜெர்மனியில் இருந்தபோது இவர் ஆரம்பித்த `இந்திய சுதந்திர அரசு' என்ற அமைப்புக்கு, ஜெர்மன் அரசு நிதி உதவி அளித்தது. 1944-ம் ஆண்டின் இறுதியில் அந்தக் கடனைக் கழிக்கும் விதமாக, இந்திய நாட்டு மக்களிடம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மன் தூதரிடம் அளித்தார் நேதாஜி!

v  `இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்!' இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது, 1944-ல் `ஆசாத் ஹிந்த்' வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை,`தேசப்பிதா' என்று முதன்முதலில் அழைத்தார்.`ஆசாத் ஹிந்த்' என்றால் `சுதந்திர இந்தியா' என்று பொருள்!

v  காந்திக்கும் போஸீக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர். எப்படி சுபாஷ், காந்தியை `தேசப் பிதா' என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை `தேச பக்தர்களின் பக்தர்' என்று அழைத்தார்!

v  சிங்கப்பூரில் 1942-ம் வருடம் மோகன் சிங் என்பவரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அது ஜப்பானியப் படைகளால் சிதைக்கப்பட்டது. மீண்டும் 1943-ல் நேதாஜியின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டது.

v  தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக `ஜெய் ஹிந்த'.... அதாவது, `வெல்க பாரதம்' என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி, அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!

v  பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங் சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், `இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல!'

v  ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்தார், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். `அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!' என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி!

v  பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!

v  1943-ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது. அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு `ஷாஹீத்' (தியாகம்) மற்றும் `ஸ்வராஜ்' (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளூநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர்.... கர்னல் லோகநாதன்!

v  டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் நேதாஜி உரையாற்றி முடித்ததும், எழுந்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ, ``இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!'' என்றார். உடனே நேதாஜி, ``சுந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்'' என்றார். ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று!

v  1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்!

v  `ஒரு இந்தியனின் புனித யாத்திரை' இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை, 1937-ல் எழுத ஆரம்பித்தார். 1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார். `என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்' என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே!.


தொகுத்து வழங்குபவர்: திருமதி ஆனந்திராம்குமார்


நன்றி: ஆனந்த விகடன்

 Courtesy_

http://www.lakshmansruthi.com/cineprofiles/nethaji.asp

http://en.wikipedia.org/wiki/Subhas_Chandra_Bose

http://ta.wikipedia.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்

http://www.netaji.org/

http://www.hindustantimes.com/news/specials/Netaji/netajihomepage.shtml#

http://ilanthalirabcd.blogspot.in/2011/10/blog-post.html

http://subhaschandrabose.org/works.php#


Thursday, January 17, 2013

Pondicherry Airport resumes services

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதுவையில் இருந்து விமான சேவை: பெங்களூரில் இருந்து வந்த பயணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்றார் 

Pondichery வியாழக்கிழமை, ஜனவரி 17, 3:33 PM IST

புதுச்சேரி, ஜன. 17: கடந்த 1988-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை புதுவையில் இருந்து பயணிகள் விமான சேவை நடந்து வந்தது. புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர் மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு விமானம் சென்றது. 

ஆனால் நாளடைவில் பயணிகள் எண்ணிக்கை குறையவே விமானம் சேவை படிப்படியாக குறைந்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் லாஸ்பேட்டை விமான தளம் ஒரு தனியார் விமான பயிற்சி பள்ளி விமானத்திற்கே உதவி வந்தது. அதுமட்டுமல்லாமல் டெல்லியில் இருந்து தலைவர்கள் வந்து செல்ல மட்டுமே விமான தளம் பயன்பட்டும் வந்தது. 

விமான நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் முயற்சி செய்தனர். இருப்பினும் கடந்த ஆட்சியில் இதற்கான பணிகள் ஜரூராக நடந்தது. தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி பெற்று விமான நிலையத்தின் ரன்வே தூரம் கூடுதலாக நீடிக்கப்பட்டது. மேலும், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டது. இதற்கான பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு துரிதப்படுத்தினார். 

மேலும், தனியார் விமான நிறுவனங்களை புதுவையில் இருந்து விமான சேவையை தொடங்க அழைப்பு விடுத்தார். இதில் தனியார் விமான நிறுவனம் புதுவையில் இருந்து விமான சேவையை தொடங்க முன்வந்தது. 

இதனையடுத்து புதுவை அரசுடன் அந்த விமான நிறுவனம் ஒப்பந்தமும் ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின்படி இன்று (வியாழக்கிழமை) முதல் விமான சேவை மீண்டும் புதுவையில் தொடங்கியது. 

முதல் விமானம் இன்று மதியம் 12.20 மணிக்கு பெங்களூரில் இருந்து புதுவைக்கு புறப்பட்டது. மதியம் 1.10 மணியளவில் பெங்களூர் விமானம் புதுவை வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் 35 பயணிகள் புதுவைக்கு வந்தனர். அவர்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும் மாலை அணிவித்தும் வரவேற்றனர். 

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் நேரு, வைத்தியநாதன், கல்யாணசுந்தரம், அசோக் ஆனந்து, தமிழ்செல்வன், கார்த்திகேயன், தலைமை செயலாளர் சத்தியவதி, அரசு செயலாளர் ராகேஷ் சந்திரா, விமான நிலைய ஆணைய அதிகாரி ரவிக்குமார், சுற்றுலாத்துறை இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தொடர்ந்து இந்த விமானம் மீண்டும் மதியம் 1.30 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டது. இது, மதியம் 2.20 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். இதில் 35 பயணிகள் பயணித்தனர். அவர்களையும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வழியனுப்பி வைத்தனர். 

பெங்களூர் செல்லும் இந்த விமானம் 78 இருக்கைகள் கொண்டது. இந்த விமானம் வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும். விமான நிலையத்தில் ஐ.ஆர்.பி. இன்ஸ்பெக்டர் பத்மநாபன் தலைமையில் 25 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விமான சேவை மட்டுமே இன்று தொடங்கி உள்ளது. விமான நிலைய திறப்பு விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெறும்.

Courtesy_


Also read the related stories

Pondy airport resumes commercial flights

Puducherry | Thursday, Jan 17 2013 IST

-- (UNI) --

After a gap of 20 years,commercial air services to Puducherry resumed today with the arrival of a Spice Jet aircraft carrying 35 passangers from Bangaluru. The flight which took off at 1210 hrs in Bangaluru, arrived here at 1310 hrs. It left for Bangaluru at 1330 hrs. 

Puducherry Chief Minister N Rangasamy,his cabinet colleagues and Deputy Speaker Selvam, among others, greeted the passangers giving them flowers. They also gave a send off to 35 passangers to Bangaluru. 

The Puducherry airport was operating commercial flights from 1988 to 1992. Thereafter, it was used for landing charted flights and training before resuming commercial operations again today. 

Courtesy_

Tuesday, January 15, 2013

Tamil Nadu 9 years old Boy passed ASP .NET Exam

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏ.எஸ்.பி.டாட் நெட் தேர்வு: 9 வயது தமிழக சிறுவன் சாதனை 

Posted by: Mathi

Published: Tuesday, January 15, 2013, 15:19 [IST]

கலிபோர்னியா: மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP .NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை கடந்த 12-ந் தேதி நடத்தியிருந்தது. 

 The Tamil Youngest Certify As Mcts In Asp

கம்ப்யூட்டர் பட்டதாரிகள்தான் பொதுவாக இத் தேர்வை எழுதுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4 ம் வகுப்புப் படிக்கக் கூடிய 9 வயதே ஆன பிரணவ் கல்யாணும் தேர்வு எழுத அனுமதி கிடைத்தது. 

இத்தேர்வு எழுதியதுடன் மட்டுமின்றி சிறுவன் பிரணவ் வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். 

சாதனை நாயகனான பிரணவ்-ன் தந்தை கல்யாண், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற பாலமேட்டைச் சேர்ந்தவர். கலிபோர்னியாவில் அமெரிக்க வங்கியில் பணியாற்றி வருகிறார். 

பிரணவ்வின் தாயார் விசாலாட்சியும் அமெரிக்க வங்கியில் நிதி ஆய்வாளராக பணியாற்றுகிறார். 

பிரணவ்வின் இந்த சாதனைக்கு அவரது குடும்ப நண்பர்களான மணிவண்ணன், நதியா, சதீஷ் உள்ளிட்டோர்தான் உந்துசக்தியாக இருந்துள்ளனர் என்று பெருமைப்படுகின்றனர் அவரது பெற்றோர்.   

English Summary: Pranav Kalyan, 9 year old wonder boy studying in 4th Grade in Willow Elementary school, California, USA successfully completed MCTS exam on Jan 12, 2013. He has become the youngest kid to get the "Microsoft Certified Technology Specialist" in ASP.NET. Pranav's father, Mr. Kalyan, hailed from Palamedu, near Madurai in Tamilnadu . He is also "Microsoft Certified Solutions Developer (MCSD)" certified Software Professional working at Bank Of America, California, USA.

Courtesy_

Sunday, January 6, 2013

சீனாவில் கடலையே உறைபனியாக்கிய வானிலை!

சீனாவில் கடலையே உறைபனியாக்கிய வானிலை- ஐஸ் கட்டிகளுக்கு நடுவில் தவிக்கும் கப்பல்கள்!

Posted by: Mathi

Updated: Sunday, January 6, 2013, 18:35 [IST]

 China Chills Hit 28 Year Low Trapping 1000 Ships In Ice

பெய்ஜிங்: சீனாவில் மைனஸ் 7.4 டிகிரியாக வெப்ப நிலை குறைந்துபோனதால் அனைத்தும் உறைபனியாகிவிட்டன. பெருங்கடலும்கூட உறைபனியாகிக் கிடக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான கப்பல்கள் ஐஸ் கட்டிகளுக்கு நடுவில் சிக்கியுள்ளன. 

சீனாவில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மோசமான தட்பவெப்ப நிலையால் பேருந்து, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

வடமேற்கு சீனாவில் போகல் கடல் நீர் ஐஸ்கட்டியாகி விட்டது. கடல் முழுவதும் சுமார் 27 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு ஐஸ் கட்டிகளாகிக் கிடக்கிறது! அந்த கடலில் பயணித்த 1000 கப்பல்கள் ஐஸ் கட்டிக்குள் சிக்கி கிடக்கின்றன. 

தென் சீனாவில் இரவில் பனிப்புயல் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது. சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

English Summary: Temperatures in China have plunged to their lowest in almost three decades, cold enough to freeze coastal waters and trap 1,000 ships in ice, official media said at the weekend.

Courtesy_

Also read the related stories

China chills hit 28-year low, trapping ships in ice

Transport around the country severely disrupted; nearly 1,000 ships trapped in frozen coastal waters

Reuters  

First Published: Sat, Jan 05 2013. 03 22 PM IST

Soldiers inspect a port where boats are stranded in ice, in Yingkou, Liaoning province on Thursday. Sea ice continues to occur in some Chinese coastal provinces as a result of recent cold waves. Photo: Reuters/China Daily

Soldiers inspect a port where boats are stranded in ice, in Yingkou, Liaoning province on Thursday. Sea ice continues to occur in some Chinese coastal provinces as a result of recent cold waves. Photo: Reuters/China Daily

Shanghai: Temperatures in China have plunged to their lowest in almost three decades, cold enough to freeze coastal waters and trap 1,000 ships in ice, official media said at the weekend.

Since late November the country has shivered at an average of minus 3.8 degrees Celsius, 1.3 degrees colder than the previous average, and the chilliest in 28 years, state news agency Xinhua said on Saturday, citing the China Meteorological Administration.

Bitter cold has even frozen the sea in Laizhou Bay on the coast of Shandong province in the east, stranding nearly 1,000 ships, the China Daily newspaper reported.

Zheng Dong, chief meteorologist at the Yantai Marine Environment Monitoring Center under the State Oceanic Administration, told the paper that the area under ice in Laizhou Bay was 291 square km this week.

Transport around the country has been severely disrupted.

Over 140 flights from the state capital airport in central Hunan province were delayed, while heavy snowfall forced the closure of some sections of the Beijing-Hong Kong-Macau Expressway, the China Daily said.

Temperatures in the northeast fell even further, reaching a 43-year low of minus 15.3 degrees Celsius, about 3.7 degrees below the previous recorded average.

One truck driver in southeastern Jiangxi province, caught in a 5 km (3.1 miles) queue caused by a pileup that happened after heavy snowfall, told China Daily the snow and extreme cold had caught him unawares.

"I didn't expect such a situation, so I've brought no warm coats or food. All I can do now is wait," trucker Yao Xuefeng told the paper.

Courtesy_

For more Images visit this link at: http://images.google.co.in

Related Posts Plugin for WordPress, Blogger...

Disclaimer


Collection of important and burning Topics, News from all Dailies, Fortnight Magazines, etc., in order to highlight its importance to the viewers and also to keep it as ready reckoner by them so as to access it quickly from the concerned Sources which we quote them at the bottom of each Posts so as to extend our gratitude towards the Author of that Posts in their releases.



Followers

Search our Blog here

Google
 


News Feed from Various Dailies



THE HINDU - News Update

Expressbuzz - Columnists

Expressbuzz - Tamil Nadu

தினமணி: மெய்யாலுமா...? அரசியல் கிசுகிசு

Dinamani - Headlines

Dinamani - Politics

Dinamani - Tamil Nadu

Dinamani - Pondicherry

Dinamani - Cuddalore

Labels

Pondicherry (135) Tamil Nadu (130) ARTICLE (103) Editorial (91) aiadmk (63) jayalalithaa (59) dinamani (55) dmk (53) Karunanidhi (33) india (30) Ariankuppam (29) chief minister of tamil nadu (27) the hindu (27) railway (26) Congress (23) Dinamalar (22) Supreme Court (22) THE HINDU (22) southeren railway (22) Nuclear (21) chennai (21) US (20) wikipedia (20) Rain (19) frontline (19) PMK (18) Pratiba (18) President (18) karnataka (18) Education (17) Train (17) Elections (16) sri lanka (16) 2013 (15) 2012 (14) Madras High Court (14) 123 Agreement (13) Road (13) bangalore (13) election commission (13) nuke deal (13) Advocates (12) BEHS (12) Bridge (12) Facebook (12) Google (12) NPT (12) Politics (12) Youtube (12) 2010 (11) Interview (11) Legislative Assembly (11) Traffic (11) Video (11) abdul kalam (11) Accidents (10) Parliament (10) Private Schools (10) Tamil Eelam (10) police (10) BJP (9) Cuddalore District (9) Death (9) Environment (9) 2014 (8) BG Conversion (8) Ban (8) Website (8) water (8) water resources (8) Communist Parties (7) Examination (7) Flight (7) Government (7) Mayiladudurai (7) Pakistan (7) River (7) Schools (7) The New Indian Express (7) UNO (7) USA (7) Villupuram (7) ground water (7) prime minister (7) Andhra Pradesh (6) Beach (6) Car (6) Cauvery (6) Children (6) Coimbatore (6) Court (6) Cricket (6) Jaya TV (6) Lok Sabha (6) Mobile Phones (6) Strike (6) cellphones (6) 10th Exam (5) Dinakaran (5) High Court (5) MGR (5) MLAs (5) Municipality (5) One Year Performance (5) Online (5) Petrol (5) Plastic (5) Political Party (5) Progress Card (5) RBI (5) Sethusamudram (5) Sports (5) Sun TV (5) banks (5) lawyers (5) madras (5) russia (5) temple (5) CEC (4) Corporation (4) Credit Card (4) DMDK (4) Foods (4) Health (4) International (4) MDMK (4) Makkal TV (4) Mumbai (4) Nuclear standoff (4) PIB (4) Prices (4) SSLC (4) Sethu (4) Surgery (4) TIPS (4) TV (4) Tamil (4) Time Table (4) Vaiko (4) World Water Day (4) chief minister (4) computer (4) kerala (4) 2011 (3) 3rd World War (3) Actor (3) Adulterated items (3) Agriculture (3) Airport (3) Anti-Corruption (3) BSNL (3) Bandh (3) Bragadeeswara Temple (3) Britain (3) Cabinet Minister (3) Civil Supplies Department (3) Constitution (3) Cr.P.C. (3) Daily Thanthi (3) Dasara festival (3) EVMs (3) Garbage (3) Gazette (3) Helmets (3) Hospital (3) I-Day (3) IPC (3) IT (3) Ice (3) Kalaignar TV (3) Kiran Bedi (3) Kollidam (3) Lieutenant Governor (3) MPs (3) Marina Beach (3) Medical (3) Microsoft (3) Mini Flight (3) Mysore (3) Panruti (3) Photos (3) Politicians (3) Pollution (3) Pranab Mukherjee (3) Public Exam (3) RTI Act (3) Raj TV (3) Rajiv Gandhi (3) Schoolboy (3) Smoking (3) Sonia Gandhi (3) South Africa (3) Speaker (3) Tanjore (3) Teacher (3) Telangana (3) Telephone (3) UNPA (3) Vijayakant (3) Yahoo (3) cbi (3) delhi (3) gujarat (3) mssrf (3) newspaper (3) planet (3) salem division (3) times of india (3) 1000 Rupee Note (2) 12th Exam (2) ATM (2) Aadhar Card (2) Advertisements (2) AirTel (2) Assembly Meeting (2) BESCOM (2) Birth Certificate (2) Botanical Garden (2) Boycott (2) Bus Stand (2) CCTVs (2) CJI (2) CPI (2) CPM (2) Cadres (2) Cancer (2) Christians (2) Church (2) Cigarettes (2) Compensation (2) Complaint (2) Cyclone (2) DTH (2) Daily Telegraph (2) Dams (2) Death Anniversary (2) Debates (2) Debit Card (2) Driving (2) ECR (2) Earth (2) Electricity (2) Eye (2) Fire (2) Floods (2) Fonseka (2) Foreign Nations (2) Foreigners (2) Four Track Road (2) Full Moon (2) Genocide (2) Global Warming (2) Govt. Staffs (2) Green (2) Guru (2) Heart (2) Heritage buildings (2) Highways (2) Hogenakkal (2) Home Minister (2) Home Ministry (2) Hyderabad (2) ICICI (2) IT Capital (2) Independence (2) Judges (2) Katchatheevu Island (2) Kerala High Court (2) LORRY (2) LPG Gas Connection (2) Law College (2) Legislative Assembly Complex (2) London (2) Losses (2) M.K.Stalin (2) Maalaimalar (2) Mahe (2) Mahinda Rajapaksa (2) Medicine (2) Mega TV (2) Moon (2) Motor Vehicles (2) Municipal waste (2) Musharraf (2) NASA (2) NDTV (2) Nagapattinam (2) Narendra Modi (2) National Highways (2) Nepal (2) Notifications (2) Obama (2) Pamban (2) Parking Place (2) Passport (2) Pazha Nedumaaran (2) Phones (2) Portfolios (2) Pratibha Patil (2) Private TV Channels (2) RBI Governor (2) RTO (2) Railway Minister (2) Rajya Sabha (2) Ramanathapuram (2) Ramdoss (2) Rameswaram (2) Ration Card (2) Rename (2) Reservation (2) Rivers Inter-link (2) Rowdies (2) Royal Cable Vision (2) Rule of Law (2) S.K.Upadhyay (2) SAARC (2) Sachin (2) Salary (2) Satellite (2) School Van (2) Sea Level Rising (2) Search Engine (2) Somnath Chatterjee (2) Speech (2) Subramanian Swamy (2) Sumangali Cable Vision (2) T.R.Baalu (2) TRAI (2) Tamil Murasu (2) Tax issues (2) Tea (2) Telecom (2) Theft (2) Tibet (2) Tiruchi (2) Tiruchirapalli (2) Tirupur District (2) Tobacco (2) Tourism (2) Veeranam Lake (2) Vellore (2) Vellore Jail (2) Vice President (2) Vigilance (2) Voters' List (2) Woman (2) World Heritage (2) World Tour (2) bangaladesh (2) eTicket (2) iTicket (2) kizhur (2) madurai (2) minister (2) monuments (2) o.paneerselvam (2) security (2) states (2) technology (2) television (2) vkc (2) கச்சத்தீவு (2) 100 feet Road (1) 10th Schedule (1) 11-storey Building (1) 16th World Editors' Forum (1) 1996 (1) 2001 (1) 2007 (1) 2008 (1) 2009 (1) 60 Years (1) 62nd World Newspaper Congress (1) 75 years of history (1) A.P.Hithendran (1) AC Bus (1) AIIMS (1) Abbreviations (1) Act (1) Actor Vijay (1) Adichanallur (1) Advertisement (1) Advocate Durai (1) Aerobridge (1) Agitation (1) Agricultural Lands (1) Ahmedabad blasts (1) Alert (1) Alive (1) Ambassador (1) Anbumani Ramadoss (1) Animation (1) Anna (1) Announcement (1) Annual Day (1) Anti-conversion (1) Apollo Hospitals (1) Application Form (1) Applications (1) Archaeology (1) Army (1) Art.370 (1) Asif Ali Zardari (1) Assam (1) Assassin (1) Assassination (1) Attestation (1) Auditor (1) Aurobindo Ashram (1) Australia (1) BCCI (1) BPL (1) Baby (1) Badminton (1) Baggage missing (1) Bahour (1) Bankruptcy (1) Bar Council of India (1) Barricades (1) Battery (1) Beggers (1) Bhubaneswar Express (1) Bihar (1) Bike (1) Bill (1) Birth centenary (1) Black Film (1) Blogger News Network (1) Body (1) Book Fair (1) Booking Rules (1) Bribe (1) Bricks (1) British (1) Browser (1) Budget Session (1) Burnt (1) Buses (1) Business Line (1) Busisness (1) CAG (1) CEO (1) CMDA (1) CMRP (1) CMs Conference (1) CNN IBN (1) Calendar (1) Car Festival (1) Car goes up in flames (1) Cash Transaction Tax (1) Cataract (1) Cauvery Tribunal Award (1) Census (1) Chairman (1) Chalukyas (1) Change of Mobile (1) Charge Sheet (1) Chennai (South) Forum (1) Chennai Cricket Club (1) Chennai Metro Rail Project (1) Chidambaram (1) Chief Secretary (1) Child Pornography (1) China (1) Chinna Veerampattinam Beach (1) Chiranjeevi (1) Christmas (1) Chunnambar River (1) Cinema (1) Circular (1) Civil Judge (1) Civil Liability for Nuclear Damage Bill (1) Clash (1) Climate Change (1) Clonning (1) Closing (1) Cochin (1) Cock (1) Collector (1) Colleges (1) Colonial Rule (1) Comedian (1) Commune Panchayat (1) Companies (1) Compulsory military service (1) Consumer (1) Consumer goods (1) Contempt (1) Conversion (1) Convicts (1) Cooum (1) Copenhagen (1) Copenhagen Accord (1) Copyright (1) Courses (1) Daily Pioneer (1) Dayanidhi Maran (1) Defamation (1) Delhi High Court (1) Demise (1) Demolition (1) Derogatory remarks (1) Development Index for States (1) Devotional (1) Dhoti (1) Diamond Jubilee (1) Dina Thanthi (1) Dinamani Newspaper (1) Director (1) Diseases (1) Disney TV (1) Disqualification (1) Disrespect (1) Do's and Dont's (1) Doctors (1) Don Bosco School (1) Double Decker (1) Download (1) Dowry (1) Drainage (1) Dress Code (1) Drowned (1) Drunken (1) Dust bin (1) ECI (1) EU (1) EVKS Elangovan (1) Earth quake (1) Ebola virus disease (1) Egg (1) Egmore (1) Elocution Competition (1) Emergency (1) Employment (1) Engineer (1) English (1) Extension (1) FC (1) FDI (1) FII (1) FPR Waste (1) Fake Identiy Cards (1) Fakes (1) Family Name (1) Farm Lands (1) Fast Food Stalls (1) Fatal injury (1) Faulty Printing (1) Federal Police (1) Fees (1) Fellowship Award (1) Fever (1) Finance Minister (1) Finger Prints (1) First Name (1) Fishermen (1) Flower Show (1) Foreign Ministers (1) Former Minister (1) Fort (1) Fort St. George (1) Forum Mall (1) Free of Cost (1) French Diviner (1) Fuel (1) Funeral ceremony (1) GSLV (1) Galaxy (1) Ganesha Pandals (1) Gangaikondacholapuram (1) Garib Rath (1) Gazetted Officers (1) German Architects (1) Germany (1) Gingee Fort (1) Given Name (1) Gmail (1) Goa (1) Goods Train (1) Goondas Act (1) Goons (1) Gopalsamy (1) Governor (1) Greetings (1) Guardian Newspapers Limited (1) Guru Peyarchi Palan (1) Guruvalaya Sports Coaching Centre (1) Guwahati (1) HSRP Number Plates (1) HSc (1) Half-ticket (1) Hawkers (1) Helicopter (1) Hen (1) Hindus (1) Hindustan Times (1) Home Page (1) Hotel (1) Hotmail (1) Howrah Superfast Express (1) Humanism (1) Humanity (1) Hyderabad Twin Blasts (1) IAS (1) IATR (1) IBSA (1) ICC (1) ICC World Cup 2007 (1) ICJ (1) IMCHRC (1) IMDT Act (1) IRCTC (1) IRDAI (1) ISRO (1) IT Act (1) Identiy Cards (1) Images (1) Independence Day (1) India Guinness records (1) Indian Kanoon (1) Indian Rupee (1) Inflation (1) Insects (1) Insurance premium (1) Internet (1) Investment (1) Investors (1) Iran (1) Israel (1) JIPMER (1) Jammu & Kashmir (1) Jammu & Kashmir High Court (1) Jamsetji Tata National Virtual Academy (1) Japan (1) Job (1) Journey (1) Judicial Staffs (1) Judiciary (1) Jupiter (1) Justice Dalveer Bhandari (1) KAMBAR (1) Kachatheevu (1) Kachchathivu island (1) Kalaimagal Vizha (1) Kallanai (1) Kalrayan Hills (1) Kamal Nath (1) Kamarajar (1) Kamban Kalai Arangam (1) Kandasamy (1) Kapil Sibal (1) Karaikal-Nagoor (1) Kazhugumalai (1) Keerthiga (1) Kerla (1) Kids (1) Kingfisher (1) Kolar Gold Field (1) Kovaithambi (1) L.K.advani (1) LTTE (1) Lake (1) Lalu (1) Landline Phones (1) Levy (1) Licenses (1) Life Jackets (1) Lord Shiva (1) Lung disease (1) M-Sand (1) M.K.Alagiri (1) M.S.Gill (1) MCI (1) MET (1) MLC (1) MRP (1) MSO (1) MV Act (1) MYLAI (1) MYLAPORE (1) Madikrishnapuram (1) Madurai Bench (1) Madurai Corporation (1) Madurai Ramu (1) Mahabalipuram (1) Maharashtra (1) Mailam (1) Malaysian Airlines (1) Malladi Krishnarao (1) Mamata Banerjee (1) Manapet Govt. School (1) Mangalore (1) Mangalore Express (1) Manirathnam (1) Marriages (1) Mars (1) Matriculation (1) Matrimony (1) Mayor (1) Meets (1) Melodies Songs (1) Metro Train (1) Mettur Dam (1) Microsoft Office 2010 (1) Middle Name (1) Mississippi (1) Misuse of pro-women law (1) Modi (1) Monarchy (1) Monetary (1) Moot Court (1) Mosquitoes (1) Moulivakkam (1) Mukumbu (1) Mullaiperiyar Dam (1) Mullaperiyar Dam (1) Mumbai Dadar Chalukya Express (1) Murali (1) Murder case (1) Murugan (1) Muscle power (1) Muslims (1) Mysore Palace (1) N.Ram (1) NATO (1) NGO (1) NH (1) NHAI (1) NSK alias N.S.Krishnan (1) Nalini (1) Namathu MGR (1) Namma Ooru Seythi (1) Nanauk (1) Nandhi (1) Narayana Murthy (1) National Crime Records Bureau (1) National Security Act (1) Natural (1) Natwar Singh (1) Naxalites (1) Nehru Street (1) Nelson (1) New Delhi Superfast Express (1) New Year (1) Night Hours (1) Nostradamus (1) November 1 (1) Numbers (1) ODF (1) ODI (1) OPS (1) Ocean (1) Offers (1) Office Bearers (1) Old Prison (1) Old Songs (1) Olympics (1) Open Defecation Free (1) Open Page (1) Organ Transplant Operation (1) Ottavio Quattrocchi (1) Oussudu Lake (1) Overbridge (1) P.B.Sreenivas (1) P.Chidambaram (1) PBS (1) PIN Number (1) PMC (1) PONTEX (1) PRTC (1) PSLV (1) PTI (1) Paintings (1) Palakkad (1) Palani (1) Pallineliyanur (1) Pamphlets (1) Parents (1) Patta (1) Pennayar River (1) People's President (1) Perarivalan (1) Philosopher (1) Phone tapping (1) Physical Map (1) Pillaiyarkuppam (1) Pillayarkuppam (1) Planning Commission (1) Playback singer (1) Poisonous (1) Pollution Under Control Certificate (1) Pondicherry Code (1) Ponlait Milk Society (1) Poongothai (1) Porur Lake (1) Post Office (1) Postal Savings (1) Poverty (1) Power Generation (1) Prakash Karat (1) Prison (1) Privacy (1) Private Clinic (1) Priyanka (1) Proclaimed Offender (1) Property Tax (1) Prosecution (1) Prospectus (1) Protest (1) Public Meetings (1) Public Servant (1) Puli Devan (1) Pumpkin (1) Punjab (1) Puthiya Thalaimurai TV (1) Puzzle (1) Questions (1) RJD (1) RTE Act (1) Radiation (1) Raghuram Rajan (1) Railway Bridge (1) Raja (1) Raja Kannappan (1) Rajasulochana (1) Ramarajan (1) Real Name (1) Recovery Agents (1) Reddiarpalayam (1) Rejoinder (1) Release (1) Religion (1) Remand (1) Renovation (1) Reply in Tamil (1) Republic Day (1) Reshuffle (1) Results (1) Retirement (1) Riots (1) River Sand (1) Robo Sand (1) Rs.10 Food (1) Rule 417-A (1) S.Ve.Sekar (1) SBI (1) SEBI (1) SEZs (1) SP (1) SRC (1) Sachar Commission (1) Salem Railway Division (1) Sand quarries (1) Sand quarry issue (1) Saneeswarar (1) Sarkaria Commission (1) Sathankulam (1) Saturn (1) Saudia Arabia (1) Save Tamil (1) Scandal (1) Schedule (1) Sea Route (1) Self-attestation (1) Sex (1) Sharad Pawar (1) Sharekhan (1) Shilma Railway (1) Shimoga District (1) Ship (1) Shopping Malls (1) Shuttlecock (1) Signal (1) Sikh Temple (1) Singer (1) Sivanthi Adityan (1) Skulls (1) Smart Card (1) Social Network (1) Software (1) Sonia (1) Sony (1) Sornavur Anaicut (1) Spectrum (1) SpiceJet (1) Sree Nivas Tower (1) Sri Krishna Report (1) Sri Rangam (1) Sriharikota (1) State Consumer Disputes Redressal Commission (1) Statue (1) Stlain (1) Sub Registrar (1) Subramania Bharati (1) Summer Vacation (1) Sun (1) Sun Halo (1) Superfast Train (1) Surname (1) Survey Department (1) Suspension (1) Swine flu (1) Symbol (1) T.Kritinan (1) TATA (1) TATA Sumo (1) TNEB (1) TNPSC (1) Taluk (1) Tamil Actor (1) Tariff hiked (1) Terrace House Gardening (1) Thane (1) Thanjavur (1) Thenkinnam (1) Thirukkural (1) Thirumurai (1) Thirunallar (1) Thothukudi (1) Time-Table (1) Tindivanam (1) Tirunallar (1) Tirupati Train (1) Titanium (1) Toll-free number (1) Tornado (1) Transfer Certificate (1) Transferred Ticket (1) Transport Department (1) Trees (1) Tuticorin (1) Twitter (1) Two Youths (1) Two-wheeler (1) UK (1) UNESCO (1) UPA (1) Uchimedu (1) Union Council of Ministers (1) Universe (1) University (1) Unlimited Night Calls (1) Unmanned Level Crossing (1) Unreserved Compartments (1) Uppalam (1) V.Narayanasamy (1) VCK (1) VETA (1) VIP (1) VOC (1) Vacuum Cleaner (1) Vaigai (1) Vamba Keerapalayam (1) Vedharanyam (1) Vehicles (1) Video-conferencing (1) Vidhana Soudha (1) Village (1) Villianur (1) Visa (1) Volley Ball Cup (1) WHO (1) WTC (1) WTO (1) War (1) Wedding (1) Whales (1) Women Police (1) Women's Right and Status (1) Women’s Reservation Bill (1) World Bank (1) World Records (1) World Tamil Conference (1) Yanam (1) Yesvantpur Garib Rath (1) argentina (1) atomic energy (1) azhagiri (1) bifurcation (1) bofors pay off case (1) buddhist (1) channels (1) child abuse (1) cyber crime (1) cyber security (1) e-Library (1) forensic laboratory (1) google sky (1) hyde act (1) i (1) india today (1) indira Gandhi (1) indus valley civilisation (1) information (1) ipod (1) jains (1) katnataka (1) koil (1) kudankulam (1) lectronic Voting Machines (1) mamalla (1) money lender (1) moscow (1) mumbai riot (1) rangasamy (1) salem (1) sculptor (1) telefilm (1) trucks (1) wordpress (1) அரியாங்குப்பம் (1) ஆதிச்சநல்லூர் (1) இதயக்கோவில் (1) எபோலா தீநுண்ம நோய் (1) கல்வராயன் மலைகள் (1) கல்வி சாதனையாளர் பட்டயம் (1) குடுவை ஆறு (1) சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக சபா (1) சிவராந்தகம் (1) சுழல் காற்று (1) தமிழர் உணவகம் (1) நுரையீரல் நோய் (1) பயிர்களை பராமரிப்பது எப்படி? (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)